ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – உன்னுதல்
பொருள்
- தியானித்தல்
- நினைத்தல்
- பேசவாயெடுத்தல்
- எழும்புதல்
- முன்னங்கால்விரலையூன்றி நிமிர்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி யாகியவீசன் றொன்மறை
பன்னியபாட லாடலன்மேய பரங்குன்றை
உன்னியசிந்தை யுடையவர்க்கில்லை யுறுநோயே.
தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
முறுக்கேறிய சடைமுடியில் பொன் நிறமுடைய கொன்றை மலர், ஒளி பொருந்திய பொறிகளை உடைய பாம்பு ஆகியவற்றை அணிந்து ஜோதி வடிவினனும், பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடிஆடுபவனுமாகிய ஈசன் எழுந்து அருளும் திருப்பரங்குன்றை எண்ணும் சிந்தை உடையவர்க்கு வருத்தம் தரும் நோய்கள் எவையும் இல்லை.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
சிவஞான போதத்தின் சார்பு நூல் எது?
சிவப்பிரகாசம்