குருவும் தற்போதமும் – 5

புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

வசதிக்காக

குரு நாதர் (தமிழக அரசின் மிகப் பெரிய பதவியில் இருப்பவர்)
குரு நாதரின் குரு – ஆதி மூர்த்தி

பல நாட்களுக்கு முன்

ஒரு முறை எம் குரு நாதரும், ஆதி மூர்த்தியும் காசியில் கோயிலுக்கு சென்றார்கள்.

ஆதி மூர்த்தியின் உருவம் கண்டு எப்பொழுதும் இடையன் ஒருவன் அவரை எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருப்பான். இடையனின் மனைவி மிகுந்த பக்தி கொண்டவள்.

சில நாட்களுக்கு முன்

ஆதி மூர்த்தி எம் குரு நாதரை அழைத்து ‘போகலாமா’
..
அதே தான் எப்பொழுதும் நம்மைத் திட்டிக் கொண்டே இருப்பானே, அந்தத் தெரு வழியாக செல்ல வேண்டும்.

வழக்கம்போல் அவன் திட்டிக் கொண்டே இருந்தான்.

அந்தத் தெருவழியே கடந்து சென்ற குரு நாதரும், ஆதி மூர்த்தியும் திரும்பி வந்தார்கள்.

ஆதி மூர்த்தி : உன் வீட்டில் பசு கன்று ஈன இருக்கிறதா?
இடையன் பதில் சொல்ல வில்லை.
ஆதி மூர்த்தி : உன் பசு ஒரு கன்று ஈன இருக்கிறது. அது வெண்மை நிறம் கொண்டதாக இருக்கும். அதன் பிறப்பிற்குப் பின் உன் நிலை மாறும்.

சில வருடம் சென்றப்பின் குரு நாதரும் ஆதி மூர்த்தியும் அந்த வழியே சென்றபோது வீடு செல்வம் படைத்தவர்களின் வீடாக மாறி இருந்தது.

இடையன் ஆதி மூர்த்தியை வந்து வணங்கினான்.

ஆதி மூர்த்தி : இனியாவது சந்நியாசிகளை வைது கர்மாக்களை ஏற்றிக் கொள்ளாதே என்று உபதேசித்து அவ்விடம் அகன்றார்கள்.
(குரு நாதர் உத்தவிற்குப்பின் எழுதப்பட்டது.)

சமூக ஊடகங்கள்

குருவும் தற்போதமும் – 4


புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

ஒருமுறை குருநாதர் மாவட்ட அளவில் ஆன மருத்துவ காப்பகத்திற்கு சென்று இருக்கிறார்.

ஒரு பெண் மிகவும் துயரத்தோடு இருந்திருக்கிறார்.
குரு நாதர் : என்ன விஷயம்,இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்?
பெண் : சொன்னால் மட்டுமா தீர்ந்துவிடப் போகிறது?

குரு நாதர் : பரவாயில்லை சொல்லுங்கள்
பெண் : எதிர் வீட்டில் இருப்பவர்கள் இயலாதவர்கள். அங்கு இருப்பவருக்கு உடம்பு சரியில்லை, இரண்டு மாத்திரைகள் இங்கு எடுத்துக் கொடுத்தேன். இது தவறா? நீங்கள் வேண்டுமானால் CCTV காமிராவினை வைத்து சரிபாருங்கள்.

குரு நாதரும் பார்த்து உறுதி செய்து கொண்டார்கள்.

குரு நாதர் : நான் வேண்டுமானால் உங்கள் உயர் அதிகாரியிடம் பேசிப் பார்க்கவா?
பெண் : இல்லை, அவர் ஒத்துக் கொள்ளமாட்டார்,ஏற்கனவே நான் பேசிவிட்டேன், பயன் இல்லை.
குரு நாதர் : நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.

