ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – விமலம்
பொருள்
- அழுக்கின்மை
- பரிசுத்தம்
- தெளிவு
- சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஆயிர கோடி காமர்
அழகெலாந் திரண்டொன் றாகி
மேயின எனினுஞ் செவ்வேள்
விமலமாஞ்சரணந் தன்னில்
தூயநல் எழிலுக் காற்றா
தென்றிடின் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லாம்
உவமையார் வகுக்க வல்லார்?
கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து உரை
ஆயிரம் கோடி மன்மதன்கள் இந்த உலகில் பிறந்து, அவர்கள் எல்லாருடைய அழகையும் ஒன்றாகத் திரட்டி ஓர் உருவம் செய்து இருந்தால்கூட, சிவந்த மேனி உடைய இந்த முருகனுடைய தூய்மையான பாதத்தின் அழகுக்கு முன்னே அது நிற்காது! தொன்மையான புகழைக் கொண்ட இந்த அழகிய வடிவத்துக்கு உவமை சொல்ல யாரால் இயலும்?
விளக்க உரை
- சூரபத்மன் முருகன் அழகைப் கண்ட மாத்திரத்திலேயே தன் கையிலிருந்த ஆயுதங்களையெல்லாம் நழுவவிட்டு தன் ஞானக் கண்களால் முருகன் அழகை முழுதும் பருகி வியந்து நிற்கிறான்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
அருணந்திசிவம் செய்த நூல்கள்
சிவஞானசித்தியார், இருபா இருபஃது