‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – தன்னம்
பொருள்
- பசுவின் கன்று
- மான்கன்று
- மரக்கன்று
- அளவால், உருவத்தால், பண்பால் குறுகியது / சிறியது என்னும் தன்மை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் – நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய்
பின்னவலம் செய்வதென்னோ பேசு.
பதினோராம் திருமுறை – திருநாரையூர் பொல்லாபிள்ளையார் பற்றிய பாடல் – நம்பியாண்டார் நம்பி
கருத்து உரை
நெஞ்சே! புதியதான மாங்கனியைப் பெற, பூங்கொம்பு போன்ற வள்ளியின் கணவனாகிய முருகன் உலகினை சுற்றி வந்து அடையும் முன்னரே, நாரையூர் நம்பன் தன் தாய் தந்தையரை வலம் வந்தார். உலகை வலம் வருதலை விட, இந்த வழியே சிறந்தது என்று தேர்ந்து எடுத்தார். தாய் தந்தையரை வலம் வந்து, தன் துதிக்கையை தாழ்த்தி துதித்து, மாங்கனியை பெற்றார். அந்த விநாயகரை சொல் நெஞ்சே! அவ்வாறு சொன்னால், நோய், வினைகள், மற்றும் அவலம் எனும் துன்பம் நம்மை என்ன செய்யும்?
விளக்க உரை
- தன்னவலம் – உலகை வலம் வருதலை விட அன்னை தந்தையரை வலம் வருதல் எளிதாதல் பற்றியது