‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – தழை
பொருள்
- தழைகை
- தளிர்
- இலை
- இலையோடு கூடிய சிறு கொம்பு
- பீலிக்குடை
- தழையாலான உடை
- ஒருவகை மாலை
- பச்சிலை
- செழி
- தாழ்
- பூரித்தல்
- மிகு
- விருத்தியாகு
- சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேர்க்கப்படாத சீட்டு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙன நீர்கையிற் காய்ந்ததே.
தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
வெண்மையான பிறையுடன் கூடியதும், இலையோடு கூடிய சிறு கொம்பு கொண்ட தாழ்வான சோலைகள் சூழ்ந்ததும், அசைகின்ற அழகிய ஒலியினையுடைய உடைய மணிகளால் இழைக்கப்பட்ட மாடவீடுகளுடன் திகழ்வதுமான திருத்தெளிச்சேரியில் உறையும் இறைவனே! குவளை மலர் போன்ற கண்களை உடைய உமை நடுங்குமாறு உம்மைக்கொல்ல வந்து அடைந்த கவளம் அளவு உண்ணும் மதமயக்கமும் துதிக்கையும் உடைய பெரிய யானையை எவ்வாறு நீர் சினந்து கைகளால் அதனை அழித்தீர்?