காற்றில் ஆடும் சருகுகள் – 15

தூரத்தில் இருக்கும் மரத்தில் அமர்ந்து காலையில் இருந்து ‘க்கூகூகூகூகூகூ’  என்று  அலைவரிசை மாறாமல்  கொண்டிருக்கும் அக்கூ குருவி(ஏன்டா, சரியாதானே பேசறேன்) சுதந்திர நாளினை முழுமையாக்கிக் கொண்டிருக்கிறது, 
**************************************************************************************************************************************
உருளைக் கிழங்கு போண்டாவிலும் உ.கிழங்கு உண்டு. மசால் தோசையிலும் உண்டு. ஆனா ஏன் சாதா தோசையை விட மசால் தோசைக்கு  ரூ.10 அதிகமா வாங்குறான். இப்படிக்கு மனைவியிடம் கடன் வாங்கி உ..கிழங்கு போண்டா சாப்பிடுபவர்களிடம் பிடுங்கி தின்று யோசிப்போர் சங்கம்.
**************************************************************************************************************************************
குழந்தைகளில் ‘ப்ளீஸ்’ என்று கண்களை சாய்த்து தலையை ஆட்டி கேட்கும் குரலில் ஆயிரம் கவிதைகள் ஒளிந்திருக்கின்றன.
**************************************************************************************************************************************
ஒரு பொண்ணு ‘wow’  ன்னு status போட்டா 72 லைக் வருது. மனசு ஒடஞ்சி feeling sad ன்னு status போட்டா 1 லைக் வருது,  இப்படிக்கு பத்து லைக் வாங்க ப்ரம ப்ரயத்தனம் செய்வோர் சங்கம்.
Google translation.
A girl ‘wow’ nnu status Bota gets like 72. Otanci heart feeling sad status nnu Bota 1 Like coming up, so you can buy ten Like those prama prayattanam Association.
**************************************************************************************************************************************
‘ஒரு கதை சொல்லுங்கள்’ என்பது மாறி ‘போதும்பா, நிறுத்துங்க,
போரடிக்காதீங்க ‘ என்னும் பொழுதுகளில் வாலிபத்தின் தொடக்கம் நிகழ்கிறது.
**************************************************************************************************************************************
சில தினங்களுக்கு முன்
கல்லூரிப் பேருந்தில் பாட்டு கேட்டுக் கொண்டே செல்கிறேன். வெளியே சிறு தூறல்களாய் மழை. காற்று என் மேனியை தழுவிச் செல்கிறது. பாடல் மாறுகிறது. ‘ எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்’. 
பாடலும் அதனோடு இசையும் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுகிறது. வாழ்வில் இன்னும் வாழவேண்டிய சந்தர்ப்பங்கள் இருப்பதை உணர்கிறேன்.
**************************************************************************************************************************************
ஏன் இந்த பெண்கள் இப்படி கொல கொலன்னு பேசிகிட்டே இருக்கிறார்கன்னு ஆண்களும், ஏன் இந்த ஆண்கள் எதுவுமே இப்படி எதுவுமே கண்டுக்காக இருக்கிறார்கள்ன்னு பெண்களும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இது அனைவரையும் பார்த்து எதுவுமே பேசாமல் வேடிக்கை பார்ப்போர் சங்கம்.
**************************************************************************************************************************************
 என்னடா நூடுல்ஸ், மைதா மாவ இடியாப்பம் மாதிரி புழிஞ்சி கொஞ்சம் மசாலா போட்டா அது நூடுல்ஸ், அதையும் பித்தளை பாத்திரத்தில் வச்சி கொடுத்தா அது ஸ்டார் ஹோட்டல். போங்கடா, போங்க. இப்படிக்கு பீடி வாங்க காசில்லாமல் பிரியாணிக்கும், நூடுல்ஸ்க்கும் ஆசைப்படுவோர் சங்கம். 
**************************************************************************************************************************************
இன்னைக்கு தேதி 14-10-14 . வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும்.
இப்படிக்கு தேதி பார்த்துக் கொண்டே தன்னையும் குழந்தையாக நினைத்து குழந்தைகள் தினம் கொண்டாட மாத சம்பளம் எதிர் பார்போர் சங்கம்.
(எங்களுக்கு வேறு கிளைகள் இல்லை)
**************************************************************************************************************************************
என் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்படது. புற மாறுதல்கள் என்னை சுடுவதில்லை.
**************************************************************************************************************************************
கல்லூரிப் பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன்.
வெளியே மழை.
‘முதல் மழை எனை நனைத்ததே’ பாடல் ஒலிக்கிறது.
சுற்றுப்புறமும், பாடலும் தனியே ஒரு தள்ளாட்டத்தில் விடுகின்றன.
நினைவுகளை விட கொடுமையான விஷயம் வேறு எதுவும் இல்லை என்றுபடுகிறது.
மனது மயங்கிக்கிடக்கிறது.
ஏங்க மணி ஆறு  ஆவுது. எழுந்திரீங்க.சீக்கிரம் காலேஜீக்கு கிளம்புங்க. அப்புறம் பஸ்சை விட்டுடுவீங்க.(யார் இது)
‘அப்பா உங்களுக்கு தெரியாதா. ஸ்கூல் மட்டும் தான் லீவு. உங்க காலேஜூக்கு லீவு இல்ல. கிளம்புங்க சீக்கிரம். நானும் அம்மாவும் நெட்ல படம் பாக்கணும்’  ( இது யாரு)
மனிதர்களின் துக்கங்களில் சந்தோஷம் கொண்டாட ஒரு கூட்டமே அலையுது அப்பா

