ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – வாதாட்டம்
பொருள்
- தருக்கம் செய்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி – குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி
குதம்பைச் சித்தர்
கருத்து உரை
முக்திக்கு ஆதாரமாக இருக்கும் இறையின் பாதம் முதல் திருமுடி வரை கண்டவர்களுக்கு பிறரோடு தர்க்கம் எனப்படும் சண்டைகள் எதற்கு?
விளக்க உரை
- பாதாதி கேசமாக இறைவடிவம் காணுதல் இயல்பு
- இறைவடிவம் கண்டபிறகு பிறரோடு கருத்து வேறுபாடு கொண்டு சண்டையிடுதல் என்பது இறையில் பாதையில் இருந்து நம்மை விலக்கிச் செல்லும் என்பதால் அதை விலக்க வேண்டும் எனும் பொருளில்.
- யோக மார்க்க முறைப்படி, இறை வடிவம் கண்டபிறகு மனதில் எழும் எண்ணங்களும் அதை பற்றிய வினா, விடைகள் எதற்கு அதை விலகக வேண்டும் என்பதுவும் மற்றொரு கருத்து.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
சிவஞான போதத்தின் வழிநூல் எது?
சிவஞான சித்தியார்
(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)