ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – தாதை
பொருள்
- தந்தை
- பாட்டன்
- படைக்கும் கடவுள் – பிரமன்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதிதீ தொத்ததே.
கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்
கருத்து உரை
‘திதத்த ததித்த’ என்னும் தாளமானங்களை திருநடத்தால் காக்கின்ற உன்னுடைய தந்தையாகிய சிவபெருமானும், பிரமாவும், இடைச்சேரியில் தயிரை உண்டு பாற்கடலையும் ஆசிசேடனையும் பாயாக் கொண்ட திருமாலும் வணங்குகிற முதல்வனை! தெய்வயானை தாசனே! ஜனன மரணத்துக்கு இடமாய், எலும்பு முதலிய தாதுக்கள் மூடிய பொல்லாத பையாகிய இந்த உடம்பை, தீயில் வேகும் போது, உன்னைத் துதிக்கும் என் புத்தியை உன் அடி இணைக்கு ஆட்படுத்த வேண்டும்.
விளக்க உரை
- புலமை விளையாட்டு / சொல்விளையாட்டு – செய்யுள் இயற்றுவோர் தம் சொல்லாண்மையைக் காட்டக் கையாளும் ஒரு வகை உத்தி.
- இந்த பாட்டிற்கு உரை / பொருள் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்றதாக வரலாறு.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
மெய்கண்டார் செய்த நூல்
சிவஞான போதம்