இயல்பாய் இரத்தல்

புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்

 

எவரும் அறியாமல்
என் கைகள் நீண்டும் குறுகியும் ஆகின.
யாரும் அற்ற ஒரு பொழுதினில்
யாசகம் வேண்டி நின்றேன் ஒருவனிடம்.
‘உனக்கு மட்டும் ஏன் கைகள் இப்படி ஆகின்றன?’
என்றான் அவன்.
யாசித்தல் இயல்பு ஆன பொழுதுகளில்
இடம் சென்று பெறுதல் அரிதானதால்
இவ்வாறானது என்று உரைத்தேன்.
எப்பொழுது இது மறையும் என்றான்?
இயல்பாய் ஒருவன்
இடும்போது மறையும் என்றேன்.
எவரும் அறியா விஷ்யங்களை
இனம் கண்டு கொண்டது எங்கனம் என்றேன்?
இயல் புன்னகை பூத்து
கைகளில் இடுகிறான்.
புவனம் கனகம் ஆகிறது
காலம் உறைகிறது.

சமூக ஊடகங்கள்

சுணங்கன்

புகைப்படம் : இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன் அவர்கள்

​ஆதி நாளில் நீ தனித்திருந்தாய்;
கூடி வந்த காலமதில்
நாம் தனித்து இருந்தோம்;
அகிலின் வாசம்
அறையை நிரப்புகிறது.
பெரும் தீயாகி என்னை​​
உன்மடியினில் கிடத்துகிறாய்.
மோனத்தீயாகி
முத்தமொன்றை இடுகிறாய்
கண்களில் இருந்து விழிநீர் அருவியாகி
வழிந்தோடுகிறது.
புறவெளியில்
மாய உலகில் காற்றினை உரசி
வார்தைகள் தோன்றி மறைகின்றன.
‘இரத்தம் இருந்தப்ப ஆடின,
சுண்டினப்பின் கண்ணீர் விட்டு
என்ன புண்ணியம்’

 

*சுணங்கன் – நாய் போலத் திரிபவன்

சமூக ஊடகங்கள்

2038 – Heart as your identifier

 • New non-contact, remote biometric tool could be next advance in computer security
 • A University at Buffalo-led team has developed a computer security system using the dimensions of your heart as your identifier.
 • The system uses low-level Doppler radar to measure your heart, and then continually monitors your heart to make sure no one else has stepped in to run your computer.
 • The system is a safe and potentially more effective alternative to passwords and other biometric identifiers, they say. It may eventually be used for smartphones and at airport screening barricades.
 • The signal strength of the system’s radar “is much less than Wi-Fi,” and therefore does not pose any health threat – Wenyao Xu, PhD, the study’s lead author, and an assistant professor in the Department of Computer Science and Engineering in UB’s School of Engineering and Applied Sciences.
 • The system needs about 8 seconds to scan a heart the first time, and thereafter the monitor can continuously recognize that heart.

Source : https://www.sciencedaily.com/releases/2017/09/170925133000.htm

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1. Version 1.0
மனைவி : ஏங்க, இங்க வாங்க, இந்த கம்யூட்டர் சனியன் ஓப்பன் ஆக மாட்டேங்குது.
கணவன் : நாம போன தடவ சண்ட போட்டப்ப பாஸ்வேடு செட் பண்ணினேன். அதால இப்ப ஓபன் ஆகாது.
மனைவி : தெனம் தாண் சண்ட போடறோம், என்னைக்குன்னு எப்படி கண்டு புடிக்கிறது. ஓபன் ஆகிடுச்சி.

2. Version 101.0
மனைவி : ஏங்க, இங்க வாங்க, இந்த கம்யூட்டர் சனியன் ஓப்பன் ஆக மாட்டேங்குது. போன தடவ கோவத்துல பாஸ்வேட் செட் பண்ண, இப்ப என்னா செஞ்சி வச்சி இருக்க?
கணவன் : நீ சந்தோஷமா இருக்கிறப்ப வச்சி பாஸ்வேட் செட் பண்ணினேன்.
மனைவி : சனியன் புடிச்சிவனே, நான் உன் கம்பூட்டர பூஸ் பண்ணக்கூடாதுன்னு என்னவெல்லாம் வேல பண்ற.

3. Version 1.0
சார், வாங்க சார், உங்களுக்கு உங்க இதயத்த வச்சி பாஸ்வேட் எப்படீ செட் செய்யறதுன்னு டெமோ காண்பிக்கிறேன்.
(காதலியை காண்பித்து) இதோ, என் இதயம், இத வச்சி பாஸ்வேட் செட் செய்.
மனதுக்குள்(இருடி, உனக்கு கல்யாணம் ஆவட்டும்,

4. Version 2.0
சார், வாங்க சார், உங்களுக்கு உங்க இதயத்த வச்சி பாஸ்வேட் எப்படீ செட் செய்யறதுன்னு டெமோ காண்பிக்கிறேன்.
குடிகாரன் – (நல்லெண்னை கவர் காண்பித்து) இதோ, என் இதயம், இத வச்சி செட் செய்.
அட நாறப்பயலே, எங்கேந்துடா வரீங்க?

