அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கஞ்சம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கஞ்சம்

பொருள்

  • ஒருவகை அப்பம்
  • கஞ்சா
  • துளசி
  • வெண்கலம்
  • கைத்தாளம்
  • பாண்டம்
  • தாமரை
  • நீர்
  • வஞ்சனை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அஞ்சு முகத்தி நவ முகத்தி
   ஆறு முகத்தி சதுர் முகத்தி
அலையில் துயிலும் மால் முகத்தி
   அருண முகத்தி அம்பரத்தி
பஞ்சா ஷரத்தி பரிபுரத்தி
   பாசாங்குசத்தி நடுவனத்தி
பதுமா சனத்தி சிவபுரத்தி
   பாரத்தனத்தி திரிகுணத்தி
கஞ்ச முகத்தி கற்பகத்தி
   கருணாகரத்தி தவகுணத்தி
கயிலாசனத்தி நவகுணத்தி
   காந்தள் மலர்போல் சதுர்கரத்தி
மஞ்சு நிறத்திபரம்பரத்தி
   மதுர சிவந்தி மங்களத்தி
மயிலாபுரியில் வளரீசன்
   வாழ்வே அபயாம்பிகை தாயே!

அவயாம்பிகை சதகம் – நலத்துக்குடி கிருஷ்ண ஐயர்

கருத்து உரை

சிவனைப்போல ஐந்து முகமும், ஒன்பது சக்திகளின் முகமும், கௌமாரி நிலையில் ஆறு திருமுகமும், ப்ராமி நிலையில் நான்கு முகமும், கடலில் தூங்கும் திருமாலை ஒத்த முகமும், மகேஸ்வர நிலையில் சிவந்த முகமும், ஆகாயமே வடிவாகவும், பஞ்சாட்சரத்தை இடமாகவும், கையிலே பாசமும் ,அங்குசமும், பூமிக்கு நடுவில் இருக்கும் விந்திய அடவியில் இருக்கின்றவளும்,  தாமரையில் வீற்றிருப்பவளும்,. சிவபுரத்தை ஆட்சி செய்வவளும், கருணை மிகுந்த மார்பகங்களை கொண்டவளும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்பவளும், தாமரை முகம் கொண்டவளும், கற்பக மரத்திற்கும் சக்தி கொடுப்பவளும், கருணை கொண்டவளும், திருக்கயிலை மலையில் ஈசனின் கூட இருப்பவளும். நவரச குணங்கள் கொண்டவளும், காந்தள் மலர் போன்ற நான்கு கரங்கள் கொண்டவளும். மேகம் போன்ற நிறம் உடையவளும், சிவந்த உதடுகள் உடையவளும் ஆன அழகான அபயாம்பிகைத்தாய் மயிலாடுதுறையில் வாழ்கின்றாள்.

விளக்க உரை

துக்கடா

சைவ சித்தாந்தம் வினா விடை

சித்தாந்தம்முடிந்த முடிவு

Loading

சமூக ஊடகங்கள்

மகார ப்ரியை – சக்தி பீடங்கள் – 2 – காமாக்யா கோவில்

மகாரம் – சக்திச் சுடர் – அஜபா மந்திரம்
நூல் திருமந்திரம்
பாடல் எண் : 957
தந்திரம் : 4ம் தந்திரம்
பாடல்
அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே. திருமந்திரம்957
பொருள்
அகரமும் சகரமும் அரனுக்குரிய (சிவனுக்குரிய) மந்திரமாகும். சிவனை `ஔ` என்றும், `சௌ` என்றும் கூறிப் பொருந்தும் மந்திரமே `அம்` என்றும், `சம்` என்றும் கூறப்பெறும். இது மறை பொருளாகும்,இதன் பொருளை எவரும் அறியவில்லை. இவை இரண்டுடனும்  மகாரமும் சேரும் போது அது சிவசக்தி ரூபமாகிறது. இதுவே ஹம்ச மந்திரம் எனும் அஜபா ஆகும். இவ்வாறாக ஹம் எனும் ஆன்மாவும், சம் எனும் சிவனும் அநாதி நித்ய பொருள்.
 