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 14

இழப்புகள் ஏற்படுத்தும் காயங்களை விட நினைவுகள் ஏற்படுத்தும் காயம் அதிகமானது.
***************************************************************************************************************************************
வேலைக்கு செல்லத் துவங்குகையில், தாய் கோழி வேகமாக மண்ணைக் கிளறுகிறது. சிறு குஞ்சுகள் உணவை கொத்தி உண்ணத் துவங்குகின்றன. இரை தேடலை எனக்கு முன்பே யாரோ தொடங்கிவிட்டார்கள்.
***************************************************************************************************************************************
விதியின் மீது நம்பிக்கை அற்றவர்கள் திருமணம் செய்து பார்க்கவும்.
***************************************************************************************************************************************
வெளியில் மழை. வீட்டில் கொஞ்சம் நொறுக்குத் தீனி. பில்டர் காபி. நிறைய ராஜா சார் பாடல்கள். கையில் கணையாழியின் கடைசி பக்கங்கள்.
இன்னும் வாழ்வில் சுவாரசியங்கள் இருக்கத்தான் செய்கிறது
***************************************************************************************************************************************
மௌனத்தில் கழியும் நிமிடங்கள் உன்னதமானவை
***************************************************************************************************************************************
சிறகசைப்பின் முற்றுப் பெறுதலில் சூரியன் உதயம் ஆகிறது.
***************************************************************************************************************************************
என்னங்க உங்க வீட்டுக்காரர் எதுவுமே பேசமாட்டேங்கிறார்.
அது எப்பவுமே அப்படித்தான்.
சில நிமிடங்களுக்கு பின்.
அதெல்லாம் என்ன அவாட்ஸ்?
அதுவா அது காலேஜ் படிக்கிறப்போ பேச்சுப் போட்டில வாங்கின பல பரிசுகளாம். அதெல்லாம் தூக்கி போடணும். வேலயத்துப் போய் அடுக்கி வச்சி இருக்கு.
***************************************************************************************************************************************
மரிக்கும் தேகத்தில் மறையாதிருக்கும் நினைவுகள் 
***************************************************************************************************************************************
நோக்கம் பாலினை சூடாக்குவது என்றாலும் அதனை நேரிடையாக செய்யமுடிவதில்லை. அதற்கு ஒரு பாத்திரம் தேவைப்படுகிறது. பாத்திரமும் வெப்பத்தை உள் வாங்குகிறது. அது போல் ஆன்மாக்கள் அடைய வேண்டிய அனுபவ பதிவுகளை இவ்வுடல் மூலமாக வாங்குகிறது.
***************************************************************************************************************************************
கல்லறையில் கட்சிக் கொடிகள். யாருக்காக?

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – குழுவுடன் சில நாட்கள் – Team outing

குழுவுடன் சில நாட்கள் – Team outing
‘டீம் அவுட்டிங் குறித்து அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில்’ என்று மெயில் வரும்.
*******************************************************************************************************************************************
பாஸ், மெயில் பாத்திங்களா,
இல்லயே
அட போங்க பாஸ், இந்த வருஷம் டீம் அவுட்டிங் எங்கன்னு மெயில் வந்திருக்கு, பாருங்க.
*******************************************************************************************************************************************
இது டீம் சார்ந்ததாகவோ அல்லது கம்பெனியின் அனைத்து நிலை மனிதர்களும் செல்தாகவோ இருக்கக் கூடும்.
*******************************************************************************************************************************************
இது நிச்சயம் சனி இரவு 8 மணிக்கு மேல் இருக்கும் நிகழ்வுக்கே அழைப்பு விடுக்கப்படும்.
சில வகைகள் :
1. ‘பாதாள லோகம்’ போன்ற திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.
2. பக்கத்தில் இருக்கும் நாயர் கடை போன்ற இடங்களில் ‘டீ/டிப்பன்(டேய், போங்கடா, போங்கடா”)
3. இந்தவாரம் ஒரு DJ சிமுகிவி அப்படீன்னு ஒருத்தர் புரோகிராம் பண்ரார். நல்ல இசை நிகழ்ச்சி.
இது போன்ற நிகழ்ச்சிகளில் ‘வருவீர்களா/மாட்டீர்களா’ என்பது போன்ற வினாக்களோடு மெயில் வரும்.
*******************************************************************************************************************************************
இந்த டீம் அவுட்டிங் மகாபலிபுரத்துக்கு பக்கத்துல நடக்குது. நம்ம கம்பெனி புரொகிராமுக்கு மட்டும் தான் ஸ்பான்சர் செய்யுது. சாப்பாடு அவங்கவங்களே  பாத்துக்க வேண்டியதுதான்’
*******************************************************************************************************************************************
இந்த டீம் அவுட்டிங்  உளுந்தூர் பேட்டைகிட்ட இருக்கிற ஒரு வயக்காட்ல நடக்குது. அதனானல எல்லாரும் கார்ல வந்துருங்க. கார் இல்லாதவங்க கார் இருக்கறவங்களோட சேந்து வந்துடுங்க. டோல் சார்ஜ் கார்காரங்களே பாத்துக்கணும்.
*******************************************************************************************************************************************
சில நேரங்களில் குழுக்களுக்கான போட்டிகளும், தனிமனித தெறமய (க்கும்) காட்டும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும். இதில் ‘நான் ஒரு காட்டுவாசி’ போன்ற எழுத்துக்கள் கிழிக்கப்பட்டு ஒவ்வொருவரிடம் கொடுக்கப்பட்டு எந்த டீம் முதலில் கண்டுபிடிக்கிறது போன்ற விளையாட்டுக்கள் இடம்பெறும்.
தனித்திறம (!!) காட்டும் நிகழ்சியில் யேசுதாஸ் போன்று குரல் உடையவர்களை(நான் உட்பட – வேறு என்ன சொல்ல) அவர்களை பாடவைப்பது. அப்பத்தானே கந்தசாமில வரமாதிரி அவனையே அவன் கட்டையால அடிச்சிக்க முடியும்.
சில வருடங்களுக்கு ஒரு முறை தொலை தூரம் சென்று இரவு தங்கி(கூத்தடித்து என்பது எழுதப்படா விதி) மறுநாள் மாலை(ஞாயிறு இரவு) திரும்பும் நிகழ்வுகளும் உண்டு.
*******************************************************************************************************************************************
மாலை 5 மணிக்கு ஏந்தப்படும் மதுக்கோப்பைகள் மறுநாள் காலை 3 மணிவரை தொடரும் நிகழ்வுகளும் உண்டு.
*******************************************************************************************************************************************
பாஸ், நீங்க சாப்பிட மாட்டீங்களா
பாஸ்(ரொம்ப செல்லமாக, நீ கூப்டும் காரணம் தெரியும்டா) வீட்லே இருந்து வெளியே வந்தாச்சு. வீட்ட மறந்துட்டு ஒரு ரவுண்ட் போங்க, அப்புறம் என்ன?’
*******************************************************************************************************************************************
ஒவ்வொரு டீம் அவுட்டிங்கிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வு. பெரிய தலைகள் ஒன்று கூடி இந்த வருஷத்துல எவன போட்டுத்தள்ளலாம்’ என்பதுதான்.
*******************************************************************************************************************************************
மிகப் பெரிய தலைகளுடன் விவாதம் நடக்கும்.
அட்மின் டீம் : இந்த வருஷம் புரொகிராம எங்க வச்சிக்கலாம்.
தலைகள் :  போன வருஷம் போன ஹோட்டல் ஃப்ராடு ஓட்டல், சாப்பாடு பத்துக்கு ஒன்னு ஃப்ரி குடுத்தானக. இந்த வருஷம் பத்துக்கு ஐந்து ஃப்ரி  குடுக்கிற ஓட்டல்லதான் நாம புரொகிராம் நடத்துணும்
*******************************************************************************************************************************************
அடுத்த வருடம்:
அட்மின் டீம் : ??
தலைகள் :  போன வருஷம் போன ஹோட்டல தலைக்கு 121.57 வாங்கிட்டான். நம்ம கம்பெனி வேற சின்ன கம்பெனி. அதால இந்த வருஷம் 121.51 கீழ சாப்பாடு குடுக்ற ஹோட்டலா புடிங்க.
*******************************************************************************************************************************************
இவை அனைத்தும் கம்பெனியில் இருக்கும் ஒவ்வொருவரும் உழைத்து 5 லட்ச ரூபாய் கொடுத்து பதிலுக்கு குச்சி மிட்டாயும், குருவி பொம்மையும் வாங்கும் நிகழ்சிதான்.