குருநாதர் மருத்துவரிடம் : ஏன் இப்படி செய்கிறீர்கள். இது நல்லது அல்லவே.
மருத்துவர் : இதை கேட்க நீங்கள் யார், உங்கள் வேலையை பாருங்கள்
குருநாதர் : உங்கள் மேல் அதிகாரியிடம் உரைப்பேன்.
மருத்துவர் : நீங்கள் எவரிடம் உரைத்தாலும் அது பற்றி கவலை இல்லை.
குருநாதர் : ஒருவினாடிக்குப் பிறகு (ஒரு பெண் பெயரினை குறிப்பிட்டு) அந்த பெண்ணிற்காகவா இத்தனை சேர்த்து வைக்கிறீர்கள். இது உங்கள் மனைவிக்கு தெரியுமா?
அத்தனை குளிரூட்டப்பட்ட அறையிலும் மருத்துவருக்கு வியர்த்துவிட்டது.

மருத்துவர் : உங்களுக்கு எப்படி தெரியும்?
குருநாதர் : புன்னகையோடு அந்த இடம் விட்டு அகன்றார். அந்த புன்னகைக்குள் அவர் குரு நாதரும் இணைந்திருந்தார்.

அடியேன்: இதை மற்றவர்களுக்கு பகிரலாமா?

குரு நாதர் : பெண்கள் சக்தியின் ரூபம். அன்னை பரமேஸ்வரியின் ஸ்வரூபங்களை நாம் வணங்கத்தக்கவர்களாவதால் குறை காண்பது அவலம் என்பதால் இதுபோன்ற பிறப்புகள் எடுத்து அவர்கள் துன்பமுறாவண்ணம் ப்ரார்த்தனை செய்து கொள்வது நன்று அல்லவா? நல்லவை பிறருக்கு பயன் தருபவைகளாக இருந்தால் பகிரலாம்.

சமூக ஊடகங்கள்

குருவும் தற்போதமும் – 3


புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

மாவட்ட அளவில் பெரிய அதிகாரியாக இருப்பவர் குரு நாதர். அவர் மாவட்ட அளவில் இருக்கும் இன்னொரு பெரிய அதிகாரியிடம் (சிவம் என்று கொள்வோம்) கீழ் இருந்து வேலை பார்ப்பவர்.

சிவத்திடம் இருவர் வேலை பார்த்து வந்தார்கள். ஒருவர் வெள்ளையன், மற்றொருவர் கருப்பன். தூய மனம் உடையவர் என்பதால் வெள்ளையன், லஞ்சம் பெற்று வாழ்வினைக் கொண்டதால் கருப்பன்.

குரு நாதர் : என்னப்பா, எப்டி இருக்க?
கருப்பன் : நல்லா இருக்கேன் சார்.
குரு நாதர் : நல்லா தூங்குகிறாயா?
கருப்பன் : நல்லா தூங்குகிறேன் சார்.

இரண்டு வாரம் கழித்து கருப்பன் வேலைக்கு வரவில்லை, விசாரித்த போது தனது மகளுக்கு புற்று நோய் எனவும், அதனால் வரவில்லை எனவும் உரைக்கப்பட்டது.

நீண்ட நாள் சுழற்சிக்குப் பிறகு எங்கேங்கோ சென்றும் பதில் / விடை கிடைக்காமல் கருப்பன் மீண்டும் குரு நாதர் இடத்திலே வந்தார்.

கருப்பன் : சார், நீங்க அன்னைக்கு கேட்டப்ப புரியல சார், இப்ப புரியுது, என் குழந்தையக் காப்பாத்துங்க சார்.
குரு நாதர் : நான் என்னப்பா செய்யமுடியும், நான் என்ன மந்திரவாதியா இல்லை வைத்தியரா?
கருப்பன் : இல்லை சார், நீங்கள் நினைத்தால் முடியும்
குரு நாதர் : ….

சில வாரங்கள் சென்றப்பின் கருப்பன் மீண்டும் பழங்களுடன் வந்து குரு நாதரை சந்தித்து ‘என் மகளைக் காக்க வேண்டும்’ என்று முறையிட்டார்.

குரு நாதர் : நான் சொல்வதைக் கேட்பாயா?
கருப்பன் : நிச்சயமாக செய்கிறேன்.
குரு நாதர் : நாள் ஒன்று சொல்லி அன்றைக்கு என்னை வந்து பார்

அவர் சென்ற பிறகு பழங்களை பசுவிற்கு கொடுத்து விட்டார்.