சக்தி பீடங்கள் – 2 – காமாக்யா கோவில் 
 kaamak10_eegarai
புகைப்படம் :  eegarai
 
எண்
குறிப்பு
விளக்கம்
1
தலம்
காமாக்யா கோவில்
2
தலம் பிற பெயர்கள்
காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம், காமாக்யா தேவி கோவில், மஹிசமர்த்தினி கோவில், துர்கா மந்திர், நானி மந்திர், கரவிப்பூர் தேவி மந்திர்
3
தேவியின் பெயர்
காமாக்யா கோவில்
4
தேவியின் பிற பெயர்கள்
திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி
5
உடல் பகுதி
யோனி
6
பீடம்
காமகிரிப் பீடம்
7
பைரவர்
உமாநந்தர்
8
இருப்பிடம்
நீலாச்சல் குன்று, குவகாத்தி நகர்,அசாம் மாநிலம்
9
வழித்தடம்
கவுஹாத்தி நகர மையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள நீலாச்சல் மலை உச்சியில் இந்த கோயில் உள்ளது.
10
வடிவம்
11
விழாக்கள்
அம்புபச்சி மேளா,துர்க்கா பூஜா,மானஷா பூஜா
12
இதரக் குறிப்புகள்
  
புராணத் தொடர்பு
 
· பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும். திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன. ஏனைய காளி, தாரா,  புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி ஏழு தேவியருக்கும் தனித்தனிக் கோவில்களாக காமாக்கியா கோவிலுக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
· தேவிக்கு தனியே உருவச்சிலை எதுவும் இல்லை. ஆலயத்தில் உள்ள ஒரு குகையில் யோனி முத்திரை பதித்த ஒரு கல்பீடமே அம்பிகையாக வழிபடப்படுகிறது.
·  சிவனால் சம்ஹாரம் செய்யப்பட்ட மன்மதன் மீண்டும் தனது ரூபத்தை மீண்டும் பெற்ற இடம்
· வராஹ அவதாரமெடுத்து ஹிரண்யாக்ஷணை ஸம்ஹாரம் செய்து, நீருக்குள் முழுகியிருந்த பூலோகத்தைத் தம்முடைய நெற்றிப் பல் நுனியில் கொத்தி எடுத்துக் கொண்டு வந்தபோது அவருடைய பல் பட்ட இடம்
·   நரகாசுர யுத்தம் நடந்த இடம்
·   பஞ்ச பாண்டவர்களால் வழிபாடு செய்யப்பட்ட தேவி (ஆயுதங்களை காக்க வழிபாடு செய்யப்பட்டது- விராட பருவம், வெற்றிக்காக பிராத்தனை செய்யப்பட்டது மற்றொருமுறை)
·   தொடர்புடைய நூல்கள் – தந்திர சூடாமணி – தந்திர நூல்கள்,காளிகா புராணம்,வேத வியாசரின் தேவி பாகவத புராணம்
இத்திருக்கோயில் பற்றி மேலும் தகவல் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.
 

Loading

சமூக ஊடகங்கள்

மகார ப்ரியை – சக்தி பீடங்கள் – 1 – ஹிங்குலாஜ் மாதா

மகாரம் – சக்திச் சுடர் – வாலை சூட்சம்
ஆமப்பா சிவயோகம் செய்வதற்கு
அப்பனே அகாரமுடன் உகாரஞ் சொன்னேன்
தாம்ப்பா மகார மென்ற வாலை தன்னை
தாரணியில் ஆர றிவார் சங்கை மார்க்கம்
காமப்பால் கொண்ட சிவகெங்கை யான்
கன்னி மனோன் மணியின் நாதமென்றும்
நாமப்பா சொல்லுகின்றோம் செந்தேனென்றும்
நாதாந்த நாதமென்றும் காரமாமே  
 
