ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – சிட்டர்
பொருள்
- பெரியோர்
- கல்விநிரம்பிய சான்றோர்.
வாக்கிய பயன்பாடு
காஞ்சிபுரம் சிட்டர்கள் நிறைந்த நகரம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே.
தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
தில்லைச் சிற்றம்பலமானது, தேவர்கள் போய்வேண்டும் வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது; ஞானிகள் ஆகிய பெரியோர்கள் வாழ்தற்கு இடமாவது அது. அத்தில்லைச் சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடி அருளும் ஞான மூர்த்தியின் திருவடிகளைக் கைகூப்பித் தொழப்போகும் அப்பெரியோர்களாகிய மெய்ஞ்ஞானியரை, வருத்தி அழிக்க வல்ல காலன் அணுக மாட்டான்.
துக்கடா
சைவ சித்தாந்தம் வினா விடை
இருவகைச் சந்தானங்கள் எவை?
அகச்சந்தானம், புறச்சந்தானம்