ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – துறத்தல்
பொருள்
- கைவிடுதல்
- பற்றற்றுத் துறவுபூணுதல்
- நீங்குதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ
டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே .
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
எந்த விதமான பற்றும் இல்லாமல் விட்டு ஒழிப்பதற்கு அரிதான இவ்வுடம்பை விடுத்துக் கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். அவ்வாறு இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் சென்று வந்து மீண்டும் பூமியில் இறங்கி மீண்டும் பிறப்பேன். அவ்வாறு பிறந்தால் பிறைச்சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகிறது.
விளக்க உரை
- துறக்கப்படாத உடல் – மும்மலங்களின் காரணமாக பற்று இல்லாமல் விட்டொழிக்க எளியதாக இல்லாத உடம்பு..
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
அளவை என்பது என்ன?
பொருள் உண்மையை கண்டறியும் கருவி