பாடல்
வானம் உளதால் மழையுளதால் மண்ணுலகில்
தானம் உளதால் தயையுளதால் – ஆனபொழு(து)
எய்த்தோம் இளைத்தோமென்(று) ஏமாந் திருப்போரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று
ஔவையார் தனிப்பாடல்
கருத்து – உலகியல் வாழ்வின் நிறைவுகளைப் பற்றி சொல்லி துன்பம் கொண்டு இருக்கக் கூடாது என்பதை குறிக்கும் பாடல்
பதவுரை
அளவிட இயாலாத வானம் இருக்கிறது; உயிர்களைக் காக்க மழை இருக்கிறது; உயிர்களை வளர்க்கும் இந்த மண் உலகில் பிறருக்கு உதவி செய்யக்கூடிய தானம் இருக்கிறது. பிறரிடத்தில் காட்டக்கூடிய அன்பு இருக்கிறது. இத்தனையும் இருக்கும்போது அடைதல் இல்லாமல் ஒன்றுமில்லாதவர் ஆயினோம், செல்வத்தால் இளைத்துப்போயிருக்கிறோம் என்று எடுப்பவர் பற்றி ஏமாந்திருப்பது எதற்காக?
விளக்க உரை
- ஓர் அரசன் மகள் கல்வி அறிவில்லாதவன் ஒருவனை காதலித்து வஞ்சகம் கொண்ட கல்வி அறிவுள்ளவன் மற்றொருவனை மணந்து தற்கொலை செய்துகொண்டு இறந்து, வருகிறவர்களைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்தவள், ஔவையைத் துன்பம் செய்யத் தொடங்கியபோது நான்கு சாமத்திலும் பாடிய பாடல்.
- எய்தல் – அடைதல், சேர்தல், அம்பைச் செலுத்தல், நிகழ்தல், சம்பவித்தல், பெறுதல்