5.
டேய், மச்சான், உன் மொபைல் கொஞ்சம் ஒபன் பண்ணுடா
அட போடா, 2.0 முதல் நாள், முதல் காட்சி கிடச்ச சந்தோஷத்துல பாஸ்வேட் செட் பண்ணிட்டேன். இப்ப என்ன பண்ணாலும் ஓபன் ஆக மாட்டேங்குது.

சமூக ஊடகங்கள்

மழைத்தெரு

மழைத்தெரு

புகைப்படமும், தலைப்பும் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்

அன்றொரு நாளின்
பெருமழையினில்
நீ என்னோடு பயணித்தாய்.
பெருமழையில் நனைந்தபடி
நம் இருவருக்குமான
மழை நினைவுகளை
வரிசைபடுத்தச் சொன்னாய்.
பெருமழையில் தேனீர்;
மழையை உன் துப்பட்டாவால்
துடைத்த நிகழ்வு;
இலக்கியம் பேசியபடி நகர்ந்த நிகழ்வு;
இசையின் பரிமாணங்களில் உன் வியப்பு
வார்த்தைகளின் கோர்வையில்
பெருமிதம் கொண்டு
இன்னும் கூறவாக என்று புன்னகைக்கிறேன்.
மௌன மழையில் உன் கண்ணீரை
கரைத்துவிடு என்று கூறி
விலகலுக்கான காரணம் விளக்குகிறாய்.
தனித்த நகர்தலுடன்
இப்பொழுதும்
பெருமழை பெய்து கொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்கள்

மௌன மரம்

மௌன_மரம்_Iyyapa_Madhavan

புகைப்படம் : திரு. ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்

நாளொன்றின் இறுதியில்
வானம் பார்த்திருக்கையில்
தனித்தனி பறவை இனங்கள்
தனித்தனி மரங்கள் அடைந்தன.
அடைந்தப்பின் பறவைகள் மறைந்து
மரங்கள் தனித்து இருந்தன.
கரைந்த காலங்களில்
மாறாது இருந்தது இந்நிகழ்வு.
சந்தி இரவொன்றில்
அறிந்திரா புதிய மரமொன்று எதிர்ப்பட்டது
‘மௌன மரம்’ என்று தன்னிலை விளக்கம் சொன்னது.
தேகம் இளைத்தவர்கள், யாசிப்பவர்கள்
பெரும் பயண வழி அற்றவர்கள்,
மனிதர்களால் கைவிடப்பட்டவர்கள் எங்களில் இலக்கு;
அவர்களை யாம் சென்றடைவோம் என்றது.
இன்னும் பல பகுப்புகள் உண்டு.
இருந்தாலும் இதை மட்டும் உரைத்தோம்
என்றும் உரைத்தது.
பிறிதொரு நாளில் என்னில்
சுடர் எனக்கரைந்திருந்தது
மௌன மரமும்.

சமூக ஊடகங்கள்

இயல்பானவன்

இயல்பானவன்_IyaapaMadhavan

புகைப்படம் : திரைப்பட இயக்குனர்  திரு. ஐயப்ப மாதவன்

புகைவண்டி பயணத்தில்
இயல்பில்லாதவனை
எளிதில் கண்டறியக்கூடும்.

ஜன்னலுக்கு வெளியே
யாருமற்ற புல்வெளியில்
வானம் பார்த்து
ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கலாம்
கடந்து செல்.

அன்றைய செய்தித் தாளினை
எவரும் படிக்க இயலாமல்
எட்டாய் மடித்து
ஒருவன் வாசித்துக் கொண்டிருக்கலாம்
கடந்து செல்

யாசிக்கும் மனிதனின்
கண்ணீர் தாண்டி
மறுதலிக்கும் மனம் அறிந்து
கடந்து செல்.

நடை பாதை ஒன்றில்
‘இறைவனிடம் கை ஏந்துங்கள்’
எனும் பாடலை
சுருதி மாறாமல் பாடும்
பாடலை கேட்டு கடந்து செல்.

