ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – புயங்கன்
பொருள்
- பாம்பு
- பாம்பணியுடையசிவபிரான்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது ஏத்தும் இடம்; கதிரோன் ஒளியால்
விட்ட இடம்; விடை ஊர்தி இடம்; குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்;
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும்
அட்ட புயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே
தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
கச்சி அனேகதங்காவதம் என்னும் இவ்விடம் பல சிறப்புகளை உடையது. மும்மலங்களின் ஒன்றான மாயை(மயக்கம்) அறுத்தவர்கள் கைகளால் தொழும் இடம் இது. கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். இறைவன் ரிஷப வாகனத்தை ஊர்தியாக கொண்ட இடம். குயில்கள் பேடைகளும் சேவல்களும் ஆடும் இடம். பூத்த மணம் வீசும் மலர்கள்களை உடைய தேவியுடம் அட்டமா நாகங்களை அணிந்த இறைவன் சேரும் இடம்
விளக்க உரை
1.
கதிரவன் தனது ஒளி குன்றிய இடம்.
இறைவன் தன் பேரொளிக்கு முன் கதிரவன் ஒளி மங்கும் என்பது ஒரு கருத்து.
அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் கதிரவன் ஒளி உட்புக முடியாமல் உள்ளது என்பது மற்றொரு பொருள்.
2.
குயிற் பேடை; இளவேனிற் காலத்தே ஓயாது அகவும் இயல்புடையது
3.
அட்டமா நாகங்களை – அட்டமா சித்தி