அகத்தியர் அந்தரங்க தீஷா விதி
சிவயோகம் போன்ற கடுமையான யோகமுறை மார்கங்கள் செய்யும் போது விலங்குகள் மற்றும் மனிதர்களால் தொல்லைகள் ஏற்பட வாய்புண்டு. இதற்காக சித்தர்கள் நெற்றியில் வசிய திலகம் அணிவார்கள். அப்படிப்பட்ட சிவயோகம் செய்ய அகார விளக்கமும் உகார விளக்கமும் சொன்னேன். மகாரம் என்ற வாலையை இந்த பூமியில் யார் அறிவார். (சிவயோக முறைக்கு விளக்கம் உண்டு, வாலை முறைக்கு விளக்கம் இல்லை என்பது மறைபொருள் – எனவே எளிதில் அறியப்பட முடியாதது. குருமுகமாகத் தான் அறிய வேண்டும் என்பதும் மற்றொரு பொருள்). அமுத தாரணை அறிய மகார மென்ற வாலையை அறிய வேண்டும். அவ்வாறு அறிய நீர் வேண்டும். அதுவே சிவ கெங்கைத் தீர்த்தம். இதுவே கன்னி மனோன்மணித் தாயாரின் நாதமென்றும், செந்தேன் என்றும், நாதாந்த நாதமென்றும் நாம் உரைக்கின்றோம்.- 
ஹிங்குலாஜ் மாதா
புகைப்படம் : தினமணி

எண்
குறிப்பு
விளக்கம்
1
தேவியின் பெயர்
ஹிங்குளா / சர்ச்சிகா / கோத்தரி / மஹாலக்ஷ்மி / கோடரீ
2
உடல் பகுதி
ப்ரம்மராந்தரம் (தலையின் ஒரு பகுதி அல்லது உச்சந்தலைப் பகுதி) அல்லது சகஸ்ராரம் (செந்தூரம் வைக்கும் நெற்றிப் பகுதி
3
பைரவர்
பீமலோசன பைரவர் அல்லது சிவபாரி பைரவர்
4
இருப்பிடம்
பாகிஸ்தான் – பலூசிஸ்தான் – லாஸ் பெலா  அருகில் – ஹிங்கோல் ஆற்றங்கரை – ஹிங்குளாஜ் மலைக்குகை – ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில்
5
வழித்தடம்
பாகிஸ்தான் – கராச்சி –  குவெட்டா (quetta) சாலையில் 120 கி.மீஜீரோ பாய்ண்ட்-மேற்கு நோக்கி லியாரி (lyari) டவுன்- பௌஜி கேம்ப் (fauji camp) அஸப்புரா சரை (asha pura sarai)
6
வடிவம்
புராணத் தொடர்பு
·   ஹிங்குலி –  முன் வகிட்டுக் குங்குமப் பொட்டு (அல்லது) செந்தூரம்
·   ராமன்,சீதை மற்றும்ம் இலக்குவன் ஆகியோர்கள் தங்கள் வனவாசத்தின் போது தரிசித்த தலம்
 
புராணம் – 1
 
தற்போதைய சிந்துப் பகுதியை ரத்னசேன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் பரசுராமர் காலத்தைத் சார்ந்தவன். அவனுக்கு ஐந்து மனைவிகள்  அவர்களின் பெயர்கள் சந்திரமுகி, பத்மினி, பத்மா, சுகுமாரி மற்றும் குசாவதி என்பனவாகும். அவர்களின் மகன்கள் முறையே ஜெய்சேன், பிந்துமான், விஷால், சந்திரசால் மற்றும் பரத் ஆகியோராவர். பரசுராமர் இம்மன்னனின் சமகாலத்தவர். எனவே பரசுராமரின் சபதம் (உலகின் அனைத்து சத்திரியர்களையும் அழிப்பேன்) முடிக்கும் காரணமாக இங்கு அவர் வருவது குறித்து அனைவரும் கவலை உற்றனர்.
 
