சைவத் திருத்தலங்கள் 274 – திருவல்லம்

·   மூலவர் – சுயம்புத் திருமேனி,; சதுரபீட ஆவுடையார்.
·   மூலவர் கருவறை அகழி அமைப்புடையது; கருவறைச் சுவர்கள் நிறைந்த கல்வெட்டுக்கள்
·   இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு, ‘நீ, வா’ என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் நதியின் பெயர்  ‘நீ வா ‘ நதி. தற்போதைய பெயர்  ‘பொன்னை’ ஆறு
·   பாம்புப் புற்றுக்குப் பசு நாள்தோறும் பாலைச் சொரிந்து வழிபட புற்று கரைந்து சிவலிங்கம் தோன்றியது என்றும் ஒரு நம்பிக்கை
·   மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள்
·   இறைவனுக்கு கஞ்சன் மலையில் இருந்து அபிஷேக நீர் கொண்டு வரும் அர்ச்சகரை தொல்லை செய்ததற்காக  கஞ்சனை நந்தி எப்பெருமான் பாகங்களாக கிழித்தல்
·   அதன் பொருட்டு அவன் மீண்டும் வராமல் இருக்க வாசல் நோக்கிய நந்தி
·   உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை ( ‘தீக்காலி அம்பாள்’ (ஜடாகலாபாம்பாள்)), சாந்தப்படுத்தியது ஆதி சங்கரர்.
·   விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து அற்புத மாங்கனியை இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது இத்தலம். தல வினாயகர் ‘கனி வாங்கிய வினாயகர்’ கையில் மாங்கனியுடன்
·   இறைவனருளால்  காஞ்சனகிரியில்(கஞ்சன் மலை) அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின
·   வலது துவாரபாலகர் அழகிய புன்னகையுடன் கூடிய திருமுகம்
·   இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு
·   சனகாதி முனிவர்களில் ஒருவரான சனகரின் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்
·   ஒளவையார் நெல்லிக்கனியைப்  பெற்ற தலம்
·   சிவானந்த மௌனசுவாமிகள் தலம்

தலம்
திருவல்லம்
பிற பெயர்கள்
திருவலம், வில்வவனம்,வில்வாரண்யம், தீக்காலி வல்லம்
இறைவன்
வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்.
இறைவி
தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை.
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
நீவாநதி, கௌரி தீர்த்தம்
விழாக்கள்
பிரம்மோற்சவம்
மாவட்டம்
வேலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு வில்வ நாதேஸ்வரர் திருக்கோவில்
திருவலம் அஞ்சல்
வழி இராணிப்பேட்டை
காட்பாடி வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN – 632515
சிவாச்சாரியார் உமாபதி – 9894922166, 0416 – 2236088, சிவன் 9245446956
வழிபட்டவர்கள்
கௌரி, மஹாவிஷ்ணு, சனகமுனிவர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
சென்னை – காட்பாடி ரயில் பாதையில் உள்ள திருவல்லம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி.
ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை வழியாக காட்பாடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 242 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது  10 வது தலம்.
வில்வநாதீஸ்வரர்வல்லாம்பிகைபுகைப்படம் : தினமலர்

பாடியவர்                திருஞானசம்பந்தர்            
திருமுறை               1      
பதிக எண்                113  
திருமுறை எண்          8     
பாடல்
 
இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.
பொருள்
 
கையிலை மலையை இகழ்ந்து பேசி அதை எடுத்து அப்புறப்படுத்தலின் பொருட்டு முயன்ற இராவணனை அடக்கிய திருவடியை உடையவனும், திருவடியை உண்மை பொருளாக உடைய அன்பர்கள் தேடி வருந்தும் அவர்கள் உள்ளத்தில் திகழ்பவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலம் திருவல்லமாகும்.
கருத்து
அடந்த திருவடி –  மிகப்பெரிய திருவடி
பாடியவர்                திருஞானசம்பந்தர்            
திருமுறை               1      
பதிக எண்                113  
திருமுறை எண்          9     
பாடல்
பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவ னருமறை யங்கமானான்
கரியவ னான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் வளநகர் திருவல்லமே.
பொருள்
பெரியவனும்(எல்லாவற்றிலும், எல்லாரிலும்), அறிவில் சிறந்தவர்களால் சிந்தித்து அறிய இயலாதவனும், அரிய வேதங்கள் மற்றும் அதன் அங்கங்களும் ஆனவனும், கரிய நிறமுடைய திருமால் மற்றும் பிரம்மா ஆகியவர்களால் காணப்படா முடியாதவனும், அன்பில் சிறந்தவர்களால் காணக்கூடியவனும் ஆகிய சிவன் உறையும் நகர் திருவல்லமாகும்
கருத்து

தெரியவன்தெரியநிற்பவன். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு தெரிபவன்.
 
இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.
 
 
 

சமூக ஊடகங்கள்