ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – விள்ளுதல்
பொருள்
- மலர்தல்
- உடைதல்
- வெடித்தல்
- பிளத்தல்
- பகைத்தல்
- மாறுபடுதல்
- தெளிவாதல்
- நீங்குதல்
- சொல்லுதல்
- வெளிப்படுத்துதல்
- வாய் முதலியன திறத்தல்
- புதிர் முதலியன விடுத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
உரிதாம் பரம்பொருளை உள்ளு – மாயம்
உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு – சிவன்
அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு
கஞ்சமலைச் சித்தர்
கருத்து உரை
முக்திக்கு உரித்தான பரம்பொருளை மனதால் நினை; மயக்கம் தரும் மாயை கொண்ட பிரபஞ்சத்தில் மயக்கத்தை விலக்கு, குருவால் உபதேசம் செய்யப்பட்ட கிடைப்பதற்கு அரிய சிவநாமத்தை தெளிவாக உச்சரி. அன்பு கொண்டு சிவன் அடியார்களுக்கு பணிவிடை செய். இவைகள் முத்திக்கான வழிமுறைகளில் சில.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
முதற்காரணத்துக்கான உவமை எது?
மண்