அதனால் சரஸ்வதி நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்திருந்த ததீசி முனிவரிடம் இவர்கள் அனைவரும் அடைக்கலம் புகுந்தனர்.ரிஷிகளின் ஆஸ்ரம எல்லைக்குள் போரிடக் கூடாதென்று விதியிருந்ததால் பரசுராமர் அங்கு செல்லவில்லை
 
மன்னன் ஆஸ்ரம எல்லை அறியாது வெளியே சென்றுவிட பரசுராமர் அவனைக் கொன்றார். அவனது மனைவிகள் மன்னனுடன் உடன்கட்டை ஏறினார்கள். ததீசி முனிவர் சேய்களை பாதுகாத்து, அந்த ஐவருக்கும் பிராமணர் போல் வேடமிட்டு வேதங்கள் மந்திரங்கள் முதலிய பல பயிற்சிகளை அளித்திருந்தார். அதனால் பரசுராமர் அவர்களை அடையாளம் காணாது கொல்லாமம் விட்டுச் சென்றார்.
 
ததீசி முனிவர் அனைவருக்கும் அவர்கள் பாதுகாப்பிற்காக ஹிங்குலா தேவி மந்திரத்தை உபதேசித்தார்.
 
தன் தம்பிகளுடன் நாட்டிற்கு திரும்பிச் சென்ற ஜெய்சேன் ஹிங்குலா தேவி மந்திரத்தை பாராயணம் செய்து தேவியின் அனுக்ரகம் பெற்று ஆட்சி செய்தான். இதனால் அவனை அடையாளம் கண்ட பரசுராமர் அவனை அழிக்க எண்ணி விரைந்தார். ஹிங்குலா தேவி ஜெய்சேன் பற்றிநல்லுள்ளம் படைத்தவனென்றும் அவன் தன் பக்தனென்றும்கூறி பரசுராமரைத் தடுத்தாள். அதனால் பரசுராமர் கோபம் தணிந்து தேவியை வணங்கித் திரும்பிச் சென்றார். அதனால் ஜெய்சேன்ப்ரம்மகுல க்ஷத்ரியன்ஆனான். ஹிங்குலா தேவி ப்ரம்மகுல க்ஷத்ரியர்களின் குலதெய்வமானாள்
 
புராணம் – 2
 
முன்னொரு காலத்தில் கோயில் பகுதியில் ஹிங்கோலி என்ற ஒரு பிரிவினரை  விச்சதர் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவனுக்கு ஹிங்குல் மற்றும் சுந்தரன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.

இளவரசன் சுந்தரன் அண்டை நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு மக்கள் பலரைக் கொன்று பெரும் செல்வத்தைக் கொள்ளை அடித்தால் அப்பகுதி மக்கள் சிவனிடம் தங்கள் குறைகளை முறையிட்டதால் சிவன் விநாயகனை அனுப்பி சுந்தரனை சம்ஹாரம் செய்ய வைத்தார்.
 
ஹிங்குல் தன் சகோதரன் இறப்பிற்கு பழிவாங்க நினைத்து பல வருடங்கள் தவம் செய்து மூவுலகத்திலும் உள்ள எந்த உயிர்களாலும் தனக்கு மரணம் நிகழக் கூடாதென்றும் சூரிய ஒளி புக இயலாத இடத்தில்தான் தன் உயிர் போக வேண்டுமென்றும் வரம் பெற்றான். pin அனைவரையும் கொடுமைப்படுத்தி பெண்களின் கற்பையும் சூறையாடினான். அதனால் ஹிங்கோலி மக்கள் பவானி மாதாவின் மீது பக்தி செலுத்தி, வழிபட்டு, அரசனின் தவறான எண்ணத்திலிருந்து தங்களைக் காக்க தேவியிடம் உதவி கோரிப் ப்ரார்த்தித்தனர்.
 
