தருண கணபதி
ஒவியம் : இணையம்
வடிவம் | யானை முகம், எட்டுத் திருக்கரங்கள் |
மேனி வண்ணம் | நண்பகல் சூரியன் போன்ற நல்ல சிவந்த திருமேனி |
திருக்கைகள் | எட்டுத் திருக்கரங்கள் – செழிப்பையும், வளத்தையும் முன் வைத்து ஒவியங்கள் / சிற்பங்கள்
பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு |
பலன் | தியானம் கைகூடுதல் |
மந்திரம்
பாசாங்குசா பூபகபித்த ஜம்பூ
ஸ்வதநதசாலீஷூமபி ஸ்வஹஸ்தை:|
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுக்ஷ்மாந் தருணோகணேச : ||
விளக்கம்
கைகளில் பாசம், அங்குசம், அபூபம்(அப்பவகை), விளாம்பழம், நாவல்பழம், தனது ஒரு தந்தம், நெற்கதிர் மற்றும் கரும்பு ஆகிய இந்த எட்டு பதார்த்தங்களையும் வைத்துக் கொண்டிருப்பவரும், நண்பகலில் விளங்குகின்ற கதிரவனின் ஒளியைக் கொண்டவருமான தருண கணபதி எப்பொழுதும் உங்களைக் காப்பாற்றுவாராக.