ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நிரவுதல்
பொருள்
- சமனாதல்
- தீர்தல்
- பரவுதல்
- வரிசையாயிருத்தல்
- சமனாக்குதல்
- குறைதீர்த்தல்
- சராசரி பார்த்தல்
- சரிப்படுத்துதல்
- அழித்தல் .
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அரசுடன் ஆலத்தி ஆகும்அக் காரம்
விரவு கனலில் வியன்உரு மாறி
நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத
ருருவம் பிரம உயர்குல மாமே.
திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – திருமூலர்
கருத்து உரை
அரசு முதலிய சமித்துக்கள், பசுவின் சாணம் பொருந்தப்பட்ட சிவாக்கினியில் வெந்து தனது முந்தைய வடிவத்தை இழந்து உரு மாறிய, அந்தத் திருநீற்றை உடல் முழுவதும் நிரம்ப பூசித் தூய்மையை அடைந்த நல்லோரது உடம்பே பிரம ஞானத்தை அடையும் உயர்ந்த குலத்து உடம்பாகும்.