ஒரு நாள் தேவியானவள் அவனை காட்டிற்கு அழைத்து வந்து தோன்றி, மறைந்து, மீண்டும் தன் எட்டுக் கரங்களிலும் வாள், சூலம் போன்ற ஆயுதங்கள் ஏந்தி சிவந்த கோபமான கண்களுடன் இருள் சூழ்ந்திருந்த தோன்றிளாள்.
 
தனது இறுதி கணம் அறிந்து தேவியிடம் மன்னிப்பு வேண்டி பின் ஒரு, சிலை அமைத்து தன் பெயரிலே வழங்க வேண்டும் என்றும், யார் இவ்விடத்தில் தேவியை உண்மையான பக்தியுடன் வணங்குகிறார்களோ அவருக்கு மீண்டும் பிறவாத வரமருள வேண்டுமெனவும் , மனந்திருந்தி நல்லெண்ணத்துடன் இங்கு வருவோர் நல்லவரோ கெட்டவரோ நீ அவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டினான்.அவனை அழித்த அன்னை அவ்விடத்திலேயே என்றும் நீங்காது அமர்ந்தாள்.
 
புராணம் – 3
 
கிராமம் ஒன்றில் மூன்று சகோதரர்கள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து வந்தனர். ஒருவன் துணி தைப்பவன். ஒருவன் போர்வீரன்மற்றொருவன் பொற்கொல்லன்  (சோனி ஸொனி) இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் அன்னையை பூஜித்து அவளின் ஆசி பெற்று தம் வேலையைச் செய்து அவரவர் சம்பாதித்ததை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தனர்.
 
போர் வீரனால் மட்டும் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. அதனால் அவன் மனமுடைந்து அன்றிரவு ஹிங்குலாஜ் மாதா கோவிலுக்குச் சென்று தன்னை ஏன் பிடிக்கவில்லை என்று தாயிடம் முறையிட்டு அழுது புலம்ப ‘யாருக்கு என் கையிலுள்ள குங்குமத்தை முதலில் வைக்கிறேனோ அவனே எனக்கு மிகவும் பிடித்தமான பக்தன்’ என்று சொன்னாள்.
 மறுநாள் காலை அவர்கள் வீட்டு வாசலில் தேவி தோன்றினாள்.
 
துணி தைப்பவன் கைகால் அலம்பச் சென்றான். பொற்கொல்லன் பூப்பறிக்கச் சென்றான். தேவி போர்வீரனை நோக்கி வந்து குங்குமத்தை அவன் நெற்றியில் வைத்தாள். பின் பொற்கொல்லனுக்கும், துணி தைப்பவனுக்கும் குங்குமம் வைத்தாள்.

(இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

மகார ப்ரியை – சக்தி பீடங்கள் – 51- முன்னுரை

எங்கும் உளபொருளாய், ஓங்கார வடிவமாய், குலத் தெய்வமாக இருக்கும் கணபதியை வணங்குகிறேன்.
 
விழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்என்பதாய், சிவனின் மைந்தனுமாய், சிவனுக்கு உபதேசம் ஈந்தவனுமாகிய குமரவேலின் திருத் தாளினை பணிகிறேன்.
 
சகல உயிர்களிலும், சகல காலங்களிலும் சதா சர்வ காலமும் உறைந்திருக்கும் ஈசனும், எண்ணமும் சொல்லும் மாறாது என்றும் ஈசனிடம் உறைந்திருக்கும் என் தாயும், அகில நாயகியுமான கருணை நாயகியின் திருவடியினைப் பற்றுகிறேன்.
 
என் தாழ் நிலை அறிந்தும், வினாடிக்கும் குறைவான நேரமும் அகலாது என்னை சேய் போல் காத்து, என்னின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து, எக்காலத்திலும் நிறை பொருளாக என்னுள் இருந்து என்னை இயக்கும் எனது குருநாதரின் திருத்தாள் திருவடிகளைப் பணிகிறேன்.
 
