ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – பங்கயம்
பொருள்
- தாமரை
- தாமரை வடிவினதாகிய ஓர் ஆயுதம்
- நாரை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பரமனை மதித்திடா பங்கயாசனன்
ஒரு தலை கிள்ளியே யொழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவோம்.
கந்த புராணம் – ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து உரை
தாமரை மலரின் மீது ஆசனத்தைக் கொண்டவனாகிய தேவர் உலகம் சார்ந்தவராகிய பிரம்மா, ஈசனை மதித்திடால் கர்வம் கொண்ட பொழுதினில் ஒரு தலையை கிள்ளி அதனால் பெறப்படும் இரத்தினை கைகளில் கொண்டும் அவர்தம் கர்வத்தை அழித்தும் (அத்துணை கோபம் உடையவராக இருப்பினும்) உயிர்கள் மீதுபரிவும் உடையவராகிய வடுகனைப் போற்றுவோம்.