சைவத் திருத்தலங்கள் 274 – திருமாகறல்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருமாகறலீஸ்வரர்
   இறைவன் நவபாஷாணத்தால் ஆன‌ சுயம்பு மூர்த்தி
   கஜ பிருஷ்ட  விமான அமைப்பு
   முருகனும், தெய்வயானையும் வெள்ளையானையில் அமர்ந்து மகாவிஷ்ணுவுக்கு காட்சி
   திருஞானசம்பந்தர் வினை தீர்க்கும் பதிகம் பாடிய தலம்
   இறைவன் மாகறலீஸ்வரர் உடும்பின் வால் போன்ற காட்சி.
   பிரம்மா தலம் எல்லையில் பலா மரம் தோற்றுவித்தது. இராஜேந்திர சோழன் அப்பழங்களை தினமும் சிதம்பரம் நடராஜருக்கு நிவேதனம் செய்தது. அந்தணன் மகன் அதனை வெட்டியது. இராஜேந்திர சோழன் அதற்காக நாடு கடத்தியது. உறுதி செய்து திரும்பும் போது பொன்னிற உடும்பைக் கண்டது. அதனை வெட்ட முயன்று மயக்கம் அடைந்த தருணம் இறைவன் வெளிப்பட்டு ஆலயம் எழுப்ப உத்தரவிட்டது.
   பைரவர்  – அர்த்தநாரி பைரவர் வடிவம்
 
தலம்
திருமாகறல்
பிற பெயர்கள்
அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர், நிலையிட்ட நாதர், தடுத்தாட்கொண்டவர்
இறைவன்
திருமாகறலீஸ்வரர்
இறைவி
திரிபுவனநாயகி
தல விருட்சம்
எலுமிச்சை
தீர்த்தம்
அக்னி
விழாக்கள்
மாசி மாதம்  – பிரம்மோற்ஸவம்.
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல் -631 603, காஞ்சிபுரம் மாவட்டம்.
 +91- 044-27240294
வழிபட்டவர்கள்
பிரம்மா , மகாவிஷ்ணு, மாகறன், மலையன் என்னும் அசுரர்கள்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 239 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   7 வது தலம்.
திருமாகறலீஸ்வரர்
 


திரிபுவனநாயகி
பாடியவர்          திருஞான சம்மந்தர்          
திருமுறை         3            
பதிக எண்         72         
திருமுறை எண்    9           
பாடல்

தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே

பொருள்
தூய்மையான  தாமரை மலர்கள், கழு மலர்கள், நெய்தல் மலர்கள், குவளை மலர்கள் போன்ற மலர்கள் மலர்ந்திருக்கின்றன. அதில் இருக்கும் தேனை பருகுவதற்காக வரிகளை உடைய வண்டுகள் பாடி வருகின்றன. இத்தகைய திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருக்கிறான். அவன் தனது கால் பெருவிரல் ஊன்றி இராவணின் வலிமையை அழித்தவன்.இவ்வாறாக வீற்றிருக்கும் பெருமானின் புகழை பாடுவதால் வினைகள் யாவும் நீங்கும் என்பது முடிவானது.
கருத்து

சாய – வலி குறையும்படி.
பாடியவர்          திருஞான சம்மந்தர்          
திருமுறை         3            
பதிக எண்         72         
திருமுறை எண்    10           
பாடல்
காலினல பைங்கழல்க ணீண்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே
பொருள்
சிவன், பைம் பொன்னால ஆன வீரக் கழல்களை அணிந்தவாறும், நீண்ட சடை முடியும் உள்ளவனாக விருப்பமுடன் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்ட திருமாலும், பிரம்மாவும் அறியாதவாறு நெருப்பு பிழம்பாகி இத்தலத்தில் வீற்றிருக்கிறான்.நாலிடத்தில் எரிகின்ற நெருப்பை கொண்டும், தோலை உரித்து மாணிக்கத்தை கக்கும் பாம்பை அணிந்தும், அசைந்து நடக்கும் இடபத்தை வாகனமாக உடைப அந்த சிவபெருமானின் அடியார்களை வினைகள் வந்து அடையாது.
 
புகைப்படம் : இணையம்,தினமலர்
 

சமூக ஊடகங்கள்