‘சக்தி உரை செய் சக்தி எமக்கில்லை’ என்பதால் இது குறித்து பலநாட்களாக எழுதாமல் இருந்தேன். ‘உயிர் உறை குருநாதன்’ உத்திரவின் படியே இத் தொடரை துவங்குகிறேன்.

மிகப் பெரிய சக்தியை தன்னுள் இருக்கும் இறை சக்தி மகாரமாக இருக்கிறது. பிரணவ எழுத்துக்களில் மகாரம் முடிவு என்று கொண்டாலும், முழு மந்திர சக்தியினை வெளிப்படுத்தும் எழுத்தாகவே மகாரம் இருக்கிறது.
 
ஓம் மகார ரூபாய நம என்பதும் மகாரப் ப்ரியை என்பதும் ஒரு பொருளில் வருகிறது. திருமந்திரத்திலும் மகார எழுத்தின் தன்மையும் விளக்கங்களும் மிக நீண்டதாகவே காணப்படுகிறது.
 
அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் என்னும் ஐந்துங் கூடிப் பிரணவமாகும்; இவை சூக்கும பஞ்சாக்கரம் எனவும் பெறும்;

அகார வுகார மகங்காரம் புத்தி
மகார மனஞ்சித்தம் விந்துப்பகாதிவற்றை
நாம முளவடிவா நாடிற் பிரணவமாம்
போதங் கடற்றிரையே போன்று”  – சிவஞானபோத வெண்பா
இவ்வாறு பிரணவப் பொருளின் நாயகமாக இருப்பது மகாரமே.

மகாரத்தின் போது(அதாவது மகார உச்சரிப்பில்  ம்பீஜம்கும்பகம்எளிதில் கைவரப் பெறும்.இதில் பூரண கும்பகமும், கேவல கும்பகமும் எளிதில் கைகூடும்.

தந்தையால் அவமானப்படுத்தப்பட்ட தாட்சாயிணி  யாகம் அழியுமாறு சாபம் விடுத்தாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார்..  இது தந்தை தந்த உடல் என்று நினைந்து தீயினில் தனது உடலை எரித்தாள். தாட்சாயிணியின் மரணத்திற்குப் பிறகு சிவன் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அது நிலைபெறாமல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதை நிறுத்துவதன் பொருட்டு திருமால் தனது சக்ராயுதத்தால் தாட்சாயணியின் இறந்த உடலை 51 துண்டுகளாக வெட்டினார். இவ்வாறு உடல் விழுந்த பகுதிகள் சக்தி பீடங்களாயின. 
இவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்று கூறப்படுகின்றன. ஐம்பத்தியொரு அட்சரங்கள் பற்றி எல்லா சித்தர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.
எனும் திருமந்திரம் பாடலுக்கு ஏற்ப அவளை வணங்காத சித்தர்கள் இல்லை.
இந்த பீட நிர்ணயமும் அதற்கான தோத்திர முறைகளையும் பற்றி சிவபெருமான் தேவியிடம் கேட்க, தேவியே தனக்குரிய சக்தி பீடங்கள் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது.
இக்காரணங்கள் பற்றியே மகார ப்ரியைசக்தி பீடங்கள் எனும் இக்கட்டுரைகள்.

