ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – சீலம்
பொருள்
- அழகு
- குணம்
- வரலாறு
- சீந்தில்
- சுபாவம்
- நல்லறிவு
- அறம்
- நல்லொழுக்கம்
- யானையைப் பயிற்றும் நிலை
- தண்டனை
வாக்கிய பயன்பாடு
சீலம் இல்லாதவன எல்லாம் வச்சி வேல பாத்தா இப்படித்தான் ஆவும்.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
கோல மின்றிக் குணமின்றி நின்னருள்
சீல மின்றிச் சிறியன் பிழைப்பனோ
ஆல முண்டும் அமிர்துரு வாய்வந்த
கால மெந்தை கதிநிலை காண்பதே.
தாயுமானவர்
கருத்து உரை
எம் தந்தையே! நீ பெருங்கடலில் தோன்றிய பெருநஞ்சினை உண்டும், அதனை அமிழ்தாக மாற்றி உலகுகிற்கு உணர்த்திய நின் பெருநிலையினைக் கண்டும், உன்னை அடைதற்குரிய திருவைந்தெழுத்து ஓதுதல், உடலில் திருவெண்ணீறு பூசுதல், சிவமணியை திருக்கோலமாகக் கொள்ளுதல், சிவவொழுக்கங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றை செய்யாமல் அடியேன் பிழைத்து உய்வனோ? (உய்யேன் என்றவாறு)