சைவத் திருத்தலங்கள் 274 – திருகச்சிநெறிக்காரைக்காடு

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருகச்சிநெறிக்காரைக்காடு – காஞ்சிபுரம்
பஞ்சபூத தலங்களில் – பிருத்வி நிலம்
  7 சீடர்களுடன் தட்சிணா மூர்த்தி
  சுவாமி சற்றே சிவந்த நிறம்
  நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு நோக்கி
  உடல் முழுவதும் கண் கொண்ட இந்திரனின் சாபம் விலகிய முக்தி அடைந்த தலம்
  ஆலயம் இருக்கும் பகுதி காரைச் செடி காடாக இருந்ததால் காரைக்காடு
 
 
 
 
 
தலம்
திருகச்சிநெறிக்காரைக்காடு
பிற பெயர்கள்
திருக்காலிமேடு
இறைவன்
சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர், சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.
இறைவி
பிரமராம்பிகை, காரார்குழலி
தல விருட்சம்
காரைச்செடி
தீர்த்தம்
இந்திர, சத்யவிரத தீர்த்தம்
விழாக்கள்
மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, அன்னாபிஷேகம்.
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 1 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு சத்யநாதசுவாமி திருக்கோயில்,
காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2723 2327, 2722 1664.
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 11 பதிகங்கள்,
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 237 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   5 வது தலம்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மி
சத்யநாதர்
 
 

பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    65
திருமுறை எண்               8
பாடல்

ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்குஞ் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும்
நீள்மறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே
பொருள்
ஏழு கடல்களால் சூழப்பட்ட இலங்கை அரசனான இராவணனை, அழகிய கயிலையின் கீழ் தனது பெருவிரலால் ஊன்றி அழித்த பெருமை உடையவர். அவர் எல்லா உயிருக்கும் நன்மை செய்பவர். அப்பெருமான் ஆழ்ந்த அகழியும், அதை சுற்றி இருக்கும் வயல்களும், மதில்களும், நீண்ட அழகிய வீதிகளை உடைய திருக்கச்சிநெறிக் காட்டில் உறைகின்றார்.
கருத்து
உவர்நீர் (உப்புத் தண்ணீர்க் கடல்), நன்னீர் (நல்ல தண்ணி), பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தேன் கடல் என்று ஏழு வகைக் கடல்கள் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் அந்த தேசம் செழுமையாக இருப்பதையே குறிக்கின்றன.
 
பரா பட்டாரிகையான அம்பிகை உறையும் மணித்வீபம் மத்தியில்
என்பர் சாக்தர்.
பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    65
திருமுறை எண்               9
பாடல்
 
ஊண்டானும் ஒலிகடல்நஞ் சுடைதலையிற் பலிகொள்வர் 
மாண்டார்தம் எலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
பூண்டாரும் ஓரிருவ ரறியாமைப் பொங்கெரியாய் 
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.           
பொருள்
சிவபெருமான், மிகுந்த சப்தங்களுடன் தோன்றிய ஆலகால விஷத்தை உண்டவர். பிரமனின் தலையினை கொய்து, அதனை கபாலமாக ஏந்தியவர்; இறந்தவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்தவர். வரிகளை உடைய பாம்பினை அணிந்தவர்; திருமால், ப்ரம்மா இருவரும் அறிய முடியாதவாறு நீண்ட ஒளிப் பிழம்பாகி நின்றவர். அத்தகைய சிவபெருமான், கலிக்கச்சி நெடுங்காட்டில் உறைகிறார்.
 
புகைப்படம் : தினமலர்
 

சமூக ஊடகங்கள்