Loading

சமூக ஊடகங்கள்

அஷ்ட தசா புஜ துர்க்கை

அஷ்டம்எட்டு
தசபத்து
புஜம்கைகள்
பதினெட்டு கைகளுடன் கூடிய துர்க்கை. ஸ்ரீ மஹாலக்ஷ்மி துர்க்காம்பிகை என்ற பெயரும் உண்டு.
அகிலம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது அன்னையின் அருள் கருணை. அதனாலே சித்தி அடைய எண்ணுபவர்களின் முதன்மை தெய்வமாக தாய் இருக்கிறாள். (வாலை, குமரி பின் அன்னை).
அன்னைக்கு என்று பல்வேறு வடிவங்களும் பல்வேறு ஆயுதங்களும் இருந்தாலும், அவைகளால் குறிப்பிடப்படும் அருளள் முதன்மையானது. அது சாந்த வடிவமே என்பதற்கு சான்றாகவே இத் துர்க்கை.
வெகு சில இடங்களில் மட்டுமே 18 கைகளுடன் கூடிய இவ்வடிவம் காணப்படுகிறது.
இவ் வடிவம் சார்ந்த துர்க்கை சைவ மடங்களில் தலையானதும், முதன்மையானதும் ஆன தருமபுரத்தில்(மயிலாடுதுறையில் இருந்து 3 KM ) அமைந்துள்ளது.
மடத்திற்கு வெளியில் மற்றொரு துர்க்கை. அது வேறு துர்க்கைவன துர்க்கை
இது 25வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ கயிலை மாமுனியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
25வது குருமகா சன்னிதானம் அவர்கள் காளியினை நேரினில் கண்டவர்கள். அவர்கள் ஒரு முறை கல்கத்தா சென்றிருந்த போது காளி, சன்னிதானம் அவர்களிடம் நேரில் பேசி தனது கோபம் முழுவதையும் குறைத்து அருள் வழங்க எண்ணம் கொண்டதாக தெரிவித்தாள்.
அதன்படி இச்சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டு கல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது,
அன்னை வரும் போது பரிவார தேவதைகள் வரமால் இருக்குமா? அவர்களும் அன்னையுடன் புறப்பட்டார்கள். அவர்கள் அம்பாள் முன் மகா மேருவாக (32 பட்டைகளுடன்) அருள் புரிகிறார்கள்.
உத்திராட நட்சத்திரத்திற்கு பரிகார தலம்.
தற்போது திரு. ரமேஷ் குருக்கள் அவர்கள் அம்பாள் பூஜையினை கவனித்து வருகிறார்கள். (அலங்காரம் அழகாகும் வரை விடமாட்டார்). கைப்பேசி : +91-94435-91462
 
 

Loading

சமூக ஊடகங்கள்

அபயாம்பிகை சதகம்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் செய்த புண்ணியத்தால் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு  கிருஷ்ணசாமி என்று பெயர் இட்டனர்.

சிறு வயதிலே பெற்றோரை இழந்தார் கிருஷ்ணசாமி.

ஒரு முறை அவரது அழுகுரல் கேட்டு அம்பிகை வந்தாள். அமுது ஊட்டினாள். ஆறுதல் படுத்தினாள். அவ்விடம் அகன்றாள்.

ஒருமுறை கோவிலில் தன் சன்னதிக்கு அழைத்து சென்று மறைந்தாள்.

ஒரு முறை அர்த்த ஜாம வழிபாட்டை முடித்து வரும் போது, கால் இடறி விழுந்தார். விழும் போது ‘அம்மா அம்மா’ என்று அலறினார்.

அன்று முதல் அர்த்த ஜாம வழிபாடு முடிந்த உடன், யாரும் இல்லாமல் கைவிளக்கு மட்டும் தொடந்து வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

தன் நிலை குறித்து வருந்தி ‘உன்னை எப்படிப் பாடுவது’ என்று புலம்பினார்.
‘நீ பாடு, பாட்டு தன்னால் வரும் ‘ என்று உத்திரவிடுகிறாள் அம்பிகை.
உள்ளம் உருகி பாடிய பாடல்களே ‘அவயாம்பிகை சதகம்’. மொத்தம் 100 பாடல்கள்.

இவருக்கு திருமணம் நடைபெற்றது, ஆனால் இல்லறம் ஆன்மீகம் சார்ந்த சாக்த வழிபாடாகவே இருந்தது. ஊர் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரு அர்த்த ஜாம வழிபாட்டிற்குப் பின் ஜோதியில் கலந்தார்.