உன் நிலை கண்டும்
மற்றொருவன்
கவிதை எழுதக் கூடும்,
அப்போது நீ
இயல்பானவனாக மாறி இருப்பாய்

சமூக ஊடகங்கள்

வாழ்வியல்

வாழ்வியல்_Iyaapa Madhavan

புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்

காட்சி – 1
நானும் எனது நண்பனும் சதீஷ்ம் ரூமில் தனித்து இருந்தோம்
மாப்ள தண்ணி அடிக்கிறத பத்தி நீ என்ன நினைக்கிற ?
நான் :
தண்ணி அடிக்கிறது நல்லதா கெட்டதா ?
நான் :
சாமி இருக்கா? இல்லையா ?
நான் :
இருந்தா இந்நேரத்துக்கு வந்து இருக்கணும் இல்ல.
நான் :
மடக் மடக் . கையால் வாயில் வழிந்த பியரை துடைத்துக் கொண்டான். சாமி எங்கடா இருக்கு?
மனதுக்குள் : உனக்கு சாமி காமிச்சு குடுக்கும்டி, அப்ப தெரியம் .

காட்சி – 2
கொஞ்ச நாள் கழித்து
எங்கடா ஆளக் காணும்?
முனைவர் பட்டம் வாங்கி இருக்கேண்டா .
சூப்பர்டா , என்ன தலைப்பு ?
சித்தர்களும் வாழ்வியலும்
அட கம்மனாட்டி

காட்சி – 3
அவனுக்கு கல்யாணம் ஆகி தனியே போய் விட்டான், நான் வேளைச்சேரி வந்து விட்டேன். நான் வீட்டில் தனியாக இருந்தேன்.
மச்சான் நான் சாகப் போறேண்டா?
இருடா, மனதுக்குள் பதட்டம்.
இல்லடா – வார்த்தைகள் தெளிவாக வந்தன.
இருடா, மனதுக்குள் இன்னும் பதட்டம்.
நான் வரேன், இன்னாடா பிரச்சனை
எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டை
இருடா வரேன்
நீ வரும் போது நா பொணமாத் தான் இருப்பேன்.
இருடா வரேன் கம்மனாட்டி
மனசுக்கு பாரமா இருக்கறத்தால உனக்கு சொன்னேன்
இருடா
இணைப்பு துண்டிக்கப் பட்டது

கட்டி இருந்த கைலி கூட மாற்ற நேரம் இல்லை. இறைவா காப்பாற்று. என்ன சோதனை!
வண்டியை வேகமா ஓட்டி திருவல்லிக்கேணி நோக்கி சென்றேன்.
5 பேர் கைலி கட்டிக் கொண்டு அங்கு நின்று இருந்தார்கள் .
நீங்க?
இல்ல, இவன் சாகணும் அப்படின்னு சொன்னான், அதால காப்பாத்த வந்தோம்.
அவனும் அவன் பொண்டாட்டியும் ஓட்டலுக்கு சாப்பிட போய் இருக்காங்க. உக்காருங்க பிரதர்.

 

 

சமூக ஊடகங்கள்

மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4

மரபணு மாற்றம்_R.S.S.K Clicks

கவலைகள் – சூழலியல் சார்ந்து

மரபணு மாற்றப்பட்ட விதை / கலப்பின விதை – வேறுபாடு

தக்காளியின் மரபணுவுடன் பிராய்லர் கோழியின் மரபணுவை சேர்த்து ‘’சதைப்பற்றான’ தக்காளியை உருவாக்குவது மரபணு மாற்றம்.
சிவப்பான தக்காளி வகையுடன் சதைப்பற்றான தக்காளி வகையைச் சேர்த்து சிவப்பான, சதைப்பற்றான தக்காளி இனத்தை உருவாக்குவது கலப்பினம்.
இவை இரண்டுமே செயற்கையாக உருவாக்கப்படுபவை.

சார், நீங்க  ஒரு கஸ்டமர் பாக்க போறிங்க, நல்ல  பாண்ட், முழு கை  சட்டை போட்டுக்கோங்கோ, ஷு  முக்கியம். எதுல போறிங்க, வண்டில தானே  போயிட்டு வாங்க . உங்க அப்பாயிண்ட்மெண்ட்  டைம் மதியம்  2.15 மணி.

மரபணு மாற்றம்  சூழலுக்கு  எவ்வாறு முரணானது என்பதன் உதாரணமே இது

உதாரணமாக தென்னையை எடுத்துக் கொள்வோம் . சில பத்தாண்டுகளுக்கு முன் தென்னை காய்க்க 10 வருடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டது .அடுத்த தலைமுறை தென்னை குட்டை ஆக 5 வருடங்களில் காய்த்தது. இப்போது உள்ள தென்னை மரங்கள் 1 வருடங்களில் காய்க்க துவங்கி விடுகின்றன

கருவாழகரை (மயிலாடுதுறை) கத்திரிக்காய் சிதம்பரம் கொஸ்து – வேறு என்ன சொல்ல

இப்படிப்பட்ட மண்ணின் ஆதாரங்களை குலைப்பதே மரபணு மாற்றங்களின் அடிப்படை

இவ்வாறான பயிர்கள் விளைச்சல் பெறும்போது அந்த மண் தன் தன்மையை இழந்து அது சார்ந்த உயிர்களையும் அழித்து விடுகிறது.

