ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நித்தன்
பொருள்
- அருகன்
- கடவுள்
- சிவன்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை, அம்மை சிவகாம சுந்தரி நேசனை, எம்
கத்தனைப் பொன்னம்பலத் தாடும் ஐயனைக் காணக்கண்
எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றனவே!
பட்டினத்தார்
கருத்து உரை
எனக்கு அம்மையப்பராக ஆனவனை, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அதிபதியாகவும் இருப்பவனை, கடவுளாகிய ஈசனை, சிவகாமி சுந்தரியின் நேசத்திற்கு உரியவனாகவும் இருப்பவனை, அனைத்து உயிர்களுக்கும் கர்த்தாவாக இருப்பவனை, பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடும் ஐயனைக் காணும் கண்கள் எத்தனைக் கோடி யுகம் தவம் செய்து இருக்கின்றனவோ!