கனிந்து கனிந்துன் றனைப்பாடிக் கசிந்தே இருகண் புனல்பெருகக்
காது உபயம் உனதருளாம் கதையைக் கேட்க உனதடியார்
இனந்தான் உறவாய் மனம்புதைய எந்த நாளும் அவர் இருந்த
இடத்தை இருதாள் சுற்றிவர இரவும் பகலும் நினதருளை
நினைந்த படியே சிந்தைசெயும் நெறியை உதவி எனைக்காப்பாய்
நித்யா னந்தப் பழம் பொருளே நிமலி அமலை புகழ்விமலி
வனைந்த சடலத் தொழில்உனது அடிக்கே இதமாய் அருள்புரிவாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே.


பச்சை முழுப்பொன் னிறமுடனே பளிங்கு பவள முடன்நீலம்
பருத்த மேக முடன்ஆறாய்ப் பரவி யிருக்கும் பசுங்கிளியே
அச்ச மறவே அதன்மீதில் அருண வுதய ரவிகோடி
அகண் டாகார ரூபமதாய் அமர்ந்த சிவமோ கனமாதே
செச்சை யதன்மேல் அணிச்சிலம்புஞ் சிறுகிண் கிணித்தண் டைகளொலிக்கச்
சிவனோ டிருக்குங் கொலுமுகத்தைச் சிறியேன் காண அருள்புரிவாய்
வச்ச உனது பொருள்எனக்கு வரத்தாற் கருத்தில் உரைத்தருள்வாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே

பாடல்கள் மிக அழகான தமிழில் இருக்கின்றன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் என்பதால் மிகப் பெரிய விளக்க உரைகள் தேவை இல்லை. ஆனால் அப்பாட்டின் கருத்துக்கள் மிக ஆழமானவை.

பாடல்கள் அனைத்தும் ‘மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே’ என்றே முடிகின்றன.

உலக அன்னையின் அனுபவங்களை உணர்ந்தவர்கள் எவ்வாறு மீள முடியும்.

Loading

சமூக ஊடகங்கள்

சாக்த வழிபாடும் விஜய தசமியும்

சாக்த வழிபாட்டின் (தேவியை – அம்பாளை) மிக மிக முக்கியமான பண்டிகையாக இந்த நவராத்ரி கொண்டாடப்படுகிறது.

மற்ற வழிபாடுகள் போலவே சாக்த வழிபாட்டிலும் பல வழிமுறைகளும் பல நிலைகளும் உண்டு. (உ.ம் வாரகி உபாசனை முறைகள், ஸ்ரீவித்யா உபாசனை முறைகள்).

புரட்டாசி மாதம் வளர்பிறை முதலாவதாக ஒன்பது நாட்களை நவராத்திகளாக கொண்டாடுகிறோம்.

அரக்கர்களை வென்று வாகை சூடிய நாள் என்பதால் விஜய தசமிக்கு சிறப்பு.

வனவாசம் முடிந்து, அஞ்ஞாத வாசம் (மறைந்திருந்த காலமும் முடிந்து)  தங்களது படைக்கருவிகள் அனைத்தையும் வன்னி மரத்திலிந்து அர்ஜுனனும் மற்றவர்களும் எடுத்தது விஜய தசமி அன்று.

இவ்விடத்தில் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

மகா பாரதப் போரில் வெல்ல துர்க்கையை உபாசனை செய்யுமாறு கிருஷ்ணன் பணிக்கிறான். அப்போதும் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

இரண்டுமே ஒரு தெய்வத்தை பற்றியது என்றாலும் வெவ்வேறு மந்திரங்கள்.

பல ரிஷிகளும் முனிவர்களும் சாக்க வழிபாட்டிற்குப் பிறகே உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள்.

லலிதா சகஸ்ரநாமமும் ஸ்ரீ மாதா என்றே துவங்குகிறது.

அன்னையின் கருணை அளப்பரியது.

Loading

சமூக ஊடகங்கள்