‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – சூளிகை
பொருள்
- நீர்க்கரை
- செய்குன்று
- யானைச் செவியடி
- நிலாமுற்றம்
- தலையணி வகை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி
இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்
தொடர்ந்தவனைப்பணிகொண்ட விடங்கனதூர்வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
மறைஒலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
தாமரை மலர்கள் கொண்டு, மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து, கூட்டமான பசுக்களின் பாலைக் கொண்டுவந்து சொரியச் செய்த போது அதனைக்கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி சென்று ஆட்கொண்ட அழகான தலமானதும், மண்டபங்களிலும், கோபுரங்களிலும், மாளிகைகளிலும், அதன் மேல் இருக்கும் மேல்மாடத்திலும் வேதங்களின் ஓசையும், மங்கல ஓசைகளும் வீதிகளில் நிரம்பி கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற தாமரை தடாகங்களில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற தலமானதும் ஆன இடம் திருக்கலயநல்லூரே என்று அறிக
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
தானே அறியும் சித்து எது?
சிவம்
கருத்துக்கு மிக்க நன்றி,
தாங்கள் உரைத்தவாறு மாற்றிவிட்டேன்.
தொடர்ந்து வாசித்து வரவும்.
மேற்கண்ட சுந்தரர் தேவாரப்பாடலில் சூளிகை என்றால் நிலாமுற்றம் அல்லது மேல்மாடி.
மாளிகைசூளிகை என்ற தொடர் அடிக்கடிப் பயில்வது.
கரையென்ற பொருள்கிடையாது. அகராதியைப் பார்த்து நேர்ந்தபடிப் பொருள்தேர்ந்தெடுப்பது தகாது. எனவே இதனைத்திருத்துவது நன்று.
நன்றி.