‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – ஒண்புழுக்கல்
பொருள்
- நெய்யால் மறைக்கப்பட்ட சோறு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.
தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
பூம்பாவாய்! மைபூசியும் ஒளிநிறைந்த கண்களையும் உடைய மகளிர் வாழும் சிறந்தத் தலமான மயிலாப்பூரில், கைகளில் திருநீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமான் உறையும் கபாலீச்சரம் என்னும் கோயிலில், அணிகலன் அணிந்துள்ள மகளிர், நெய் வழிந்தும் சிறப்பானதும் ஆன பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ?
விளக்க உரை
- வறியர் முதலானவர்க்கு அமுது அளிக்கும் தைப்பூசவிழாச் சிறப்பு பற்றியது இப்பாடல்