தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருத்துறையூர்
- சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடிய போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்து கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டப் பின், “நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்” என்று அசரீரி வாக்குக்கு இணங்க, சுந்தரருக்கு சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து தவநெறி உபதேசம் செய்த தலம்
- சந்தானக் குரவர்களில் ஒருவரான அருணந்திசிவாச்சாரியார் முக்தித் தலம்). (சமாதிக்கோயில் கோயிலுக்கு நேரெதிரில்). (புரட்டாசி மாத பூர நட்சத்திரம் – அருணந்திசிவாச்சாரியார் குருபூஜை)
- சுந்தரரை சிவனார் கிழவனார் வடிவில் தோன்றி ஆட்கொண்ட இடம் கிழப்பாக்கம். இத்தலத்திற்கு அருகாமையில்.
- சிவன், சுந்தரருக்கு திருவடி சூட்டி குருவடிவுடன் எழுந்தருளி அருமறைகளை உபதேசித்த தலம்.
- சித்திரைமாத முதல் வாரம் சூரிய வழிபாடு
- அம்பாள் சந்நிதி எதிரில் உள்ள தல மரத்தின் அருகில் அகத்தியர் வழிபட்ட லிங்கத்திருமேனி.
- அஷ்டபுஜ மகாகாளியம்மன் திருக்கோயில் – மாமன்னர் விக்ரமாதித்தன் மற்றும் மகாகவி காளிதாசர் ஆகியோருக்கு அருள்புரிந்த அம்மன் அமையப்பெற்றத் தலம்
- சிற்ப சிறப்புகள்
- உற்சவத்திருமேனிகளுள் சாட்டை பிடித்த நிலையில் காட்சி தரும் குதிரைச்சொக்கர் வடிவம்
- கருவறை முன்மண்டப தூணில் சுந்தரர் ஓடத்தில் இத்தலம் வந்தடைந்த வரலாறு சிற்பம்
- தட்சிணாமூர்த்தி சந்நிதிக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு காட்சி தந்த சிற்பம்
| தலம் | திருத்துறையூர் |
| பிற பெயர்கள் | திருத்தளூர் |
| இறைவன் | சிஷ்டகுருநாதேஸ்வரர்,பசுபதீஸ்வரர், தவநெறியப்பர் |
| இறைவி | சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி |
| தல விருட்சம் | கொன்றை மரம் |
| தீர்த்தம் | சூரிய தீர்த்தம் |
| விழாக்கள் | வைகாசி விசாகம், மாசிமகம், பங்குனி உத்திரம், திருவாதிரை, நவராத்திரி, மகாசிவராத்திரி, கார்த்திகை தீபம், கந்தசஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம் |
| மாவட்டம் | கடலூர் |
| திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சிஷ்டகுருநாதர் திருக்கோவில் திருத்துறையூர் அஞ்சல், பண்ருட்டி வட்டம் கடலூர் மாவட்டம். 607205 04142-248498, 94448-07393 |
| வழிபட்டவர்கள் | நாரதர், வசிஷ்டர், அகத்தியர், சூரியன், ராமர், சீதை, திருமால், பிரம்மன், பீமன் |
| பாடியவர்கள் | சுந்தரர், அருணகிரிநாதர் |
| நிர்வாகம் | |
| இருப்பிடம் | பண்ருட்டியில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவு |
| இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 205 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 15 வது தலம். |
பாடியவர் சுந்தரர்
திருமுறை ஏழு
பதிக எண் 13
திருமுறை எண் 2
பாடல்
மத்தம்மத யானையின் வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப் பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே
பொருள்
மயக்கங்கொண்ட மதயானைகளின் தந்தங்களைத் தள்ளிக்கொண்டுவந்தும், அழகிய முத்துக்களைக் கரையில் எறிவதும் ஆகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ளதும், அடியவர் பலகாலமும் வந்து தொழுது வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே! உன்னிடத்தில் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை ஏழு
பதிக எண் 13
திருமுறை எண் 6
பாடல்
மட்டார்மலர்க் கொன்றையும் வன்னியுஞ் சாடி
மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
கொட்டாட்டொடு பாட்டொலி ஓவாத் துறையூர்ச்
சிட்டாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே.
பொருள்
தேன் நிறைந்த மலர்களை உடைய கொன்றை மரம், வன்னி மரம் இவைகளை முறித்து, அவற்றின் அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரையில், வாத்திய முழக்கமும், ஆடலும், பாடலும் நீங்காது விளங்குகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள மேலானவனே, உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
![]()