குறிப்பிட்ட நாள் :
குரு நாதர் : நல்லா கேட்டுக்கோ,… இந்த பரிகாரங்களை குறைந்தது ஒருவடத்திற்கு செய்து வா, சிவம் உன் மேல் கருணை வைத்தால் இது விலகும்.
கருப்பன் : சரி, சார்.

மீண்டும் 3 மாதம் கழித்து வந்தார்

கருப்பன் : சார், எனது மகளுக்கு நேற்று சோதனை செய்து பார்த்தோம், 70% வரை சரியாகி விட்டதாக டாக்டர் எல்லாம் கூறி இருக்கிறார்கள். உங்களுக்குத் தான் நன்றி சார்
குரு நாதர் : நான் என்னப்பா செஞ்சேன், எல்லாம் ஈசன் செயல்.

கடைசி தகவலின் படி முறையற்ற முறையில் ஈட்டிய பணம் என்பதால் பல லகரங்களை மிகப் பெரிய பழமையான ஆஸ்ரமத்திற்கும், மற்றொரு மிகப்பெரிய லகரங்களை கண்கள் அற்ற அனாதை ஆஸ்ரமத்திற்கும் கொடுத்து விட்டதாகவும், தற்போது நிம்மதியாக இருப்பதாகவும் உரைத்து இருக்கிறார்.

சத்தியத்தின் வழி நிற்கும் குரு நாதருக்கும், அவர் பகிர்ந்த கருத்துகளுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

சமூக ஊடகங்கள்

குருவும் தற்போதமும் – 2

புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

குரு நாதர், மூலகுருநாதர் இவர்கள் புகைப்படம் வெளிட அனுமதி இல்லாததால் அவர்கள் புகைப்படம் வெளியிடப்படவில்லை.

எனது குருநாதர் உரைத்ததை இங்கு உரைக்கிறேன்.

ஒரு முறை குருநாதர் திருபரங்குன்றத்தின் உச்சியில் இருந்த ரங்கூன் சுவாமிகளை சந்திக்க குருநாதர் சென்று இருந்தார். (அப்பொழுது குரு நாதருக்கு வயது தோராயமாக 22) சுவாமிகளுக்கும் குரு நாதருக்கும் ஆன்மீக ரீதியில் நெருங்கிய தொடர்பு உண்டு. ரங்கூன் சுவாமிகள் பெரும்பாலும் பேசமாட்டார், சில நேரங்களில் மட்டும் ஒன்று இரண்டு வார்த்தைகள் பேசுவார்

ரங்கூன் சுவாமிகள் : என்னடா செய்யிற தம்பி ?(குழந்தையின் வேறு பெயர், இன்றும் தன் குழந்தைகளை தம்பி என்று அழைக்கும் இல்லங்கள் உண்டு)
குருநாதர் : சொல்லுங்க ஐயா.

ரங்கூன் சுவாமிகள் : மலையில் இருந்து கீழ போய் சூடாக டீ வாங்கிட்டு வாடா.
குருநாதர் : சரிங்க ஐயா.

குரு நாதர் வந்த போது சுவாமிகள் நிட்டையில் ஆழ்ந்து இருந்தார். கூட்பிடலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.கண்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் உடனே கை நீட்டப்பட்டது. கைகளில் தொடமுடியா நிலையில் சூடாக இருந்த டீயினை வாங்கி கணிக்க இயலா நேரத்தில் குடித்துவிட்டார் சுவாமிகள்.

மற்றொருமுறை

ரங்கூன் சுவாமிகள் : மலையில் இருந்து கீழ போய் சூடாக டீ வாங்கிட்டு வாடா
குருநாதர் : சரிங்க ஐயா.

குரு நாதர் டீ வாங்கிகொண்டு வந்த போது சுவாமிகளுக்கு இடது புறத்தில் ஒரு குரங்கும், வலதுபுறத்தில் ஒரு குரங்கும் எதிரே ஒரு நாகம் ஒன்றும் நிட்டையில் அமர்ந்து இருந்தது.

குரு நாதருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அடுத்த வினாடி சுவாமிகளுக்கு இடது புறத்தில் இருந்த குரங்கு வலது புறத்தில் இருந்த குரங்குடன் சேர்ந்து நின்று கொண்டு கண்களை மூடி தவத்திற்கு சென்றுவிட்டது.

