உமை
மிகப் புண்ணியமான தேசமும் காலமும் எவை என்பதை உரைக்கவேண்டும்?
மகேஸ்வரர்
- தேவர்களாலும், ரிஷிகளாலும் அடையப்பட்டதும், எல்லோராலும் பூஜிக்கப்பட்டதுமாகிய குருக்ஷேத்திரத்தினை சுற்றியுள்ள சிறந்தமலைகள் சூழ்ந்துள்ளதும், புண்ணிய தீர்த்தங்களும் தானம் செய்ய சிறப்பான இடங்கள்.
- வசந்தகாலம், புண்ணியமான மாசம், சுக்லபக்ஷம், பூர்ணிமை, சிராத்தமும் தேவகாரியமும் செய்யதகக்க. புண்ணியதினம், சந்திர சூரிய கிரஹணம் ஆகியவை மிகச்சிறந்த புண்ணியகாலங்கள் என்று அறிவாயாக.
- மேலே குறிக்கப்பட்ட காலங்களில் செய்யப்படும் தானம் பெரிய பலன் கொடுப்பதாகும். கொடுப்பவன், கொடுக்கப்படும் பொருள், வாங்குகிறவன், கொடுக்கும்வகை, இடம், காலம் இவைகள் தானத் தின் சிறப்புக்கள் ஆகும். இவையெல்லாம் சேர்ந்து செய்யப்படும் தானம் பெரிதாகும். இந்த ஆறு குணங்களும் சேர்ந்த தானம் எண்ணுவதற்கு சுலபமாயிருந்தாலும் மிகப் பெரிய பாபங்களைப்போக்கும்.
- இந்தக் குணங்களில்லாத தானம் மிகப்பெரியதாயிருந்தாலும் பலனில்லாமல் போய் விடும்.
உமை
இந்த ஆறு குணங்களுடன் சேர்த்து கொடுக்கப்பட்ட பெருந்தானமும் எப்பொழுது பலன்படாமல் போகும்?
மகேஸ்வரர்
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டவாறு தர்மத்தைச் செய்தாலும், பின் அதற்காகத் துன்பப்பட்டாலும், தான் செய்ததை மற்றவர்கள் முன்னிலையில் வீணாகச் சபையில் புகழ்ந்து பேசினாலும், மறுஜன்மத்தில் அதன் பலன் வரவேண்டுமென்று மனத்தில் விருப்பங்கொண்டாலும், எப்போதும் பலனை விரும்பியே தர்மங்களைச் செய்தாலும் அந்தத் தர்மமும் தானமும் பலனற்றவை ஆகிவிடும். ஆகவே புண்ணியத்தைக் கருதுகின்றவன் இந்தக் குற்றங்களை விடவேண்டும்; இதுதான் நெடுங்காலமாகப் பெரியோர்களால் எக்காலத்திலும் கை கொள்ளப்படும் ஒழுக்கமென்றும், மற்றவர்களை காப்பாற்றுவது கிரகஸ்தர்களின் கடமையென்றும், எப்போதும் மனத்தில் உறுதிகொண்டு தானம் செய்யவேண்டும்.
இப்படி இடைவிடாமல் செய்யப்படும் புண்யம்தான் பெரிதாகும்.
உமை
மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்கவிரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.
தொடரும்..