Category: இளமைகள்
புன்னகைக் பூக்கள்
காயம் படிந்த காயங்கள்
தொடுவானம்
கரையில் நீந்தும் மீன்கள்
மினுமினுப்புகள்
தெருவில் பார்த்துவிட்டு
புழக்கடைக்கு திரும்பிய பின்னும்
தெரிகிறது நட்சத்திரங்கள்.
* பல நேரங்களில் வீட்டின் வாசலில் நட்சத்திரங்களை எண்ணிவிட்டு கொல்லைப் புறத்தில் வந்து சரிபார்த்திருக்கிறேன். மாற்றி அமைக்கப்பட்ட நிகழ்வுகளில் கடந்த காலங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நினைவுகள்.
Click by R.s.s.K Clicks
மீதமிருக்கும் பிரபஞ்சம்
ஆதி நிகழ்வுகள்
விளக்க முடியா காலத்தில்
சொற்களின் பரிச்சயமும்
அதன் பயன்பாடுகளும்
உண்டானது.
விசித்திரம் அறியும் முன்னே
கொட்டிக்கிடக்கும் எழுத்துகள்
குவிந்து தோன்றின.
வார்த்தைகளின் அடுக்குதலை
அறிவித்தான் ஒருவன்.
கலைந்த எழுத்துக்களைக்
கவிதை ஆக்க கற்றுத் தந்தான் மற்றொருவன்.
சுழலும் கலைடாஸ் கோப்பாய்
வார்த்தைகளின் ருசியில்
வண்ணங்களின் வார்ப்புகள்.
வாள் வித்தை காட்ட
வயிறு ஒடுங்கிய ஒருவனை விரும்பி தேர்ந்தேடுத்தேன்.
வித்தைகளுக்கு முன்பான ஒரு தருணத்தில்
விரும்பி கற்றுத் தந்தான் மௌனத்தை.
காலடித் தடயங்களை
அழித்துச் செல்லும் கடல் அலைகளாய் மனம்.
பிறகு சொற்கள் அற்று, வார்த்தைகள் அற்று
மௌனத்தின் பாஷைகள் மட்டும்.
Click by : Bragadeesh Prasanna.