ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – சட்டுவம்
வார்த்தை : சட்டுவம்
பொருள்
- அகப்பை
- தோசைதிருப்பி
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
சிவவாக்கியர்
கருத்து உரை
சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள் இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வம் என்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது அறியாமையே ஆகும்.
விளக்கம்
அக வழிபாடு முறையை முன்னிருத்துதல் குறித்தது இப்பாடல்
துக்கடா
ஓரெழுத்தொருமொழி – ‘ஒற்றை எழுத்துச் சொற்கள்’ . அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள்.
கு – குவளயம்
கூ – பூமி, கூவுதல், உலகம்
கை – உறுப்பு, கரம்
கோ – அரசன், தந்தை, இறைவன்
கௌ – கொள்ளு, தீங்கு