ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பெட்டு
பொருள்
- விரும்பப்பட்டது – பெள் +டு
விளக்க உரை
அவன் நிச்சயமா ஜெயிப்பான், என்னா பெட்டு கட்ற.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித் துள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினான் தன்னையும் என்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – திருமூலர்
கருத்து உரை
இந்த இடம், அந்த இடம் என்கின்ற பேதமின்றி, எல்லா இடங்களுக்கும் விரும்பிச் சென்று, அனுபவம் எதுவும் இல்லாமல் எனது பிடிவாதக் கொள்கையினால் வலிந்து நான் விரும்பியபடி பிதற்றிக் கொண்டும், திரிந்து கொண்டும் இருந்த என்னை சிவகுரு எதிர்ப்பட்டு என்னிடம் உள்ள அகக் குற்றங்களை எல்லாம் அகற்றி என்னைத் தூயவனாக்கி, என்னையும் தன்னையும் தராசுத் தட்டுக்களில் உள்ள பொருட்களைப் போல வைத்து கொடுத்தும், கொண்டும் மாற்றிக் கொண்டான். என்னிடம் உள்ள குற்றங்களை நீக்கியமையால், நாங்கள் இருவரும் ஒத்த வினையுடைய பொருளானோம். அதனால் கொடுத்துக் கொள்ளும் வாணிபம் தடையின்றி முடிந்தது.
விளக்க உரை
- ஒக்க மாற்றினான் – ஒவ்வாதவனையும் மாற்றினான்
- வாணிபம் வாய்தது – பொருந்தா வாணிபம்
- வட்டமதொத்தது – அவ்வாறு இருப்பினும், குற்றம் நீங்கின்மையால் அது கொள்ளத்தக்கதது ஆயிற்று.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
சிவஞான சித்தியாரின் முதல் நூல்
சிவஞான போதம்