குரங்குகள் இத்தனை அழகாக தவம் செய்கின்றனவே, நாமும் செய்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி சுவாமிகளுக்கு இடது புறத்தில் இருக்கும் காலியாக இருக்கும் இடத்தில் சென்று அமர்ந்தார். சுவாமிகளின் அருளாற்றால் குரு நாதரை வசீகரம் செய்து விட்டது.

இரவு 7 மணி
ரங்கூன் சுவாமிகள் : டேய், டேய் தம்பி
குருநாதர் :
ரங்கூன் சுவாமிகள் : டேய், டேய் தம்பி எழுந்திரிடா
குருநாதர் : சுவாமி

ரங்கூன் சுவாமிகள் : ஏண்டா, நான் தவம் செய்யும் போது இடைஞ்சல் இல்லாம இருக்கணும் அப்டீன்னு ஒன்னைய காவலுக்கு வச்சா, நீ என்னை காவல் காக்க வச்சிட்டியே.

இருவரும் சிரித்துக் கொண்டே மலையில் இருந்து இறங்கி வந்தார்கள்.

சமூக ஊடகங்கள்

குருவும் தற்போதமும் – 1

புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

குரு நாதர், மூலகுருநாதர் இவர்கள் புகைப்படம் வெளிட அனுமதி இல்லாததால் அவர்கள் புகைப்படம் வெளியிடப்படவில்லை.

எனது குருநாதர் உரைத்ததை இங்கு உரைக்கிறேன்
வசதிக்காக

குருநாதர் : என் குரு நாதர்
அவர் குருநாதர் : மூலகுருநாதர்

ஒரு நாள் காசிக்கரையில் குருநாதரும் மூலகுரு நாதரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அவ்வழியே ஒரு வண்ணான், பிறரது அழுக்குத்துணிகளை துவைத்து வெண்மையாக அல்லது தூயதாக மாற்றிக் கொடுப்பவன் தனது நம்பிக்கைக்குரிய கழுதையுடன் ஓர் நாள் ஆற்றிற்கு சென்றான்.

அங்கே நீர் குறைவாக இருந்ததால் வேறோர் பகுதிக்கு செல்லும் வழியில் மரத்தினடியில் மூலகுரு நாதர் அமர்ந்திருந்தார் அவரிடம் பலர் ஆசிகள் வாங்கிச் செல்வதைக் கண்டு தானும் சென்று வணங்கினான். அவரோ எழுந்து கழுதையை வணங்கினார்.

மூலகுரு நாதர் : இதில் இருந்து என்ன தெரிகிறது?

குருநாதர் : ஒன்றும் தெரியவில்லை.

மூலகுரு நாதர் : அந்த கழுதை யான் என்று தெரியவில்லையா?

குருநாதர் : பதறிப்போய், சுவாமி, என்ன இந்த விளையாட்டு?

மூலகுரு நாதர் : இல்லை, உண்மையைத் தான் சொல்கிறேன்.

குருநாதர் :…

மூலகுரு நாதர் : இந்த கழுதை என்னச் செய்கிறது?

குருநாதர் : அழுக்குத் துணிகளை எடுத்துச் சென்று அவைகளை துவைத்தப்பின் வெளித்து புதியதாக எடுத்து வருகிறது.

மூலகுரு நாதர் : மனிதர்கள் தூயதாக துவைத்து வழங்கும் தனது ஆடைகளை மறுபடி அழுக்காக மாற்றி விடுகின்றனர். அவர்களின் ஆணவம், கன்மம், மாயை எனும் அழுக்குகளால் கலங்கமடைவதை இறைவன் குரு எனும் வண்ணானாக புதுப்பித்துக் கொடுக்கிறான். இந்தக் கழுதையோ அவர்களின் தூய்மையற்ற மும்மலங்கலை சுமக்கும் மஹா குருவாக மௌனமாக ஆற்றுக்கும் வீட்டுக்குமாக சென்று வருவதாக உணர்ந்து கழுதையை வணங்கினேன்.

சமூக ஊடகங்கள்