ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – துனி
பொருள்
- நீங்கின
- பிணக்கு
- ஊடல்
- ஒரு வித சண்டை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
துனியால் உளந்தளர்ந் தந்தோ
துரும்பில் சுழலுகின்றேன்
இனியா யினும்இரங் காதோநின்
சித்தம்எந் தாய்இதென்ன
அனியாய மோஎன் அளவின்நின்
பால்தண் அருளிலையோ
சனியாம்என் வல்வினைப் போதனை
யோஎன்கொல் சாற்றுவதே.
திருஅருட்பா – 3ம் திருமுறை – வள்ளாலார்
கருத்து உரை
வெகுளி என்னும் குற்றதால் உட்கருவியாகிய மனம் தளர்ந்து சுழல் காற்றில் அகப்பட்ட துரும்புபோல் சுழலுகின்றேன்; இந்தக் குற்றத்தினின்று நீக்குதற்கு நின் அருள் அல்லாது பற்றுக்கோடு இல்லை. அருள் துணை புரிவதற்கு இப்பொழுதாகிலும் நின் திருவுள்ளம் இரங்குமோ? இரங்காது எனில் இது என்ன நியாயம்? என்னளவில் உந்தன் அருள் இல்லையோ? என் வல்வினையின் காரணமாக கற்பிக்கப்பட்டு இந்நிலை ஏற்பட்டதோ? என்னென்று கூறுவேன்.
விளக்க உரை
- மாயையினைப் பற்றி அறிவு சுழலுவதால் உண்மை அறியாமல் உடல் தளர்ந்தது;
- “என் அளவில் நின்பால் தண்ணருள் இலையோ” – எவ்விடத்தும் எவ்வுயிருக்கும் அருள் பெருகிப் பாயும் நின் திருவுள்ளம், என்பால் அஃது இல்லாமல் போயிற்றோ எனும் பொருளில்.
துக்கடா
சைவ சித்தாந்தம் வினா விடை
சந்தானம் என்பது எதைக் குறிக்கும்?
குரு சிஷ்ய பரம்பரை