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – மதிப்பீடு(சுயம்/கம்பெனி) – Appraisal

நிறுவனங்களுக்கு தகுந்தவாறு நவம்பர் (Calender year) அல்லது பிப்ரவரி/மார்ச்ல் (Financial year) நிகழும் பொய்யான கூத்துக்கள்
இவைகள் நிகழ்த்தபடும் காலகட்டங்களில் பெரும்பாலான மனித வள அதிகாரிகளுக்கு அதிக வேலைகள் கூடும்.
பத்தோடு பதினொன்றாக கடிதம் வரும். உங்களுக்கு … தேதி … இவரோடு முதல் நிலை நேர்காணல். மற்ற எல்லாநிகழ்வுகளையும் விட இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த நாளில் விடுமுறை கிடையாது. உறுதி செய்க. மனைவி பேச்சுக்கு எதிர் பேசா கணவன் போல் அதனை உறுதி செய்யவேண்டும்.
(நம்மை நேர்காணல் செய்பவர்கள் முதன்மை அதிகாரிகளோடு ஏற்கனவே பேசி இருப்பார்கள். (எது எப்படி பேச வேண்டும் என்பது))
காட்சி -1  நேர் முதன்மை அதிகாரிகளுடன்
1.
Welcome to first review meeting
2.
என்னாங்க, 10 நிமிடம் முன்னாலே வந்துடீங்க?
நீங்க தானே சொன்னீங்க எப்பவுமே 10 நிமிடம் முன்னாலே வரணும்னு.
கொஞ்சம் வெளியில இருங்க, நாங்களே கூப்பிட்ரோம்.
3.
என்னாங்க, 2 நிமிடம் லேட்டா வரீங்க?
கொஞ்சம் வேலை. அதான்..
அதான் ஏற்கனவே மெயில் அனுப்பி இருந்தோமே, அத கூட ஃபாலோ பண்ணலேனா எப்படி?
4

இன்னொரு மதிப்பீட்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.(நீங்க என்னா சொல்லப் போறீங்கன்னு தெரியும்டா)
 5
இது நீங்க போன வருஷம் எழுதி கொடுத்தது. இதுல எது எது நீங்க செய்திருக்கிறீங்கள்ன்னு பாப்போம்.
 5.1
நீங்க எழுதின முதல் பாய்ண்ட்  – 90% முடிச்சி இருக்கீங்க. இன்னும் நீங்க பெட்டரா செய்து இருக்கலாம்.அதால உங்களுக்கு ‘D’ கிரேட்
கொஞ்சம் தானே மிஸ் பண்ணி இருக்கேன்
அதுதான் பிரச்சனை. நீங்க மிஸ் பண்ண தால நம்ம entire Team 2 weeks delay. அதால உங்களுக்கு ‘D’ கிரேட்.
5.2
நீங்க எழுதின ரெண்டாவது பாய்ண்ட்  – 70% முடிச்சி இருக்கீங்க. இன்னும் நீங்க பெட்டரா செய்து இருக்கலாம்.அதால உங்களுக்கு ‘D’ கிரேட்
 —

அடுத்த தடவை நல்லா பண்ணுங்க.
5.3
நீங்க எழுதின மூணவது பாய்ண்ட்  – 50% முடிச்சி இருக்கீங்க. அதாவது நீங்க ஆரம்பிக்கவே இல்லை.அதால உங்களுக்கு ‘D’ கிரேட்.
அக்சுவலா இதுக்கு கிரேட் குடுக்க கூடாது. நீங்க பெட்டரா பண்ணனும் அப்படீங்கறத்துகாக உங்களுக்கு ‘D’ கிரேட்
அடுத்தவருஷத்துக்கு என்னா செய்யப்போறீங்க?
..
இது எல்லாரும் செய்றது தான். இத பெரிய விஷயமா சொல்லாதீங்க. வேற ஏதாவது எழுதுங்க.
இல்ல கம்பெனிக்கு தேவை இது தான். அதால இத நீங்க செய்வீங்க அப்படீன்னு எழுதிக்கவா(இல்லன்னா மட்டுமா உட்டுடவாப் போறீங்க)
5.4
அட்மின்லேருந்து டீட்டெய்லா info வந்து இருக்கு. நீங்க நிறைய லீவு எடுக்குறீங்கன்னு. அத குறைச்சிகீங்க.(அடேய் அது வருஷத்துக்கே 5 நாள் தானடா)
5.5 
இப்ப நீங்க சொன்னது நாம பேசினது எல்லாம் கரெட்ன்னு கையெழுத்து போட்டு குடுங்க.

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – விடுமுறைகள் என்னும் நாடகங்கள் – 2

விடுமுறை மறுத்தல் – 9
வர அக்டோபர்ல நம்ம ப்ராடக்ட் மேஜர் ரீலிஸ். அதால இப்பலேருந்து யாருக்கும் சனி ஞாயிறு லீவு இல்ல. (02-Jan-2014)
விடுமுறை மறுத்தல் – 10
Continuous சா 4 சனி ஞாயிறு வந்திருக்கேன். அதான் இந்த வாரம் நான் Monday லீவு எடுக்கலாம்னு இருக்கேன்.
நீங்க,ஒங்க வேலைய முடிக்கத்தான வந்தீங்க. எனக்காகவா வந்தீங்க. Monday முக்கிய மீட்டிங் இருக்கு. வந்துடுங்க.
விடுமுறை மறுத்தல் – 11
போன வாரம் சனி, ஞாயிறு வந்தேன். Comp off உண்டா?
அப்படீன்னா?
விடுமுறை மறுத்தல் – 12
ப்ராஜக்ட் முடிச்சிட்டு  Thursday  2 PM Airport வறீங்க. அதனால Thursday ஆபீஸ் வந்துடூங்க. client meeting இருக்கு
விடுமுறை மறுத்தல் – 13
எனக்கு 1 மணி நேரம் பர்மிஷன் வேணும்.
எத்தனை மணிக்கு
ஈவினிங் 8 மணிக்கு
என்னது 8 மணிக்கேவா?
விடுமுறை மறுத்தல் – 14
என்ன, எனக்கு போன மாசம் 0.5 டேஸ் CL வந்திருக்கு?
Admin : உங்க office working hours ல 0.1 min. difference. நீங்க office ல just 14.59 hours தான் இருந்துறீக்கீங்க
விடுமுறை மறுத்தல் – 15
சார், எனக்கு 15 டேஸ் வெகேஷன் லீவு உண்டுதானே?
நீங்க, 2st Apr வேலைக்கு சேர்ந்திருக்கீங்க. இந்த 15 டேஸ் வெகேஷன் லீவு மார்ச் 31க்கு முன்னால் join பண்ணவங்களுக்கு மட்டும் தான். அதனால 10 நாட்களுக்கு மட்டும் தான் நீங்க eligible.
விடுமுறை மறுத்தல் – 16
சார், உங்களுக்கு இன்னைக்கு 33வது பிறந்த நாள். உங்களுக்கு இன்னைக்கு ஒரு கிப்ட் தரப்போறோம்.
மகிழ்வுடன்(என்னது).
நீங்க லீவு வேணும்ணு கேட்டுகிட்டு இருந்தீங்கள்ல, இன்னைலேருந்து நீங்க வேலைக்கு வர வேண்டாம்.

