பாடல்
இன்று நின்றவர் நாளைநின் றிலரே
என்செய் வோம்இதற் கென்றுளம் பதைத்துச்
சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
நன்று நின்துணை நாடக மலர்த்தாள்
நண்ண என்றுநீ நயந்தருள் வாயோ
பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே
போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
திருஅருட்பா – இரண்டாம் திருமுறை – வள்ளலார்
பதவுரை
அழிவில்லாத எழில் படைத்த ஒற்றியூர் அரசே, போற்றுகின்றவர் எல்லாருக்கும் பொதுவாய் நின்றவனே, இன்று இருப்பவர் நாளை இல்லாதவர்களாக மறைகின்றார்களே, இதற்கு நாம் என்ன செய்வது என நினைந்து மனம் திடுக்கிட்டு இங்கும் அங்கும் சென்றும் நின்றும் தளர்கின்றேன்; நான் சிறியவர்களுக்குள் சிறியவன் ஆனதலால் செய்யக்கூடியது என்ன? நன்மைதரும் நின்னுடைய நாடகமாடுவதைப் போன்ற இரண்டு மலர்போன்ற நின் திருவடிகளை யான் அடைவதற்கு, நீ விரும்பி அருள் செய்வாயாக.
விளக்க உரை
- கதி – நடை; செயல். ‘சிவகதி’ – சிவ நடையுடன் மாற்று கருத்து இல்லாமல் ஒத்து. அஃதாவது சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி, ‘அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்’ என மாற்றி உரைக்க.
- ‘உணர்வு ஆகி’ என்பது ஞான அனுபவத்தை வழங்கி, அவ்வழிகளில் இன்பம் பெறப்பட்டதை குறித்தது
- ‘போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – போற்றுவோர் தூற்றுவோர் அனைவர்க்கும் பொதுவாகிய கடவுள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆயினும் `யாதோர் தேவர் எனப்படுவார்க் கெல்லாம் மாதேவன் அல்லால் தேவர் மற்று இல்லையே` எனும் திருநாவுக்கரசர் வரிகளும், `யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்` எனும் அருணந்தியாரின் திருவாக்கும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
- அறியா தன்மையாலும், அதுபற்றி நிற்றலும் இன்மையால் ‘நான் செய்வது என்னை’ எனும் வரிகளும் ‘நான் சிறியருட் சிறியேன்’ எனும் வரிகளும்