ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – சுரும்பு
பொருள்
- வண்டு – ஆண்வண்டு
- மலை
வாக்கிய பயன்பாடு
பாதயெல்லாம் செடி, கொடி வளர்ந்து காடா கெடக்கு; சாக்கிரதையா போ; சுரும்பு ஏதாவது கடிச்சிட, கிடிச்சிட போவுது.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
கருத்து உரை
மரம் தாவுவதில் வல்ல குரங்குகளும் ஏறுவதற்கு கடினமான வகையில் மிக உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களையுடைய மலைப் பக்கத்தில், வண்டுகளாலும் மொய்க்க இயலாத அதிக உயரத்தில் சுடர் விட்டு எரியும் தீயைப் போன்ற நிறமுடைய செங்காந்தள் மலர்களால் ஆன குளிர்ச்சி பொருந்திய பெரிய ‘கண்ணி‘யைத் தலையில் அணிந்த திருமுடியை உடையவன் திருமுருகப்பெருமான்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
கயிலாயத்துக்கு வெளியே வளர்ந்த மரபு எது?
புறச்சந்தானம்