இச்சா மரணம் – பீஷ்மர்

எண்ணற்ற கதா பாத்திரங்களை உள்ளடக்கியது மகாபாரதம். அதில் சிறந்த தலையாய படைப்புகளில் ஒன்று பீஷ்மர்.
பீஷ்மர் சந்தனு மகாராஜாவிற்கும், கங்கைக்கும் புதல்வனாக பிறந்தவர். இவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். பெற்ற சாபம் தீர தேவ விரதனாக அவதாரம் செய்தவர்.
ஒரு நாள் தனது தந்தை மிக்க மனவருத்தத்துடன் இருப்பதைக் காண்கிறார். சந்தனு காரணத்தை கூற விரும்பவில்லை. எனவே சந்தனுவின் தேரோட்டியை அழைத்து உண்மையை அறிகிறார்.
தந்தை சத்யவதி என்ற மீனவப் பெண்ணின் மீது காதல் கொண்டது தெரியவருகிறது.
எனவே அவர்களின் தலைவனை சந்தித்து தனது தந்தைக்கு சத்யவதியை மணம் முடித்துத்தர கேட்கிறார்.
 
சத்யவதியின் தந்தை மறுத்து விடுகிறார். காரணம் வினவுகிறார்.
பட்டத்து அரசியே தலைமை பீடப் பொறுப்புக்கு உரியவராகவும், அவர்களில் வாரிசுகளே ஆட்சி செய்ய தகுந்தவர்கள்  என்றும் இருப்பதால் சத்தவதியை சந்தனுவுக்கு மண முடிக்க விருப்பமில்லை என்று தந்தை உரைக்கிறார்.
இந்த நாள் முதல் பிரமச்சாரிய ஒழுக்கத்திலிருந்து தவறாதவனாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவனாகவும் இருப்பேன், இது சத்தியம் என்று சத்தியம் செய்கிறான் தேவவிரதன்.
‘பீஷ்ம பீஷ்ம’ என்று தேவர்கள் ஒலி எழுப்புகிறார்கள். பீஷ்ம என்ற சொல்லுக்கு ‘ யாராலும் செய்ய முடியாத காரியத்தை செய்பவன்’ என்று பொருள்.
இந்த தியாகத்திற்காக சந்தனு பீஷ்மருக்கு தந்த வரம் – விரும்பிய பொழுது மரணம் .
சிகண்டியை முன்னிருத்தி அர்ஜுனன் அம்பு எய்தி பீஷ்மரை வீழ்த்தினான். அவர் தரையில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காக அம்பினால் படுக்கை செய்து(சரதல்லபம்), அவர் மரணம் வரும் வரை அதில் இருத்தினான்.
இது நடை பெற்றது, தஷ்ணாயன புண்ணிய காரம், உத்ராயண புண்ணியகாலம் வரை அவர் அம்புப் படுக்கையில் இருந்தார்.
பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் அக்காலம் வரை அவரை அணுகி உலகின் மிக நுட்பமாண மற்றும் சூட்சமான சாத்திரங்களையும் கற்று அறிந்தார்கள்.
விஷ்ணு சகஸ்ரநாமம் இவரால் எழுதப்பட்டது.
ரதசப்தமி – பீஷ்மாஷ்டமி – 06-02-2014/07-02-014
Image : Internet 

Loading

சமூக ஊடகங்கள்

சாக்த வழிபாடும் விஜய தசமியும்

சாக்த வழிபாட்டின் (தேவியை – அம்பாளை) மிக மிக முக்கியமான பண்டிகையாக இந்த நவராத்ரி கொண்டாடப்படுகிறது.

மற்ற வழிபாடுகள் போலவே சாக்த வழிபாட்டிலும் பல வழிமுறைகளும் பல நிலைகளும் உண்டு. (உ.ம் வாரகி உபாசனை முறைகள், ஸ்ரீவித்யா உபாசனை முறைகள்).

புரட்டாசி மாதம் வளர்பிறை முதலாவதாக ஒன்பது நாட்களை நவராத்திகளாக கொண்டாடுகிறோம்.

அரக்கர்களை வென்று வாகை சூடிய நாள் என்பதால் விஜய தசமிக்கு சிறப்பு.

