
பாடல்
எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ!
அருளியச் சித்தர் : அழுகணிச்சித்தர்
கருத்து – வாசி கொண்டு இறைவனை அடையும் வழியினைக் கூறும் பாடல்.
பதவுரை
கண்ணம்மா! (சூட்சமத்தினை குருமூலமாக அறிக) புரவி எனும் வாசியினைப் போல் நில்லாமல் 12 அங்குலம் கொண்டு சென்று கொண்டிருகும் காற்றினை சுழிமுனை வாசலில் நிற்கச் செய்து, அதில் நான்கு அங்குல காற்றினை சுருக்கி, ஆன்ம தேசத்தை நம் சொந்தம் ஆக்கிகொள்ள முடியாதோ?
அட்டாள தேசம் என்பதனை எட்டு அங்குலம் உடைய தேகம் என்று கொண்டு உடல், மனம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவருதலை உரைப்பதாவும் கொள்ளலாம்.
ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
வாசி முறைகள் குரு பரம்பரையாக வருபவை. உபதேசிகப்படும் குருவுக்கு தக்கபடி எண்ணிக்கையும், முறையும் மாறுபடலாம் என்பதால் குரு முகமாக அறிதல் நலம்.