உதாரணமாக மரபணு மாற்றம் செய்யப்படட நிலங்கள் தோராயமாக 25 ஆண்டுகளுக்கு பின் நீர் ஆதாரங்களை சேமித்து வைக்கவும் அதை பயன்பாடு கொள்ளவும் இயலாத விலை(ளை ) நிலங்களாக மாற்றி விடுகின்றன

மரபணு மாற்றம் கீழ் கண்டவற்றை குறித்து பேசுவது இல்லை

 • மண்ணின் தன்மைகள் குறுகிய காலங்களுக்கு மாறாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
 • மண்ணின் தன்மைகள் நீண்ட காலங்களுக்கு மாறாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
 • மண் மலடாகாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
 • ஒருவேளை மண் மலடானால் அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் முறைகளும் அதற்கான உத்திரவாதம்
 • மண் சார்ந்த உயிரியல் சுழற்சியில் அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம்
 • வாழ்வு ஆதாரங்களான நீர், நிலம்  மற்றும்  காற்று போன்றவை  அதன் தன்மை இழக்காதிருக்கும் நிலை

வெளிப்படை  தன்மை  நிரூபிக்க  படாத வரையில் அனைத்தும் பாதுகாப்பு அற்றதே

சமூக ஊடகங்கள்

பற்றிய மௌனம்

பற்றிய மௌனம்_IyyapaMadhavan

நிழலும் நிஜமும் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்

யாரும் அறியா கணமொன்றில்
உடல் பிரிந்து உயிர் தனியானது.
காணப்படுபவைகளை காட்சியாக்கி கண்டது.
தன்னிலை அறிந்து தான் மீண்டும் கூடு அடைந்தது.
பெறத் துடிக்கும் ஒன்றை
பெற்றதாய் கொண்டது மனம் ஒன்று.
அடைய முடியா புவனங்கள்
அண்டத்தில் இல்லை
என்று கூறி பெரு நடை ஒன்றை பயின்றான்
பித்தனொருவன்.
கருமை நிறம் கொண்டவனுடன் வந்த
கருமை நிற நாய் ஒன்று
வேகமாக தாவியது அவன் மேல்.
உடலுக்குள் உயிர் ஒடுங்கியது.
‘கூத்தனின் நாடகத்தில் குறை உண்டோ’
எனக் கூறி அவ்விடம் அகன்றான்
கருமை மனிதன்
பிறிதொரு நாளில்
உடலும் உயிரும் தனித்த பொழுதுகளில்
மௌனம் பொருந்தி
காலம் இயல்பு இழந்திருந்தது.

சமூக ஊடகங்கள்

2038 – 3 ஆட்டக்காரர் சதுரங்கம் • Three player chess is essentially normal chess with a third player added.
 • The board is shaped usually like a hexagon, but other shapes also exist.
 • There are three different “armies” in 3 player chess, each starting on their own side. Movements for the individual pieces are essentially the same.
 • The only difference is that the board squares aren’t actually square, so when you move a piece like a rook, it actually ends up taking a curvier path.
 • The first to checkmate is first, the first to be in checkmate is last, and the other player is second.

Source : http://interestingengineering.com/three-player-chess-just-crazy-sounds/

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.

3 பேர் விளையாடும் போது 6 பக்கம்னா 4 பேர் விளையாண்டா 8 பக்கம் வருமா?

இப்படிக்கு எல்லாவற்றையும் 2ஆல் பெருக்கி கணிதம் கற்போர் சங்கம்.

2..

மனைவி : நம்ம வூட்ல மூணு பேர் இருக்கோம். நீங்க, நான் நம்ம புள்ள. நீங்க உலக அளவுல விளையாடுற வீரரா இருக்கலாம். ஆனா நான் தான் எப்பவுமே முதல்ல ‘செக்’ வக்கணும், நீங்க தான அத வாங்கணும். அப்படி விளையாடுங்க.

3.

சார், இதுக்கு எவ்வளவு பீஸ் கட்டணும்?

நாங்க இத இலவசமாகத்தான் செய்யிரோம். இட வாடக, இத்யாதிகளுக்காக 2 பேர் ஆட்டத்துக்கு 8 தடவைக்கு ஜஸ்ட் 2000 தான் வாங்குறோம். அப்படீன்னா, 3 பேர் ஆட்டத்துக்கு எவ்வளவுன்னு நீங்களே கணக்கு பண்ணிங்க.

4.

நண்பன் 1 :என்னடா ரொம்ப நேரமா செஸ் போடையே பாத்துகிட்டு இருக்க.

நண்பன் 2 :இல்ல மச்சான். இந்த ராணி, மந்திரி, குதிரை, யானை எல்லாம் எப்படி நகரும் அப்படீன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.

நண்பன் 1 (எல்லா காயையும் கலைத்து விட்டு), இப்படித்தான். சரி வா. போய் ஒரு பெப்சி குடிக்கலாம்.

நண்பன் 2 :இதெல்லாம் குடிக்கக் கூடாது, தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்கன்னு மெசேஸ் அனுப்பின.

நண்பன் 1 :மெசேஸ் அனுப்பினதோட வேல முடிஞ்சி போச்சுடா.

5.

என்னடா பரிட்சை எப்படி எழுதி இருக்க?

அட ஏண்டா, நீ வேற, 2 பேர் ஆட்டத்துக்குன்னா, மொத்தம் 5899 மூவ்ன்னு(maximum possible move) பிட்டு வச்சி இருந்தேன். அவங்க என்னடான்னா 3 பேர் ஆட்டத்துக்கு எத்தனை மூவ்ன்னு கேட்கிறான்?

சமூக ஊடகங்கள்

முதுகாடு

முதுகாடு_IyaapaMadhavan

புகைப்படம் : திரு. ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்.

வினாடிகள்
வினாடியாகத் தான் சேர்ந்து மறைகின்றன.
ஒன்றின் தொடர்ச்சி போல் இல்லாமல்
ஒவ்வொன்றும்.
ஆனாலும்
கடந்த யுகமுடிவில் பட்ட அதே பிம்பத்தில்
இந்த உடலும் அதே நினைவுகளும்.

 

முதுகாடு - இடுகாடு, சுடுகாடு

சமூக ஊடகங்கள்

2038 – Pi value

2038

 

Pi value

 • Today is pi day.(14-Mar)
 • We can write down more digits of the famous irrational number than ever before. An extra 9 trillion digits after the decimal point have been discovered.
 • pi enthusiast Peter Trueb’s computer finally calculated 22,459,157,718,361 fully verified digits of pi.
 • He built a computer with 24 hard drives, each containing 6 terabytes of memory, to store the huge quantity of data produced with each step of the process. To run the calculations, he used a computer program called γ-cruncher
 • This software uses the Chudnovsky algorithm for calculating pi.

Source : Internet

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
மனைவி கணவனிடம்
ஒரு பைய புடுச்சி ஒழுங்கா காய்கறி வாங்கி வர முடியல, நீங்க எல்லாம் என்னா …. விஞ்ஞானியா வேல பாக்குறீங்களோ தெரியல.

2.
சாமியாரும் பக்தனும்
சாமி, என் பொண்டாடிக்கும் , எனக்கும் எப்போ சண்டை இல்லாம இருக்கும்?
Pi மதிப்பு/ எண்ணிக்கை கண்டு முடிக்கும் போது.

3.
நண்பர்கள் இருவர்
டேய், எப்படா, எங்கிட்ட வாங்கின 100 ரூபாய திருப்பி தருவ?
இருடா, இப்பத்தான் 6 TB. 24 HDD வச்சி P… வேல்வுவே கண்டுபுடுச்சி இருக்காங்க, அதுக்குள்ள அவசரப்படுறிய மாப்ள. அவங்க கண்டு புடுச்ச உடனே குடுத்துடுறேன்.
4.
நீதிமன்றத்தில்
இன்னைக்கு என்னா கேசு?
அதாவது நீட் மெடிக்கல் அட்மிஷனுக்கு ரிசல்ட் 10 டிஜிட்ல வேணுமாம். ஏன்னா ரெண்டு டிஜிட் வச்சா பல பேர் ஒரே மார்க் எடுக்குறாங்களாம்.
5.
நகைக்கடையில்
சார், சொன்னா கேளுங்க, நீங்க Pi value scientist ஆ இருக்கலாம். அதுக்காக 1.34567567 கிராம் தங்கம் குடுங்கன்னு கேட்றது நல்லா இல்லை.

சமூக ஊடகங்கள்

2038 – Nanobot – Nanotechnology Robots

2038

 

• Emerging technology field creating machines or robots which components are at or near the scale of a nanometre (10^−9 meters).
• It refers to designing and building Nanorobots, with devices ranging in size from 0.1–10 micrometers and constructed of nanoscale or molecular components.
• The terms nanoid, nanite, nanomachine, or nanomite have also been used to describe such devices currently under research and development.
• Advanced nanobots will be able to sense and adapt to environmental stimuli such as heat, light, sounds, surface textures, and chemicals; perform complex calculations; move, communicate, and work together; conduct molecular assembly; and, to some extent, repair or even replicate themselves

