அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வேழம்பர்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  வேழம்பர் 

பொருள்

  • கழைக்கூத்தர்
  • விதூஷகர்
  • கேலிசெய்வோர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வருத்த வளைவே அரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
தாழும் அவர்தம் அடிக்கீழ்தான்

குமரகுருபரர்

கருத்து உரை

வளரத்துவங்குகையில் பல்லக்குத் தண்டு போல வளைத்துவிடப்பட்ட மூங்கிலானது வளர்ந்த பின்னர் மன்னர்களைத் தூக்கும் பல்லக்குத் தண்டாக உயரும். அப்படி வளையாத மூங்கிலின் கதியோ பரிதாபமாக கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு ஊர் ஊராகத் திரியும். அதுபோல இளமையில் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கல்வி கற்பவர்கள் மேல்நிலையையும், கல்லாதவர்கள் தாழ்வான நிலையையும் அடைகின்றனர்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

துணைக் காரணத்துக்கான உவமைகள் எவை?
தண்டு, சக்கரம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *