சிவவாக்கியர்

தத்துவங்கள் அனைத்தும் நிலையாமை என்ற நிலையில்  உருவாகின்றன.

சிவவாக்கியரின் கீழ்க் கண்ட பாடல் அதை விளக்குகிறது.

பாடல்

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நந்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே;
நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!

விளக்கம்

அழகிய வடிவம் கொண்ட தான் விரும்பும் ஒரு பெண்ணை மற்றொருவன் விரும்புகிறான் என்றால் அவனை விடுவேனா, அவனை    வெட்டி விடுவேன் என்று கூறுபவன் இருக்கிறான். அவன் எமன் வாயிலில் விழும் போது நாற்றம் கொண்ட இந்த உடல் மண்ணில்  விழும். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் இருக்கும் வெட்டியானிடம் கொடுத்து விடுவார்கள்.

இதில் பல கருத்துக்கள் அடங்கி உள்ளன.

அழகிய வடிவம் கொண்ட பெண்ணை விரும்புதல் – இயற்கை. அது காமத்துடன் கூடிய மாயையின் காரியம்.

விரும்புவனை வெட்டிவிடுவேன் – ஆணவம்

இறப்பு தீர்மானிக்கப்பட்டது. எனவே அதில் ஆணவம் கொள்ள எதுவும் இல்லை.

எனவே மும்மல காரியம் கொண்டவனுக்கு முக்தி இல்லை. நிலையற்ற எண்ணம் விடுத்து அஃதாவது மும்மலம் நீக்கி இறைவனை நாடச் சொல்கிறது இப்பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

2 thoughts on “சிவவாக்கியர்”

  1. மிக்க நன்றி.

    என் குரு நாதர் துணையும் மட்டுமே எழுதப்படுவை இவைகள்.

    குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள், முற்றிலும் உணர்ந்தப் பின் எழுத இயலாது. எழுத தேவையும் இருக்காது.

    தங்கள் கருத்தினையும் ஏற்க தயாராக இருக்கிறேன்.

  2. வாசகர்களுக்கு தெரியவில்லை என்பதால் இந்த தளத்தை தேடி வந்து படித்தால் தெரிந்த விஷயமும் மறந்துவிடும். புலமையைக்காட்டுகிறேன் என்று உங்கள் அறியாமைத்தான் காட்டுகிறீர்கள். ஆன்மீகம் என்றாலே அலர்ஜி தான் என்று ஆக்கிவிட்டது உங்கள் விளக்கங்கள். நன்றி.

Leave a Reply to Premanathan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!