Telecommunications industry – Fiber optics

Medical
• Monitor body function; repair damaged tissue at the molecular level; deconstruct pathologic or abnormal material or cells such as cancer or plaque; and enhance human health and functioning.
• Artificial bone cement for small applications
(Source – Internet)

 (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
கணவன் : இன்னைக்கு நான் புதுசா கண்டுபுடுச்சி இருக்கேன். அது ரொம்ப கண்ணுக்குத் தெரியாத அளவுக்கும் இருக்கும்….(முற்றுப் பெறா வாக்கியம்)
மனைவி : உங்கு புள்ள கண்ணுக்குத் தெரியாமல் தரையில கிடக்கிற குப்பை, பேப்பர் எல்லாத்தையும் பொறுக்கி திங்குது. அதவிட உங்க கண்டுபிடிப்பு ரொம்ப பெரிசா?

2.
அப்பா: என்னடா எல்லா சப்ஜெக்ட்லயும் இவ்வளவு மார்க் கம்மியா எடுத்து இருக்க.
மகன் : டிகிரியே நானோ டெக்னாலஜி, அப்ப மார்க்கும் அப்படித்தான் வரும்.

3.
Version 1.0
என்னங்க, இவ்வளவு கம்மியா சம்பளத்த குடுக்குறீங்க?
நான் Nanobot ப்ரொஜெட்ல வேல பாக்கிறேன்.

Version 2.0
என்னடி, இவ்வளவு கம்மியா சோறு போடற?
நான் Nanobot ப்ரொஜெட்ல வேல பாக்கிறவரோட பொண்டாட்டி

4.
Developmer 1 : என்னா சார், இந்த வருஷம் நம்ம ப்ரொஜெட்க்கு இவ்வளவு கம்மியா ஒதுக்கி இருக்காங்க?
Developmer 2 : நம்ம மேனேஜர் வெளங்காதவன், Nanobot அப்படீங்கறத்துக்கு பதிலா நானே பட்ஜெட் அப்படீன்னு பேசிட்டு வந்து இருக்கான், என்ன செய்யிறது தலை எழுத்து

5.
நோயாளி : என்னங்க, இந்த ஆப்பரேஷனுக்கு இவ்வளவு ஜாஸ்தியா காசு கேட்கிறீங்க?
மருத்துவர்: என்ன செய்யிறது, செயற்கை எலும்பு சிமெண்ட் வில ஏறிப்போச்சுப்பா

சமூக ஊடகங்கள்

சொரூப நீட்சி

சொரூப நீட்சி_Iyyappa Madhavan

 

புகைப்படம் : ஐயப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்

 

அஞ்சன இரவொன்றில்
யாருமற்ற தனிமையில்
தலையணையை ஈரமாக்கும்
விழித் துளிகள் வீசிச் செல்கின்றன
இழப்பதற்கு என்று
எதுவும் இல்லை
இளமையும், வறுமையும் தவிர.

சமூக ஊடகங்கள்

அமலம்

அமலம்_KP

புகைப்படம் : Karthik Pasupathy

பிரபஞ்சத்தின் நீட்சியில்
காலபரிமாணம் அற்று
வான்முட்டி கூட்டமாக பறந்தன
சில பறவைகள்.
அறியாத பொழுதொன்றில்
மரித்து தரை சேர்ந்தது
பறவை உடல் ஒன்று.
கத்தின, கூக்குரலிட்டன, கரைந்தன.
உருவம் அழிவதாய் ஒலித்தன
உயிர் கொண்ட பறவைகளின் குரல்கள்.
பின்னொரு பொழுதுகளில்
விரும்பி வானம் கொண்டன.
சலனப்பட்டு இருந்தது காற்று
சலனம் அற்று இருந்தது வானம்.

*அமலம் – மாசு அற்றது

சமூக ஊடகங்கள்

2038 – Time crystals – நேரப் படிகங்கள்

2038

Scientists unveil new form of matter: Time crystals

 • If crystals have an atomic structure that repeats in space, like the carbon lattice of a diamond, why can’t crystals also have a structure that repeats in time? That is, a time crystal
 • Berkeley Assistant Professor of physics (University of California) describes exactly how to make and measure the properties of such a crystal, and even predicts what the various phases surrounding the time crystal should be akin to the liquid and gas phases of ice.
 • This is a new phase of matter, period, but it is also really cool because it is one of the first examples of non-equilibrium matter.
 • The Harvard team, set up its time crystal using densely packed nitrogen vacancy centers in diamonds
 • Physicists recently suggested making materials that repeat in time.

Source : sciencedaily

              (இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.

ஒரு அவரைக்காய ஒழுங்கா நறுக்க தெரியல, உன்ன எல்லாம் எப்படித்தான் டைம நறுக்குற வேலைல வச்சி இருக்காங்களோ தெரியல.

2.

மதுபான அருந்தகம் உள்ளே

டைம நறுக்குறதுன்னா இன்னாபா?

