ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – மேவு
பொருள்
- மேன்மை
- தடவு
வாக்கிய பயன்பாடு
மேவு தொழில்ன்னு உலகத்திலெ எதுவும் இல்ல. கெடக்கிற வேலயப் பாக்க கத்துக்கோ. அப்புடுதேன் சொல்லிப்புட்டேன்.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே
திருமுறை 10 – திருமந்திரம் – புவனாபதிச்சக்கரம் – திருமூலர்
கருத்து உரை
முந்தைய முந்தைய பாடலில் குறிப்பிட்ட சக்கரத்தைச் சூழ்ந்த வட்டத்திற்கு வெளியில் உள்ள இதழ்களின் இடை எட்டிலும், எட்டு ‘ஹகார’ மெய்யை உகார உயிர் புணர்த்து எழுதி, அவ் இதழ்கள் எட்டிலும் பொருந்தி நிற்க, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றைப் பொறித்து, இதழ்களின் இடப்பக்கங்களில் `ஆம், க்ரோம்’ என்னும் பீஜங்களை எழுதுக.
விளக்க உரை
- பீஜங்களை எழுதும் / வரையும் முறை குறித்து
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
மறைஞான சம்பந்தர் வாழ்ந்த தலங்கள் எவை?
மருதூர், சிதம்பரம்