விதிவிலக்காக சில கம்பெனிகள் உண்டு. மருத்துவக் காரணம் எனில் விசாரிக்காமல் கூட leave கொடுத்துவிடுவார்கள். (.ம் – IBM )

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – விடுமுறைகள் என்னும் நாடகங்கள் – 1

விடுமுறை மறுத்தல் – 1

நாளைக்கு லீவு வேணும்
நாளைக்கு  முக்கியமா இத முடிக்கணும். அதனால முடியாது.
விடுமுறை மறுத்தல் – 2

அடுத்தவாரம் லோக்கல் ரிலீஸ், அதனால அடுத்தவாரம் நம்ம டீம்ல யாருக்கும் லீவு கிடையாது. அதான் இப்பவே சொல்றேன்.

விடுமுறை மறுத்தல் – 3

உடம்பு முடியல
என்னா செய்யுது?
வாமிட்டிங்
ஒன்னும் பிரச்சனை இல்ல, நம்ம ஆபீஸ்ல பாத்ரூம் இருக்கு. ஒன் டெஸ்க்ல வேணும்னானும் வாமிட் பண்ணிக்கோ. ஆனா ஆபீஸ் வந்துரு.
விடுமுறை மறுத்தல் – 4

இந்த பொங்கலுக்கு ஒரு நாள் லீவு வேணும்.
இங்க பாருங்க பாஸ்(உன் பாசத்துல தீய போட்டு கொளுத்த) . நம்ம டீம்ல 3 பேர். நான் ஊருக்கு போகணும். நீங்க ரெண்டு பேர்ல யாருன்னு முடிவு பண்ணிங்க.
விடுமுறை மறுத்தல் – 5

தீபாவளிக்கு லீவு வேணும்
ஏங்க பாஸ், நம்ம டீம்ல 5 பேர் இருக்கோம். 3 பேர் வெளியூர் போறவங்க. அவங்க பேச்சிலர் வேற. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நீங்க எங்க ஊருக்கு போகப் போறீங்க.
விடுமுறை மறுத்தல் – 6

எனக்கு 5 நாள் வெகேஷன் லீவு வேணும்.

பாஸ், நீங்க முன்னால பின்னால இருக்கிற சனி, ஞாயிறு கணக்கு பண்ணி 9 நாள் லீவு எடுக்க பாக்காதீங்க. எம்ப்ளாயி ஹேன்ட் புக்ல என்னா போட்ருக்குன்னு நல்லா பாருங்க. ‘Depends upon the project’  ஞாபகம் வச்சிங்க.

விடுமுறை மறுத்தல் – 7

நாளைக்கு office official லா leave. But நாம கிளையன்ட்க்கு இது தெரியாது. அதனால நம்ம மெயின் கேட் closed ஆ இருக்கும். அதனால பின் கேட் வழியா வந்துடுங்க.

விடுமுறை மறுத்தல் – 8

பாஸ், சனி, ஞாயிறு லீவுன்னு ஹேண்ட் புக்ல போட்டுருக்குன்னு பாக்காதீங்க. சனிக்கிழமை வாங்க, இந்த வேலைய முடிச்சிடுங்க.

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – மீட்டிங் கூத்துக்கள்

நிகழ்வுகள் – 1

நாளைக்கு சீக்கிரம் வந்துடு தெரியுதா?
??
நாளைக்கு மீட்டிங் இருக்கு.
நாளைக்கு காலைல 8.00 – 8.30  – நம்ம டீம் Daily meeting. அப்புறம் 9.00 -9.30 எனக்கு மீட்டிங்.(போட்டு குடுக்க போறான்). 10.00 -11.00 நம்ம டீம் Weekly meeting. இது எதுக்குன்னா, நாம இந்த வீக்ல என்ன செய்யப்போறோம்ன்னு பேசுவோம்.(நிச்சயமா அதை செய்யப் போறது இல்ல). Before lunch 2.00 – 2.30 – Daily Status meeting. 7.00 – 7.30 – End of the day meeting. (நீ டெய்லி வீட்டுக்கு சீக்கிரம் போற இல்ல, அதான் இப்படி ஒரு டைமிங்). என்னா நவம்பர் வந்தா கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும்( நல்லா விடுவீங்களடா). திரும்பவம் மார்ச் வந்தா திரும்பவும் கஷ்டம் தான். எல்லாம் DST யால தான்
நிகழ்வுகள் – 2
TL : என்னா செய்துகிட்டு இருக்கீங்க?
TL :  அத விட இது priority ஜாஸ்தி, இத மொதல்ல முடிங்க.
நிகழ்வுகள் – 3
PL-1 : என்னா செய்துகிட்டு இருக்கீங்க?
PL-1 :  அத விட இது priority ஜாஸ்தி, இத மொதல்ல முடிங்க.Priority பண்ண தெரியலன்னா ஒன்னு எங்கிட்ட கேளுங்க, இல்ல TL உன் ஃப்ரண்ட் தானே. அவன்ட கேளுங்க. மதியம் 2.30 – 3.00 இந்த டீம் மீட்டிங்.நீங்க தான் எல்லாம்  explain பண்ணனும்.
நிகழ்வுகள் – 4
PL-2 : என்னா செய்துகிட்டு இருக்கீங்க?
PL-2 : ஏம்பா இன்னைக்கு டெமோ இருக்குன்னு உனக்கு தெரியாதா. ஏற்கனவே மைல்ஸ்டோன் ரெட்ல இருக்கு. நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. 2 மணிக்குள்ள முடிச்சிட்டு என்கிட்ட demo காட்டு. நான் அப்ரூவ் பண்ண பிறகுதான் நீ பக் ட்ராக்கர்ல க்ளோஸ்டுன்னு மாத்தனும்.
Mr. X : இல்ல, இன்னொரு ஃப்ரையாரிட்டி வொர்க் இருக்கு, அதான்…
PL-2 : யாரு, PL1 தானே, நான் அவன் கிட்ட பேசிக்கிறேன். நீ இத முதல்ல முடி.
இரவு 7.43 PM
நிகழ்வுகள் – 5
PL-2 : ஏம்பா எங்க இருக்க?
Mr. X :கேபின்ல தான்.
PL-2 :இங்க பாரு, நாம இங்க டெமோ காமிச்சத client டீம்க்கு டெமோ காமிச்சேன். இது முடியாதுங்கிறாங்க.அதனால ஸ்பெக் மாத்ரோம். 9.30 (PM) க்கு மீட்டிங். Just 10 min. வந்துட்டு போய்டு.

