
பாடல்
எங்கும் நிறைத்துநின்ற ஏகபர வத்துவினை
அங்கைநெல் லிக்கனிபோல் யானறிந்தேன் மாங்குயிலே
அருவாய் உருவாகி அண்டர் அண்டந்தானாய்க்
கருவாகி வந்த கணக்கறிவாய் மாங்குயிலே
அருளிய சித்தர் : சதோக நாதர் என்ற யோகச் சித்தர்
பதவுரை
ஒரே பொருளாகி, இங்கு, அங்கு என்று இல்லாதவாறு எங்கும் நிறைந்து நின்றவனை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யான் அறிந்தேன்; அருவம் உடையதாகவும், உருவம் உடையாதாகவும் அண்டர் அண்டங்கள் எல்லாவற்றுக்கும் மூலக்காரண கருவாகி வந்த கணக்கினை அறிவாய்.