ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பேதகம்
பொருள்
- மனவேறுபாடு
- தன்மை வேறுபாடு
- வஞ்சனை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஆதலின் நமது சத்தி அறுமுகன், அவனும் யாமும்
பேதகம் அன்றால், நம்பொற் பிரிவிலன் யாண்டும் நின்றான்
ஏதமில் குழவி போல்வான், யாவையும் உணர்ந்தான், சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்
கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து உரை
ஆகையினால் நம்முடைய சக்தியே அறுமுகன்; அவனும் யாம் போல் மனவேறுபாடு தன்மை இல்லாமல் நம்மைப் போல் எப்பொழுதும் எவ்விடத்திலும் பிரிவு இல்லாதவனாகி நிற்கும் குணம் உடையவன்; குற்றம் இல்லாத குழந்தையைப் போன்றவன்; எல்லாப் பொருள்களையும் அதன் தன்மைகளையும் உணர்ந்தவன்; தன்னைப் போற்றுபவர்களுக்கு பெருமை, புகழ், ஞானம் அறிவு, அழியாத வீடு பேறு ஆகியவற்றை அளிக்க வல்லவன்.
விளக்க உரை
- ‘பேதகம் அன்றால் நம்போல் பிறப்பிலன் யாண்டும் உள்ளான்’ – என்று பல இணைய பதிப்புகளில் உள்ளன. மூலத்தில் ‘நின்றான்’ என்பது இருப்பதால் ‘நின்றான்’ எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது. ‘நின்றான்’ என்பது இறந்த காலத்தை குறிப்பதால் ‘உள்ளான்’ எனும் நிகழ் காலத்திற்கு வார்த்தை மாற்றப்பட்டிருக்கலாம். கால வரையறைக்கு உட்படாதவன் என்பதாலும், ‘உணர்ந்தான்’ எனும் சொல் அடுத்து வரும் வரிகளில் வருவதாலும் ‘நின்றான்’ என்பதே சரியான சொல்லாகும். எனவே அவ்வாறு வார்த்தை மாறுதல் தேவை இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
- அன்றேல் – அல்லதேல்.
- யாண்டும் – எப்பொழுதும், எவ்விடத்தும்
- குழவி – குழந்தை
- ஏதம் – துன்பம், குற்றம், கேடு, தீமை
- போதம் – ஞானம், அறிவு
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
மனவாசகம் கடந்தார் செய்த நூல்
உண்மை விளக்கம்