‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – அஞ்சொல்
பொருள்
- இனிய சொற்கள்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல் லார்அவர்தம்
விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேஎரியும்
சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும் பர்க்கமுதே
தொடவரி யாய்தமி யேன்தனி நீக்கும் தனித்துணையே.
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து உரை
எரியும் சுடரை ஒத்தவனே, சுடுகாட்டின் அரசனே, தொண்டர்களுக்கு அமுதம் போன்றவனே, அணுகுவதற்கு அரியவனே, எனது தனிமையை நீக்குகின்ற ஒப்பற்ற துணையே, ஐம்புல ஆசைகளின் ஈர்ப்பால் வருத்துகின்ற புலன்களால் உன்னைப் பிரிந்து, அஞ்சி, இன்சொற்களையுடைய மாதர்களது மயக்கத்தினை விட்டு நீங்கும் ஆற்றல் இல்லாத என்னை விட்டுவிடுவாயோ!
விளக்க உரை
- ‘தனித்துணை நீ நிற்க’ எனும் மற்றொரு பாடல் வரிகள் யாண்டும் சிந்திக்கத் தக்கது.