‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – ஆகம்
பொருள்
- உடல்
- மார்பு
- மனம்
- சுரை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு
ஆமே தமருக பாசமும் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து உரை
உடலாகிய திருமேனியில் எலும்பு, தோல் முதலியவைகளை விரும்பிப்பூண்ட ஆதி வயிரவர் மேற்கூறியவற்றுடன் சூல கபாலங்களைச் சிறப்பாக ஏந்தி விளங்குவார். அதோடு தமருகம், பாசம், வெட்டப்பட்ட தலை, வாள் என்னும் இவைகளையும் அவர் கொண்டிருப்பார்.
விளக்க உரை
- வயிரவரது உருவ அமைப்பும், கையில் உள்ள படைக்கலம் முதலியவைகளும் கூறப்பட்டன.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
இறைவன் வேறாய் நின்று உதவுவது என்ன உபகாரம்?
காட்டும் உபகாரம்