தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருவடுகூர்
- மூலவர் லிங்கத்திருமேனியில் வடுக்களுடன் இடதுபுறம் சற்றே சாய்ந்தவாறு திருக்காட்சி.
- அஷ்ட பைரவர்களில் ஒருவரான சம்ஹார பைரவர் எனும் வடுக பைரவர், முண்டகன் என்னும் அசுரனைக்கொன்ற பழிதீர ஈசனை வழிபட்டத் தலம்.
- பிரம்மாவின் சிரத்தை சிவனார் கொய்த தலம் – மற்றொரு தல வரலாறு
- கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணி அமைப்பு
தலம் | திருவடுகூர் |
பிற பெயர்கள் | வடுகூர், ஆண்டார்கோயில், ஆண்டவனார் கோயில், திருவாண்டார் கோயில் |
இறைவன் | வடுகீஸ்வரர், பஞ்சநதீஸ்வரர் , வடுகநாதர் , வடுகூர் நாதர் |
இறைவி | திரிபுர சுந்தரி, வடுவகிர்க்கண்ணி |
தல விருட்சம் | வன்னிமரம் |
தீர்த்தம் | வாமதேவ தீர்த்தம் |
விழாக்கள் |
கார்த்திகை அஷ்டமி, சித்திரைப் பெருவிழா ஏக தின உற்சவம், வைகாசி விசாகம், மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம் |
மாவட்டம் | |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு பஞ்சநாதீஸ்வரர் திருக்கோவில் திருவாண்டார் கோவில் அஞ்சல் வழி கண்டமங்கலம், புதுச்சேரி – 605102 |
வழிபட்டவர்கள் | |
பாடியவர்கள் | திருஞானசம்பந்தர், ,அருணகிரிநாதர், வள்ளலார் |
நிர்வாகம் | தொல் பொருள் ஆய்வுத் துறை |
இருப்பிடம் | விழுப்புரம் – பாண்டிச்சேரி ரயில் பாதையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவு |
இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 206 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 16 வது தலம். |
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 87
திருமுறை எண் 1
பாடல்
சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே
பொருள்
சுடும் தன்மை மிக அதிகமாக இருக்கும் தீபமாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினை உடையவரும், கொடிய மழு ஆயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், காளை மேல் ஊர்ந்து வருபவரும், மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும், நீர் வளம் மிக்க வடுகூர் எனும் தலத்தில் உறையும் இறைவர் ஆவார்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 87
திருமுறை எண் 8
பாடல்
பிறையு நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரி லாடும் மடிகளே
பொருள்
அதிர்வுகளைத் தரும் பறையும், வேய் குழல் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகளானவர், இளம்பிறை மற்றும் பெருகும் கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர். வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)