‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – அவ்வியம்
பொருள்
- பொறாமை
- அழுக்காறு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து உரை
பொறாமை உடையவர்களாக ஆகி, அறத்தின் வழியில் இருந்து விலகி, தீக்குணம் உடையவர்களாக பிறர் பொருளைக் கொள்ளாதீர்கள். நற்பண்பு உடையவர்களாக உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.
விளக்க உரை
- இவ்வாறான நெறியில் நின்றால் நிலையாமை நீங்கி இன்பம் பெறலாம்` என்பது குறிப்பு.
- `உணர்வு நிலையாமையை உணர்ந்து நிலைபெறுவதற்கு உரிய நெறியில் நிற்றல் வேண்டும்` என்பது பற்றி கூறப்படும் பாடல்.
- ‘அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே’ எனும் அபிராமி அந்தாதி யாண்டும் சிந்திக்கத் தக்கது.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
இறைவனின் குணங்கள் யாவை?
சத்து, சித்து, ஆனந்தம்