வனவாசம் முடிந்து, அஞ்ஞாத வாசம் (மறைந்திருந்த காலமும் முடிந்து)  தங்களது படைக்கருவிகள் அனைத்தையும் வன்னி மரத்திலிந்து அர்ஜுனனும் மற்றவர்களும் எடுத்தது விஜய தசமி அன்று.

இவ்விடத்தில் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

மகா பாரதப் போரில் வெல்ல துர்க்கையை உபாசனை செய்யுமாறு கிருஷ்ணன் பணிக்கிறான். அப்போதும் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

இரண்டுமே ஒரு தெய்வத்தை பற்றியது என்றாலும் வெவ்வேறு மந்திரங்கள்.

பல ரிஷிகளும் முனிவர்களும் சாக்க வழிபாட்டிற்குப் பிறகே உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள்.

லலிதா சகஸ்ரநாமமும் ஸ்ரீ மாதா என்றே துவங்குகிறது.

அன்னையின் கருணை அளப்பரியது.

Loading

சமூக ஊடகங்கள்

குடிப்பிறப்பு

மஹாபாரதம் – சாந்தி பர்வத்தில் வரும் கதை.

குட்டி  ‘அம்மா, ஒரு கத சொல்லேன்’

அம்மா  ‘அன்னைக்கு ஒடினல, இப்ப ஏன் கத கேக்கற’

குட்டி  ‘சரிம்மா.  ஒரு டாக் கத, ஒரு எலிஃப்னெட் கத சொல்லு’

அம்மா  ‘ஒரு ஊர்ல ஒரு ரிஷி இருந்தாராம்.

குட்டி  ‘பெரிய தாடி வச்சிகிட்டா?’

அம்மா  ‘குறுக்க பேசாத,அவர்கிட்ட ஒரு நாய் இருந்துதாம்’

குட்டி  ‘ஜிம்மி மாதிரியா’

அம்மா  ‘குறுக்க பேசாத, பேசினா கத சொல்ல மாட்டேன்’

குட்டி  ‘சரி’

அம்மா  ‘நாய் ரொம்ம சாதுவாம். சமத்தா சாப்பிடுமாம், சமத்தா தூங்குமாம். அவருகிட்கவே இருக்குமாம்’

குட்டி  ‘ம்’

அம்மா  ‘ஒரு நாள் ஒரு சிறுத்தபுலி நாய விரட்ட ஆரம்பிடுச்சாம். நாய் ரிஷி கிட்ட வந்து என்னைய சிறுத்தபுலியா கன்வர்ட் பன்னிடுங்க அப்பத்தான் நான் சிறுத்தபுலி கிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியும்  அப்டின்னு சொல்லுச்சாம்’

குட்டி  ‘ம்’

அம்மா  ‘அவரும் நாயை சிறுத்தபுலியா மாத்தி காப்பாத்தினாராம்.
இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய யானை துரத்துது. என்னைய யானை ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் சிறுத்தபுலியை யானையா மாத்தி காப்பாத்தினாராம்.
இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சிங்கம் துரத்துது. என்னைய சிங்கம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் யானையை சிங்கமா மாத்தி காப்பாத்தினாராம்’

குட்டி  ‘ம்’

அம்மா  ‘வாயில விரல வைக்காதே. வச்சா கத சொல்ல மாட்டேன்’

குட்டி  ‘ம்’

அம்மா  ‘இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சரபமிருகம்(சரபேஸ்வரர் போன்றது) துரத்துது. என்னைய சரபமிருகம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் சிங்கத்தை சரபமிருகம் மாத்தி காப்பாத்தினாராம்.
அப்ப சரபமிருகத்திற்கு பயங்கர பலம் வந்துடுச்சாம். அப்பத்தான் அது யோசனை பண்ணுச்சாம். ‘ நம்மள இப்படி ஆக்கினது மாதிரி வேறயாரையாவது இப்படி ஆக்கி நம்ம மேல ஏவி விட்டா என்ன செய்யறது’
உடனே ரிஷி மேல பாய போச்சாம்.
ரிஷி சொன்னாராம், ‘ உனக்கு ஹெல்ப் பண்ணத்துக்கு இப்டியா செய்வ, அதனால நீ நாயா போ’

அதற்குள் குட்டி உறங்கி இருந்தாள்.

ரிஷி – அக்னிப்ரபர்

Loading

சமூக ஊடகங்கள்

சோம்பல் தவிர்

மஹாபாரதம் – சாந்தி பர்வத்தில் வரும் கதை – தற்கால வடிவங்களுடன்.

குட்டி –  அம்மா, ஒரு கத சொல்லேன்.

அம்மா – ‘ஒரு ஊர்ல ஒரு ஒட்டகம் இருந்துச்சா’

குட்டி – ‘ம்’

அம்மா – ‘அது சாமிகிட்ட தவம் இருந்து ஒரு வரம் வாங்கிச்சாம்’

குட்டி – ‘என்னான்னு’

அம்மா – ‘நான் நகந்து போகாம சாப்பிடனும், அதுக்கு என் கழுத்து அவ்வ்வ்வ்வ்வ்வ்ளவு நீளமா வளரனும்’

குட்டி – ‘அது எப்படி’

அம்மா – ‘அது தான் கதயே. சாமியும் வரம் குடுத்துட்டாராம்’

குட்டி – ‘ரொம்ப ஜாலி இல்ல’

அம்மா – ‘கதய கேளு. அதுக்கு அப்புறம், அது ஒரு குகையில இருந்து நகராமலே எல்லா மரத்திலேருந்தும் எல்லா இலையையும் சாப்டுச்சாம்’.

குட்டி – ‘ம்’

அம்மா – ‘அதனால அது ரொம்ப குண்டாயிடுச்சாம்’

குட்டி – ‘நம்ம ஆகாஷ் மாதிரி. ஹா ஹா’

அம்மா – ‘அப்ப ஒரு பெரிய வெள்ளம் வந்துச்சாம். அதனால அதால நகர முடியலியாம்.

குட்டி – ‘ம்’

அம்மா – ‘அப்ப வெள்ளத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு ரொம்ம பசியாம். அது இந்த ஒட்டகத்தை   சாப்டுடுச்சாம்’

குட்டி – ‘ஏன் ஒட்டகம் ஓடலையா’

அம்மா – ‘சோம்பேறியா ஒரே இடத்துல இருந்ததால அதால ஓட முடியல. அதனால சோம்பேறியா இருக்கக்கூடாது. ஏய் எங்க ஒடற’

குட்டி – ‘விளயாடப் போறேன். நீதான சொன்ன சோம்பேறியா இருக்கக்கூடாதுன்னு’

Loading

சமூக ஊடகங்கள்

அக்னி

யயாதி என்றொரு மன்னன் இருந்தான். அவன் நகுஷனின் புத்திரன்.
அவன் மக்களின் சந்தோஷம் முதன்மையானது என்று ஆட்சி செய்தான்.அவனுக்கு 5 புதல்வர்கள்.
பல வருடங்கள் ஆட்சி செய்தப்பின் ரூபத்தை அழிப்பதும், மிக்க துன்பத்தை தரத்தக்கதுமான முதுமையை அடைந்தான்.
அவன் தனது புதல்வர்களை அழைத்து தான் இளமையோடு இருக்க விருப்புவதாக கூறினான். 
புதல்வர்கள் இதனால் ‘தங்களுக்கு என்ன பயன்’ என்று கேட்டார்கள்.
‘எனது முதுமையை வாங்கிக் கொள்வர்கள் அரசாட்சி செய்யலாம்’ என்றான்.
மகன்கள் விரும்பவில்லை.
பூரூ என்ற மகன் ‘தான் முதுமையை ஏற்றுக் கொள்கிறேன்’ என்றான்.
பல ஆண்டுகள் இளமையோடு இருந்து எல்லா சுகங்களையும் அனுபவித்தான். பல வருடங்களுக்குப் பின் அவனுக்கு ஞானம் வந்தது. ‘காமம் விரும்பியவைகளை அனுபவிப்பதால் தீருவது இல்லை. அது அக்கினியில் இடப்பட்ட நெய் போல் ஜ்வலிக்கிறது. எத்தனை வகையான பொருள்களை அனுபவித்தாலும் அது ஒழிவை அடைவதில்லை.எந்த காலத்திலும் எப்பொழுதும் தீமை செய்யாமல் இருக்கிறானோ அப்போது அவன் ப்ரம்மம் ஆகிறான். எப்பொழுது விருப்பு வெறுப்பு அற்று இருக்கிறானோ அப்போது அவன் ப்ரம்மம் ஆகிறான்’.
மீண்டும் பிள்ளையிடம் இருந்து மூப்பினை வாங்கிக் கொள்கிறான்.
காமியார்த்தமாக சொன்னால் – பெரும்பாலான பிள்ளைகள் தந்தை சொல் பேச்சினை கேட்பதில்லை.
ஆத்மார்த்தமாக சொன்னால் – சுகம் அனுபவித்தல் முடிவில்லாதது. தன்னைத்தான் வெல்ல வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

கருடனின் பிறப்பு – 2

பிறக்கும் போதே மிக பலமுடன் பிறந்து, பலரை துவம்சம் செய்து கத்ரு முன் நிற்கிறார் கருடன்.

‘என்ன வேண்டும்’ – கத்ரு

‘என் தாய் விடுதலை’ – கருடன்
‘அது இயலாது’ – கத்ரு

‘அது நிகழ என்ன செய்யவேண்டும்’ – கருடன்

‘தேவலோகத்திலிருந்து அமிர்தம் வேண்டும்’ – கத்ரு

பல இன்னல்களுக்குப் பிறகு அமிர்தம் எடுத்து வருகிறார். தேவேந்திரனிடம் அமிர்த கலசத்தை மீண்டும் ஒப்படைப்பதாக உறுதி அளிக்கிறார்.

கத்ரு, ‘அமிர்தம் கொண்டுவந்திருக்குறாயா’

கருடன், ‘ஆம், கொண்டுவந்திருக்கிறேன். என் தாயை விடுதலை செய்யுங்கள், ‘

கத்ரு,’ வினதையை விடுதலை செய்யுங்கள். அந்த அமிர்தத்தை கொடு’
கருடன்,’அமிர்தம் கொண்டுவரச் சொல்லிதான் உங்கள் உத்தரவு. உங்களிடம் கொடுக்க சொல்லி அல்ல’ என்று கூறி அமிர்த கலசத்துடன் தேவேந்திரனை சந்திக்க புறப்படுகிறார்.

பெரிய திருவடி போற்றி,போற்றி

Loading

சமூக ஊடகங்கள்

கருடனின் பிறப்பு – 1

கருடனின் பிறப்பு (சிறிய வடிவில் – மூலம் – மகாபாரதம் – M. V. ராமானுஜாச்சாரியார்)
கத்ரு, வினதை இரு அரசிகள்.
கத்ரு – நாகங்களின் தாய்
வினதை – அருணன் மற்றும் கருடனின் தாய்.

ஒரு முறை வானில் வெள்ளைக் குதிரை பறந்து செல்கிறது.

அப்போது அதன் வால் கருப்பாக இருப்பதாக கத்ரு உரைக்கிறாள். வெள்ளையாக இருப்பதாக வினதை உரைக்கிறாள். யார் தோற்றாலும் ஒருவர் மற்றவருக்கு 1000 வருடம் அடிமையாக வேண்டும் என்று முடிவாகிறது.

அன்று இரவு கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து, அவைகள் வாலில் தங்கும் படி கேட்டுக் கொள்கிறாள். அதனால் ‘வால் கருப்பாக தெரியும் ‘என்றும், ‘நான் ஜெயித்து விடுவேன்’ என்றும் உரைக்கிறாள். நாகங்கள் ‘நீ தவறு செய்கிறாய்’ என்று உரைக்கின்றன. அவள் கேட்கவில்லை. பின்பு அவைகள் ஒத்துக் கொள்கின்றன. போட்டியில் கத்ரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுகிறது.

வினதை  அடிமையாகி விடுகிறாள்.

அப்பொழுது வினதை கருவுற்றிருந்தாள். அவளிடம் இரு முட்டை இருந்தது.
500 வருட காலம் காத்திருந்தும் எதுவும் நிகழவில்லை. ஒரு முட்டையை உடைத்து விடுகிறாள். அதிலிருந்து அருணன் வெளிவருகிறார். ‘அவசரப் பட்டு உடைத்து விட்டாய் தாயே, இன்னும் ஒரு 500 வருட காலம் காத்திரு, மிகவும் பலசாலியாகவும், மிகவும் புத்திசாலியுமான ஒரு மகன் பிறப்பான்’ என்று கூறி மறைந்துவிடுகிறார்.
பின்பு..
(தொடரும்)

Loading

சமூக ஊடகங்கள்