‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – கிலேசம்
பொருள்
- வருத்தம்
- நோவு
- வலி
- துன்பம்
- கவலை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
உனக்குநா னடித்தொண் டாகி உன்னடிக் கன்பு செய்ய
எனக்குநீ தோற்றி அஞ்சேல் என்னுநா ளெந்த நாளோ
மனக்கிலே சங்கள் தீர்ந்த மாதவர்க் கிரண்டற் றோங்குந்
தனக்குநே ரில்லா ஒன்றே சச்சிதா னந்த வாழ்வே.
தாயுமானவர்
கருத்து உரை
மனத் துன்பங்களுக்கு காரணமான குற்றம் முழுதும் அற்று, இரண்டற்ற நிலையில், நின்திருவடியில் ஒன்றாக இணைந்து நிற்கும் நல்ல தவம் உடையவர்களுக்கு ஒப்பில்லாத ஒன்றாய் விளங்கும் உண்மை அறிவு இன்ப வண்ண வாழ்வே! நின் திருவடிக்கு அடித்தொண்டு பூண்டு உன்னிடத்திலே பேரன்பு பெருக எளியேனுக்கு நீ நின்திருவருள் தோற்றம் தந்து அஞ்சேலென்று அமிழ்த மொழியளித்து அருளும் நாள் எந்த நாளோ?
விளக்க உரை
- ‘வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே’ எனும் கந்தர் அலங்காரப்பாடல் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
இறைவனின் குணங்களாக ஆகமங்கள் கூறுவது என்ன?
எண் குணங்கள்