அட்சி, இது கூட தெர்லியா, நாம கட்டிங்க ரெண்டு கிளாஸ்ல கரிட்டா ஊத்தி மிக்ஸ் பண்ரோம்ல, அதுமாதிரி தான் இது.

அப்ப அதுக்கு சைட்டிஷ் இன்னாபா?

3.

கல்லூரியில்

டேய், மச்சான் அது என்னாடா, டைம் கிரிஸல்ஸ்

ரொம்ப சிம்பிள்டா மச்சான், நீ 2 பக்கத்துக்கு எழுதின உனக்கும் 10 மார்க், 42 பக்கத்துக்கு எழுதினேன், எனக்கும் 10 மார்க். பேதமே இல்லாம பிரிக்கிறது.

4.

தையல் கடையில்

ஏம்மா, உங்க புரோஜெக்ட் வேல பாக்றது எல்லாம் டைம் கிரிஸல்ஸா இருக்கலாம், அதுக்காக ரவிக்கை தச்சதுல ரெண்டு கைக்கும் வித்யாசம் இருக்கு. அதால ரெண்டு கைக்கும் எடை அளவுல புரொட்டான் மாதிரி   1.6726 x 10-27 kg. வித்யாசம் இருக்குன்ணு சொல்றது ரொம்ப ஓவர்.

5.

கொலை.. கொலை

அப்ரண்டீஸ்

சார், நான் கரட்டா கத்தியால  குத்தி இருக்கேனா?

பாஸ்

டேய், இது என்ன டைம் கிரிஸல்ஸா, ஒவ்வொரு குத்தும் கரட்டா குத்த. இதெல்லாம் சிவாஜி படத்திலயே தலிவர் செஞ்சிட்டார். சீக்கரம் வண்டிய எடுடா.

சமூக ஊடகங்கள்

சொல்லாடுதல்

சொல்லாடுதல்_KP

புகைப்படம் :  Karthik Pasupathi

வீட்டில் இருக்கும் கம்யூட்டரில் HD சரியாக வேலை செய்யவில்லை. நண்பர் வந்து புது HD மாற்றிக் கொடுத்தார்.
இதுல எது எது எது வேணும்னு சொன்னீங்கன்னா அதெல்லாம் புது HDல காப்பி செய்துடலாம்.
12 வருடங்களுக்கு மேற்பட்ட விஷயங்கள். எப்படி உடனடியாக தேர்வு செய்ய முடியும். சரி, வரிசையா ஒன்னு ஒன்னா பாத்துக்கிட்டே வாங்க. நீங்க சொல்றதை மட்டும் காப்பி செய்துடுறேன்.

இது இளையராஜா பாடல்கள் …இது வேணும்.
இது நான் கடவுள் மூவி .. இது வேணும்.
யோகி ஃபோல்டர்ல என்ன இருக்குன்னு பாருங்க?
ஏதோ பெபில்ஸ்ன்னு இருக்கு.

என் இனிய பொன் நிலாவே பாடலில் வருவது போல் காலம் சுழல ஆரம்பித்தது.

அப்போது யோகிக்கு பேச்சு வரவில்லை. சில நேரம் ம்,.. ம்ம்.. சந்தோஷப் படும் போது வேகமாக குதிப்பான்.

ஒரு முறை கடைக்கு சென்றிருந்த போது அழுதான். அப்போது DVD பிளேயரில் இருந்து பாடல்கள் ஒலித்தன. உடன் அழுகை நின்றது.
சார், இது என்ன பாடல்?
குழந்தைகளுக்கான பாடல் சார்.
எவ்வளவு சார்?
99ரூ.
நான் இத எடுத்துக்கிறேன் சார்

அன்று முதல் பக்தி பாடலுக்கு பதிலாக இந்தப்பாடல்கள் தான் ஒலிபரப்பாகும் (அப்படித்தான்)

பேச்சு வர ஆரம்பித்தது.
சைகை காட்டியது போய் கம்யூட்டரை அவனே ஆன் செய்து பாடல்களை வைக்கக் கற்றுக் கொண்டான்.

என் இனிய பொன் நிலாவே பாடல் முடிவுக்கு வந்தது.

அட என்னா அங்கிள் நீங்க, அவருகிட்ட போய் கேட்டுகிட்டு இருக்கீங்க. எல்லாத்தையும் காப்பி பண்ணி போட்டுடுங்க. இல்லேன்னா கத்துவார். இவரு கௌதம் ஃப்ரெண்ட் வேற. படத்துக்கு ஒரு டிக்கெட் எடுத்து குடுக்க முடியல. நீங்க என்ன பண்ணுங்கண்னா, மியுசிக் சைட்ல போயி AYM படத்துல வர ‘தள்ளிப்போகாதே’ பாட்டை டவுண்லோட் செய்து குடுங்க. அப்பாவ கேட்காதீங்க.

