ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – அவா
பொருள்
- பேராசை
வாக்கிய பயன்பாடு
என்ன ஓய், எப்படி இருக்கிறீர்?
நன்னா இருக்கேன், நமக்கு என்ன ஓய், படியளக்க கற்பகாம்பா இருக்கா, அவ திருவடிய அடையறது தவிர என்ன பெருசா அவா இருந்துடப் போறது.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.
கந்தர் அநுபூதி (மனதிற்கு உபதேசம்) – அருணகிரிநாதர்
கருத்து உரை
மனமே! உடல், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம் பொறிகளின் வழியே சென்று வினைகளின் வழி தோன்றும் ஆசைகளை முற்றிலும் ஒழித்து, திருக்கரத்தில் ஒளிவீசும் வேலாயுதத்தை கொண்டு ஞானச் சுடரான வேலை உடைய முருகப் பெருமானின் திருவடிகளை புகலிடமாகப் பெற்று உயர்வு பெற்று வாழ்வாய்.
விளக்க உரை
பஞ்ச இந்திரியங்களின் ஆசைகளை மறுப்பது மட்டும் அல்லாமல் திருவடிகளையும் அடைதல் உயர்வுக்கு வழி எனும் பொருளில்.
குருவருள் துணை நிற்க நடவாதது ஏது?
அந்த மனசு முழுவதும் வருவது கடினம் முழமையாக சரணாகதி ஆட்டத்தால் மட்டும் சாத்தியம்