*Overlapping ஆகும் மீட்டிங்குகள் / Emergency மீட்டிங்குகள்/ Quick மீட்டிங்குகள்/ Red milestone மீட்டிங்குகள் / Collaborative மீட்டிங்குகள்/ Pre delivery மீட்டிங்குகள்/ Post delivery மீட்டிங்குகள் /Unofficial மீட்டிங்குகள் கணக்கில்எடுத்துக் கொள்ளப்படவில்லை.

** – (Explained Entry level members meetings only)

புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

2038 – வளர்ப்பு மிருகங்கள் – Pet animals

2038 – வளர்ப்பு மிருகங்கள்  – Pet animals

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
உங்களது வளர்ப்பு மிருகங்களை எங்களிடம் அழைத்து வாருங்கள். அவைகளுக்கு உடற் பயிற்சி தருகிறோம், ஒருமணி நேரத்திற்கு Just 2999 + tax
2.
உங்களது வளர்ப்பு மிருகங்களுக்கு திருமணம் செய்ய எங்களை அணுகவும்.மேலும் தகவல்களுக்கு  நரி திருமண தகவல் மையம்
3.
வளர்ப்பு மிருகங்களுக்கு நியூமராலஜி படி பெயர் வைக்க எங்களை அணுகவும். (ஐந்து மிருகங்களுக்கு 1 பெயர் இலவசம்)
4.
உங்களது வளர்ப்பு மிருகங்களை உணவிற்காக எங்களிடம் அழைத்து வாருங்கள். வண்ண மீன் உணவகம்( உயர்தர சைவம்/அசைவம்)
5.
உங்களது வளர்ப்பு மிருகங்களை கடற்கரையில் வாக்கிங் செல்ல எங்களது வாகனங்களை பயன்படுத்துங்கள். (முதல் 3 கி.மி – 999+ tax அடுத்த ஒவ்வொரு கி.மி க்கும் ரூ.67 +tax).  மாத வாடகைக்கு கண்டிப்பாக சலுகை உண்டு.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – செயற்கை கண்திரை – Artificial Retina

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

Artificial Retina Brings Light to Blind – News
1.
அந்த தென்றல் சீரியல வர வர சரியாவே தெரியல. 1288 episode 14-11-14. அன்னைக்கு பாத்தேன். அப்புறம் சரியா தெரியல. இந்த ஆப்பரேஷன் பண்ணா ஒழுங்கா தெரியுமா டாக்டர்?
2.
சார், இதெல்லாம் ரொம்ப ஓவர் சார். பொண்டாட்டி பேச்ச ‘Blind கேட்டுட்டு இந்த ஆப்பரேஷன் பின்னாடி கண்ணு தெரியுமான்னு கேட்டா எப்படி சார்?
3.
சரி சார். ஒத்துக்கிறேன்.. Argus II design consists of an external video camera. அதுக்காக வீடியோ வாடகைக்கு எல்லாம் விட முடியாது சார்.
4.
சார் இதெல்லாம் ரொம்ப ஒவர் சார். Artificial retina operation ஆன பிறகுதான் உங்க கம்பெனிக்கு ‘Vision’ என்னன்னு சொல்லுவேன் சொல்றது ரொம்ப ஓவர் சார்.
5.
இந்த ஆப்பரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு கண்ணு தெரியும் அம்மா. ஆனா உங்க புருசன் எங்க எங்க காசு வச்சி இருக்கார்னு கண்டுபிடிக்க முடியாது அம்மா.

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – வளர்ச்சிப் படிகள் – Stages – 3

கலர் கலரான கனவுகளுடன் உள்ளே நுழைகிறார்கள்.
 
முதல் சில வாரங்கள்
 
HR – இதுல நம்ம Company பத்துன எல்லா விஷயமும் இருக்கும். பாருங்க. வேற doubt னா கேளுங்க. We are ready to help you at any time.
 
Manager : Guys, See me a for a min. This is Mr/Mrs. Joined in our team. He/She did her degree bloaa bloaaa etc.,
 
மதிய உணவு இடைவேளையில்
Mr.x :  Hi I am …from (Native).
Mr. Y : Great ya. I am also from (native).( அவன் தான்டா உனக்கு ஆப்பு வைக்கப்போறான்.)
Mr.x :   Work load எப்டி இருக்கும்.
Mr. Y : பெருசா ஒன்னும் இருக்காது. கொஞ்சம் development  கொஞ்சம் testing. மெயில் அனுப்பிட்டு போய்டே இருக்கலாம்.
Mr.Y : Guys, Mr.x join பண்ணி one month ஆகிடுச்சி. Salary வந்துடுச்சி. So he is going to give treat. I hope he won’t mind if we order for Pizaa. Am I right Mr. X?
Mr.Y : என்ன credit கார்டு வச்சி இருக்கீங்க
Mr.x :  எதுவும்இல்ல.
Mr.Y : எதுவும் இல்லயா?
Mr.x :   இல்ல.
Mr.Y : It has its own plus and minus. என்னோட friend ஒருத்தன் credit card company workல பண்ரான். அவன்ட சொல்லி ஏற்பாடு பண்றேன். உங்க salary எவ்வளவு?? (அடுத்தவன் சம்பளம் என்னங்கறத எவ்வளவு talent ஆ கேக்ரான்)
HR “ உங்க வர அக்டோபர்ல உங்க mid year performance review
Mr.x : நான் என்ன செய்யனும்.
HR “ This is just formality. We are checking whether you are sync with what you defined in review form.
Mr.Y : நெக்ஸ்ட் வீக் லீவு போட்ராத.
Mr.x :   என்ன விஷேம்.
Mr.Y : Annual year end party. We will have drinks. Drinks சாப்டுவீங்கள்ல?( உன் தமிழ்ல தீய போட்டு கொளுத்த)
Mr.x :    occasionally

Mr.Y : அது போதும்,Hey Guys இவன் நம்ம team da.