 

*சொல்லாடுதல் – பேசுதல்

சமூக ஊடகங்கள்

பாடி காவல்

பாடி காவல்_LakshmiVenkat

புகைப்படம் : Lakshmi Venkataraman

மரணம் கரைந்திருக்கும் வினாடி தேடி
பயணிக்கிறது வாழ்வு;
மரணித்தல் இயல்பாகும் வரை
வாழ்வு தொடரும்;
பின்னொரு பொழுதுகளில்
ஞானத்தின் வாழ்வு தன்னை ஞானம் கவ்வும்
மறுபடியும் ஞானமே வெல்லும்.

 

 
*பாடி காவல் – குற்றம் செய்தவருக்கு அரசன் தரும் தண்டனை

கோடிக் காவனைக் கூறாத நாள் எலாம்
பாடி காவலில் பட்டுக் கழியுமே

சமூக ஊடகங்கள்

மாகேஸ்வர பூசை

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0_%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%88_ramn

 

புகைப்படம் : ராம்

காட்சி – 1

ராமாபுரம் சிக்னலில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் எனது நண்பர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

என்னவோ சார், என்னன்னு தெரியாமாக எங்க பொழப்பு ஓடுது. சார், எனக்கு சுகர், அங்க கூட்டத்த கன்ட்ரோல் பண்ணிகிட்டு இருக்கறப்ப திடீர்ன்னு சுகர் சூட் அப் ஆயிடும். என்ன செய்யிறதுன்னு தெரியாது. மயக்கம் வரும். அப்பத்தான் இங்க வந்து பன்னுல பாதி கடிச்சிட்டு (சொல்லுகையில் குரல் உடைந்திருந்தது – பசி அனுபவித்தவர்கள் கண்களில் அது பற்றி சொல்லும் போது எப்பொழுதும் எழும் பிறர் அறியா கண்ணீர்) மீதிய இங்கயே போட்டு போய்டுவன். பாக்றவன் என்னா சொல்வான்னா ‘ வேலை பாக்ற நேரத்தில திங்கிறான் அப்படீம்பான்’ என்னா செய்றது சார். நம்ம பொழப்பு அப்படி. ஆனா ஒன்னு சார், நம்ம நிலம எதிரிக்கு கூட வரக்கூடாது.

காட்சி – 2

மெஸ் -பொத்தேரி

டேய், டேய் இங்க வாடா (கடைக்கார அம்மா ஒரு ஆட்டோ டிரைவர் பையனை அழைக்கிறார்)

இல்ல வந்து…

டேய், வாடா வந்து 4 இட்லி திண்ட்டு போடா

இல்ல வேண்டாம்.

என் பக்கம் பார்வை திரும்பியது.

சார், இந்த பய நான் பார்த்து வளர்ந்தவன். சாப்பிட காசு இல்லேன்னு திரும்பி போறான். கேட்டா உனக்கு செலவுன்றான், இவனுக்கு நாஸ்டா குடுத்தாவா நான் கொறஞ்சிடப் போறேன்.

காட்சி – 3

பிறந்து ஒரு வாரமே ஆன 2 நாய் குட்டிக்கள் மற்றும் ஒரு ஆடு.

இரு நாய் குட்டிகளும் ஆட்டுக்குட்டியிடம் பால் அருந்த முற்படுகின்றன. ஆடு வேகமாக விலகிச் செல்கிறது.

இடம் : பால் இல்லாமல்அழுத ஞான சம்பந்தருக்கு அம்மை பால் கொடுத்த சீகாழி திருக்குளம்  அருகே.

மாகேஸ்வர பூசை – ஒவ்வொரு உயிரிலும்  கலந்து இருக்கும் இறைவனுக்கு உணவுபடைத்தல்

சமூக ஊடகங்கள்

வழக்கு

%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81_nandansridharan_theniiswar
இறையால் இறைக்கப்பட்ட
வறுமைகள் பாதை வழி எங்கும்.
இருள் சூழ்ந்திருக்கும்
வாழ்வை விலக்க முற்படுகிறேன்.
யாருமற்ற தருணமொன்றில்
தலை கோதி பின்னலிடுகிறாய்.
தன்முனைப்பு அற்று முத்தமிட்டு
புன்னகை பூக்கிறாய்.
பெரு வாழ்வு கண்டபின்னும்
மீண்டும் ஒரு தலைப் பின்னலுக்காக
காத்திருக்கின்றன பல ஜன்மங்களும்.

*வழக்கு – ஈகை

புகைப்பட உதவி : நந்தன் ஸ்ரீதரன் மற்றும் தேனி ஈஸ்வர்

சமூக ஊடகங்கள்