‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – எய்ப்பு
பொருள்
- இளைப்பு
- தளர்ச்சி
- ஒடுக்கநிலை
- வறுமைக்காலம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையு மாள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.
தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகும் படியான இன்பம் அளித்து இவ்வுலகத்துள் இருக்கும்படி அருள்புரிபவன். என்னையும் ஆட்கொடு அருளும் உரிமையன். நிலங்கள் எங்கும் செல்வத்தை குறிக்கும் மாடி வீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். இவ்வாறான அவனை விரும்பி வழிபடுபவர்கள் வினைகள் நீங்கும்.
விளக்க உரை
- மெய்ப்பான் – பொய்யாதல் இல்லாதவன்; உண்மைப்பொருள்