சம்பளம் தாண்டி முதல் வருடத்தில் வாங்கிய ஷூ, வாட்ச், சர்ட், பேண்ட், பேக் இத்தியாதிகள் போக கடன் Rs. 75000/-(3 credit cards with limit of 25000 each)
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – வளர்ச்சிப் படிகள் – Stages – 2

ஜூலை 2014ம் ஆண்டு நிலவரப்படிதமிழ்நாட்டில்  552 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை தோராயமாக 7,50,000 பொறியியல்  மாணவர்கள் வெளிவருகிறார்கள். இதில் 1,00,000 மாணவர்கள் மட்டும் தமிழ் நாட்டில் இருந்து (550 * 180 ( மூன்று பிரிவுகள் என்று கணக்கில் கொண்டு)
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளும் மண்டலங்களுக்கு உட்பட்டு அவைகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

College – A, Dept – AA, Practical – AAA, Staff – AAAA, External – B

AAAA:  வாங்க, வாங்க B சார், நல்ல வேள, நீங்க வந்தீங்க இல்லேன்னா Practical ரொம்ப கஷ்டமா போய் இருக்கும்.
B :  ஏன் அப்படி சொல்றீங்க, என்னாச்சு?
AAAA:  போன தடவை C காலேஜ்ஜில் இருந்து ஒருத்தன் வந்தான்(மரியாதை குறைவு  கவனிக்க). என்ன என்ன எக்ஸ்பிரினென்ட், அல்காரிதம் எல்லாம் கேட்டு கொன்னுபுட்டான் சார்.  இதனால நம்ம பசங்க மார்க்கே எடுக்க முடியல. First மார்க்கே 70 தான்னா பாத்துகோங்களேன் சார். இவன்லாம் என்ன மார்க தூக்கிட்டா போகப்போறான்இன்னொரு தடவ அவன் காலேஜிக்கு எக்ஸ்டேனலா போகாமலா போயிடுவேன். அப்ப இருக்கு அந்த பசங்களுக்கு.

மாணவனை காப்பாற்றுவதாக நினைத்த நிமிடங்கள் பிரச்சனை ஆரம்பமாகிறது.

காட்சி 1 :
What is this ya? You know, In Google office every 100 meter, there is one refreshment shop is there. நம்ம காலேஜும் தான் இருக்கே. ச்சேய்
காட்சி 2 :
டேய், மச்சான் என்னடா bf ?
bf ??
அட இது கூட தெரியாதா. Breakfast அப்படீன்னு அர்த்தம். Just 2 பப்ஸ்(pups, puff.. தெளிவா சொல்லுங்கடா) அப்புறம் 1 coke. That’s all. (அட கம்மனாட்டிகளா)

காட்சி 1 ம் காட்சி 2 ம் தொடர்புடையவை.

Placement office:
சார், இந்த பையன் எப்படி செய்திருக்கிறான் சார்?
சுமாராதான் செய்திருக்கிறான் .
சார், பையன் நல்ல பையன் தான். டேய் தம்பி சாருக்கு ஒரு ஜூஸ் எடுத்துகிட்டுவா. அதனால நல்ல பையன் தான் சார், 8.4 வச்சிருக்கான் சார். இந்த டயத்ல அவனுக்கு கொஞ்சம் உடம்பு முடியாம போயிடுத்து. கொஞ்சம் பாத்து செய்ங்க சார்.

மனிதவள மேம்பாட்டு அறிக்கையின் படி (2014), சுமாராக 20% சதவீத மாண்டவர்கள் முதல் வருடத்தில் வேலையில் சேருகிறார்கள். (அதாவது 20000 மட்டுமேசென்ற வருட மாணவர்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை). அடுத்த வருடத்தில் அது 40000 ஆக ஆகிறது. அதோடு நின்றுவிடுகிறது.

அதாவது அவன் வேலைக்கு சேரும் பொழுதுகளில் 40000 இருந்து ஒருவனக தேர்ந்தெடுக்கப்படுகிறான்.

புகைப்படம் :  R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

வேதாளம் கட்டுப்பட்ட கதை

சற்றும் மனம் தளராமல் வேதாளத்தை மரத்தில் இருந்து கீழே தள்ளி தோளில் சாய்த்து நவீன விக்ரமாத்தியன் நடக்க ஆரம்பித்தான்.

நீ நல்லவன் தானே.
..
மௌனம் பதில் ஆகாது. எனக்கான பதில் அளிக்க முடியா வினாக்களில் மட்டுமே நான் உனக்கு கட்டுப்படுவேன்.
..

படைப்புகளின் தொடக்கதில் நீ இருக்கிறாய். உன்னை புகழின் ஏணியில் ஏற்றிவிட என்னால் முடியும். செய்யவா?

வாழ்வு மிகவும் ரசிக்கத் தக்கது என்பதை நீ அறிவாயா?

உணவில் பெரும் விருப்பம் கொண்டவன் நீ என்பதை நான் அறிவேன். விருப்பப்படி உணவினை வழங்கவா?

இசையினில் பெரும் ஆர்வம் கொண்டவன் நீ. இசையின் நுணுக்கங்களை கற்றுத் தரவா?

தனிமை உனக்கு பழக்கமானது. உன்னை தனிமைப்படுத்தி மகிழ்வினை உண்டாக்கவா?

உலக அனுவங்கள் அனைத்தையும் உனக்குத் தருகிறேன்.

இல்லற தர்மத்தில் இருக்கிறாய். உனக்கான கவலைகள் மற்றவர்களை விட மிக அதிகம் என்பதை நான் அறிவேன். உனக்கான விருப்பங்கள் இருப்பின் தெரிவிப்பாய். உனக்காக செய்து முடிப்பேன்.

ஞாயிறு அன்று என் மனைவி எந்த வேலையும் எனக்கு கொடுக்கக் கூடாது.

அடுத்த வினாடியில் வேதாளம் கட்டுப்பட்டது
புகைப்படம் : இணைய தளம்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – வங்கி – வங்கி சேவைகள்

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
 
2038 –  வங்கி–  வங்கி சேவைகள்
1.
இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது. உங்களது பணத்தினை நாங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதால், நீங்கள் எங்களுக்கு வட்டி கட்ட வேண்டும்.
2.
பள்ளிக் கட்டணம் EMI முறையில் கட்ட எங்களது கிளைகளை அணுகவும். இதனை நீங்கள் 10 வருடங்களுக்கு பெற்றுக் கொள்ளலாம். கடைசி 20 வருடங்களின் Income Tex return file  தேவை.
3,
ஓய்வு ஊதியக் காரர்கள் தங்களது பென்சனை பெற, கடைசி 5 வருட Living certificate/evidence உங்களது வங்கி கிளைகளில் கொடுக்கவும்.
4.
வங்கிகளில் லாக்கர்  வசதி பெற எங்களது கிளை மேலாளரை அணுகவும். கடைசியாக வழங்கப்பட்ட தேதி – 10-Oct– 2014. மற்றவர்கள்காத்திருக்கிறார்கள்.
5.
உங்களுக்கு குழந்தை எப்ப பிறக்கும்?
வர வருடம் ஏப்ரல் 1ம் தேதி.
இங்க பாருங்க, இந்த ப்ளான் உங்களுக்கு நிச்சயமா சரியா வரும். இதுல நீங்க வருஷம் 1 லட்சரூபா போட்ட உங்க குழந்தை 60 வயசு ஆகும்போது இது மெச்சூர் ஆகும். அவங்க சஷ்டியப்த பூர்த்திக்கி இது கரட்டா இருக்கும். இந்த ஸ்கீம் பேரு சுரபி சஷ்டியப்த பூர்த்தி.

