‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – சேடு
பொருள்
- அழகு
- பெருமை
- திரட்சி
- நன்மை
- இளமை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தோடார் மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடாய் இரும்பூ ளையிடங் கொண்டவீசன்
காடார் கடுவே டுவனா னகருத்தே.
தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
காந்தள் மலர் போன்றதும், இதழ்கள் நிறைந்ததும் ஆன தோடார் மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே! திரண்ட கூந்தலையும், செம்மையான அணிகலன்களையும் அணிந்து கொண்டுள்ள அம்மையோடும் உடனிருந்து, பெருமைக்கு உரிய இரும்பூளையில் உறையும் ஈசன், காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ? இதனை எனக்குச் சொல்வீராக.
விளக்க உரை
- அர்ச்சுனனோடு போர் செய்த வேடனாக வந்தது ஒப்புநோக்கி சிந்திக்கத் தக்கது.