மற்றவை
Monal Gajjar (google it)– Previous employment – Bank employee.  Hey Hey

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து – வளர்ச்சிப் படிகள் – Stages

இக்கட்டுரைகள் குறித்த விமர்சனங்கள் பல்வேறாக வந்த வண்ணம் உள்ளன.
வயது என்னும் நிகழ்வினைக் கொண்டும்அதனால் அடையப்படும் பதவிபதவி சார்ந்த  உயர்வுகள்   குறித்து இந்த தொகுப்பு.
என்வரையினில் வசதிக்காக 20 வயதிற்கு கீழ், 20 – 30 வயது, 30 – 40 வயது, 40க்கு மேல் என்று வயதின் வரைகளை உருவாக்கி இருக்கிறேன்இதில் பல்வேறு மாறுபட்ட   கருத்துக்கள் இருக்கலாம்.
பணியின் அடிப்படையில்  Entry level, Middle level and Higher level  என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Entry level  – Trainee, Software Engineer etc.,
Middle level  – Project Leader, Project Manager etc.,
Higher level  – IT Consultant, Associative Director etc.,
வாழ்வின் வளச்சியில் என் தந்தை ஒரு ‘IT’ ல் வேலை பார்க்கிறார்     என்று குழந்தை கூறுவதை ஏற்று மிகவும் மகிழ்வுறுகிறோம். அங்கு தான் ஆரம்பமாகிறது வினை.
நல்லா படிச்சா மட்டும் தான் ‘IT ‘ கம்பெனிகளில் வேலை கிடைக்கும். இல்லைன்னா ஒன்னும் பண்ணமுடியாது’ இப்படித்தான் வார்தைகளின் விஷம் குழந்தைகளுக்கு ஏற்றப்படுகிறது.
‘சார், இதெல்லாம் கத. நான் எல்லாம் அப்படி இல்ல’ சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். மறுப்பவர்களின் குழந்தைகள் மிகப்பெரிய கல்விக் கூடங்களில் பயில்கிரார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
பெற்றவர்களால் தூண்டப்பட்டோதன் விருப்பத்தின் காரணமாகவோ அவர்கள் தங்களது   பள்ளிப் பருவத்திலேயே  Computer Science  தேர்ந்தெடுக்கிறார்கள்.
கல்லூரிக்கு முன் – நண்பர்கள்
மச்சான் வேற எந்த branch  ம் எடுத்துடாத. வருஷத்துக்கு 500 ரூ சம்பளம் அதிகமாகும். IT ல மட்டும் தான் வருஷத்துக்கு 1 லட்சம் increment வரும்.
இவர்கள் மிகப் பெரிய கல்விக் கூடங்களில் பயில்வதற்காக மிகப் பெரியதான தன்  வாழ்வினை இழக்கிறார்கள்.(ஒரு சிலர் தவிர்த்து)
கல்லூரி கனவினை வளர்த்து விடுகிறது.
நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க சார். எங்க college ல் சேர்ந்தா 100% Placement. – இத்யாதி விளம்பரங்கள்
சில கல்வி நிறுவனங்கள் கம்பெனிகளுடன் தொடர்பில் இருக்கின்றன. இதன்படி கம்பெனிகள் கல்லூரி நிறுவன மாணவர்களுக்கு ‘Offer Letter’  மட்டுமே தருகின்றன.  Not ‘appointment order’
அவர்கள் சந்தோஷமாக கல்லூரிகளில் இருக்கட்டும். சில நாட்கள் தவிர்த்து அவர்களை சந்திப்போம்.
(அதெல்லாம் இல்லை என்று உடனடியாக மறுப்பு சொல்கிறவர்கள் இருக்கக்கூடும். இங்கு   பெரும்பான்மை மட்டுமே விளக்கத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.)

புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

I.T என்னும் பம்மாத்து

மனித வாழ்வின் காலத்தடம் படாத இடங்கள் கூட கணினியின் தடங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்பதே நிஜமான உண்மையாகும்.
தொழில் சார்ந்த துறைகளின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வளரும் போது, தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி வகை தொகை இல்லா வளர்ச்சியினை சந்தித்து இருக்கிறது. இதில் பெரும்பாலும் நிறுவனங்களின் வளர்ச்சி மலை அளவிற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களின் வளர்ச்சி மடு அளவிற்கும் இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இங்கு நான் குறிப்பிடும் அனுவபங்கள் எனக்கானவை மட்டும் அல்ல. பல அல்லல் பட்ட மனிதரிகளின் அனுபங்களும் கூட.
ஒரு நாட்டின் வளர்ச்சியினை வேறறுக்க அதன் அடிப்படை கலாச்சாரத்தை அறுத்துவிட்டால் போதும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்களாக இருந்த ஒரு கலாச்சாரம், சில தசாப்தத்தில் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.
இது குறித்து கீழ் கண்ட தலைப்புகளில் எழுத உள்ளேன்.
  1. வளர்ச்சிப் படிகள் – Stages
  2. மீட்டிங் கூத்துக்கள் – Meetings
  3. விடுமுறைகள் என்னும் நாடகங்கள் – Leave
  4. மதிப்பீடு(சுயம்/கம்பெனி) – appraisal
  5. குழுவுடன் சில நாட்கள் – Team outing
  6. மற்றவை
இவைகளின் நோக்கம் எவர் மனதையும் புண்படுத்துதல் அல்ல. நிதர்சனங்களை சுட்டிக்காட்டுவது மட்டுமே இதன் நோக்கம்.
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 13

நினைவுகளை கலைத்தலை விட கனமான வேலை ஒன்றும் இல்லை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வறுமை உடையவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சாலை ஒரங்களில் இருக்கும் மரங்களில் மிக மெல்லிய அடுக்குகளாக மணல் துகள்கள் படிந்திருப்பதைப் போல், 35+ கடக்கும் மனிதர்களிடம் மரணம் குறித்த சிந்தனை படிந்திருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பட்ட மரத்திலிந்து பறந்து செல்கின்றன பல பறவைக் கூட்டங்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உச்ச கட்ட வன்முறையின் மிகச் சிறந்த வடிவம் மௌனம்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தண்டவாளங்களின் மேல் பறந்து செல்லும் பறவைகளின் சேரும் இடம் எதுவாக இருக்கக் கூடும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வாழ்வின் தனிமைகள் கற்றித் தருவதை விட வேறு யார் அதிகம் கற்றுத் தரமுடியும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேடலைத் தொலைத்தவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனைவியின் முகத்தில் அதிக பிரகாசம் உண்டாக்க வேண்டுமா? ‘மணி 10 ஆயிடுத்து. ஒரே தடவையா மதியம் சாப்பிடலாமா?’ என்று சொல்லிப் பாருங்கள்.
அன்னைக்கு நிச்சயம் கறி மீன் குழம்பு வகையரா தான். 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உறவுகள் அற்று இருப்பவர்களுக்கே உலகம் வசமாகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – T.V Serialsssssss

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
சார், உங்களுக்கு கல்யாணம் ஆகுணும்னா நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ரொம்ப ஈசி. கார்த்தின்னு பேர் வச்சிங்க. காமாட்சின்னு ஹீரோயின் பேரு வைச்சிப்போம். எங்க சீரியல நடிங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகிடும்.
2.
என்னா அநியாயமா இருக்கு. எங்க காலத்துல 1000 எபிசோட் வந்தா பெருசா கொண்டாடுவாங்க. இப்ப என்னடான்னா, 20000 எபிசோட் மேல வர சீரியலுக்கு கூட ஒரு கொண்டாட்டமும் இல்லயே.
3.
30 நிமிடம் இடைவெளி இல்லா சீரியல் இன்றுநாசமா போறவனே, கட்டைல போறவனே போன்ற அழகு வசனங்கள்.
4.
வீட்டு பெண்மணிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு. . எவ்விதஇடஞ்சல் இன்றி சீரியல் பாருங்கள். உங்கள் வீட்டிற்கே Breakfast/Lunch/Dinners வந்து  சப்ளை செய்கிறோம்.
5.
TRB ரேட்டிங் ஏறவேமாட்டேங்குது சார், என்ன செய்யலாம் சார்?
அது பெரிய மேட்டரே இல்ல. ஒரு வெள்ளிக்கிழமை புருஷன் பொண்டாட்டியை அடிச்சு காயப்படுத்துற மாதிரி முதல் 7 நிமிஷம் காமிக்கலாம். அடுத்த 2 நிமிஷம் பொண்டாட்டி அழுவுற மாதிரி சீன் கடைசி 5 நிமிஷம் பொண்டாட்டியை சாகடிக்கிறதை லைவ்ல காமிக்கலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 12

விலக்கப்பட்ட மனிதர்களின் நேசிப்புகள் உண்மையானவைகள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கருப்பு மிகவும் அழகான நிறம். ராமர் கருப்பு, கிருஷ்ணர் கருப்பு, அந்த… (அட சே…) அதனால் கருப்பாக இருப்பதற்காக மகிழ்வு அடைவோம். இப்படிக்கு பெரிய fair and lovely  வாங்குவோர் சங்கம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அஹோரிகள் அழுவதில்லை
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கனவு காண்பது கண்கள், நிஜத்தில் வாழ்வது நெஞ்சம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
எதிரியை காயப்படுத்த மௌனத்தை விட சிறந்த ஆயுதம் இல்லை
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கருணை அற்றுச் செல்லும் காலங்களில் கனவுகளுடன் வாழ்பவன் தானே மனிதன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
 உறக்கங்கள், மீளா உறக்கங்களை ஒத்து இருக்கின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒவ்வொரு தெருக் கூத்தாடியும் நினைவு படுத்துகிறான் வாழ்வினையும், பொருள் பெறுவதும் மட்டுமே வாழ்வு   என்று.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கடக்கும் பொழுதுகளை விட கடந்த பிறகான ஒய்வுறுதல் மிக்க ஆயாசம் தருகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேசம் வென்றவரைவிட
தேகம் வென்றவரையே கொண்டாடுகின்றன
உலகங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 11

பள்ளி விடுமுறைக் காலங்களில் மகள்களை விட தந்தைகளே அதிகம் மகிழ்வுறுகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தன்னாலே தான் தன் பிறப்பு என்று உணர்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நேசிப்பையும் நிரந்தரமின்மையையும் ஒன்றாகக் காட்டும் இடங்களே இரயில் பயணங்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அருந்து காப்பியின் கடைசித் துளிகள் நினைவுபடுத்துகின்றன அது எத்தனை மயக்கம் தரும் என்று.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
எரியும் விளக்கிறகு ஏது கர்மம்?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உச்ச கட்ட ஆனந்த அனுபவத்தின் வெளிப்பாடு அழுகையாகத் தான் இருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனிதர்களின் மூடப்படா கதவுகளின் வழியே கனவுகள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கல்லறையில் காவளாளி யாருக்காக?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
காலை நேரங்களில்  மிக அழகாக கத்திக்கொண்டு இரு கால்களால் மரத்தில் அமர்ந்து, தன் முன் கால்களால் தென்னம் குரும்பைகளை உண்ணும் அணில்கள் அழகானவையாக இருக்கின்றன. அதனால் விடியல்கள் வெளிச்சம் பெறுகின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மௌனம் பயிற்று விக்க கூடியது என்பது தாண்டி அறியக்கூடியது என்று உணர்பவன் மயானம் அடையான்.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 10

தனது மகளை கல்லூரி அனுப்ப காத்திருக்கும் வேளையில் மகளை வாகனத்தில் இருத்தி தான் தரையில்நின்று   பேசும் தந்தையில் கண்களில்  மாறுதல் இல்லா ஒரு சந்தோஷம் தெரிகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேகத்தின் பணி தேகம் நீக்குதல் என்று உணர்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அம்மா என்று அழைத்தால் எவ்வாறு தாய் மகிழ்வாளோ, அவ்வாறே நாம் குருவினை அழைக்க அவர்கள்         பிரியப்பட்டு நம்மிடம் வந்து உறைகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
(மகா)சந்தோஷம்
மனைவி :  ஏங்க, நான் மௌன விரதம் இருக்கலாம்ன்னு இருக்கேன்.
கணவன் : நான் இப்ப பூமியிலே இல்லையே. வானத்துல இருக்கேன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மௌனத்திருப்பவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வினைகளை அறுப்பவனையே பெரு வலிகள் வந்து சேர்கின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்கள் தங்கத்தை நேசிப்பதை விட தந்தைகள் மகள்களை நேசிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கர்வம் அழித்தலில் மருத்துவ மனைகளின் பங்கு மகத்தானது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கற்றல் தாண்டி அறிதலை கொள்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மூச்சுக்காற்றில் சிக்கனம் காட்டுபவன் மயானம் அடையான்.

Loading

சமூக ஊடகங்கள்