Category: இளமைகள்
புனிதத்துவம்
மௌன நாதம்
வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.
அருகருகே நீயும் நானும்.
அறிதல் பற்றிய வாதங்கள் தொடர்கின்றன.
நிலத்தை அறிய நிலமாக மாறு;
நீர் அறிய நீராக மாறு;
தீ அறிய தீயாக மாறு;
காற்றை அறிய காற்றாக மாறு;
ஆகாயம் அறிய ஆகாயமாக மாறு;
என்று உரைக்கிறாய்.
‘எனில் உன்னை அறிவது எப்படி‘ என்கிறேன்.
என்றைக்கும் ஆன விழி அசைவு காட்டி
புன்னகைத்து
மௌனத்தைக் கற்றுத் தருகிறாய்.
பிறிதொரு நாளில்
வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.
புகைப்பட உதவி : R.s.s.K. Clicks
என்றைக்குமான குளம்
கசியும் நினைவுகள்
உள் ஒலி
ஜன்னல் பிடித்த படி
பூத்தல் – நினைவுகளுக்கு மட்டும்
வரவேற்றலில் மரணம்
ஆற்றுப்படுதல்
ஈர்ப்பு
கானல் காட்சிகள்
அறையில் எழிலினை
எவரும் அறியக்கூடும்.
கலைந்த புத்தகங்கள்,
கசங்கிய ஆடைகள்,
புகை படிந்த ஜன்னல்கள்,
உதிர்ந்த சில சாம்பல்கள்,
முயக்கம் முன்னிருத்திய வீச்சங்கள்,
காலி மதுக் கோப்பைகள்,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பீடித்துளிகள்,
பெரும் பசியினை மறுதலிக்கையில்
‘வாடா சாப்ட‘ என்ற நண்பனின் அழைப்புகள்,
பின் தொடரும் குளியலறை அழுகைகள்,
கள் வெறி கொள்ளும் இலக்கிய பேச்சுக்கள்
இப்படியாகத்தான் கழிகிறது
இன்றைய இருப்பும்.
பிறிதொரு நாளில் தங்குபவன்
இருப்பும் இப்படியாகவே இருக்கலாம்.
Click by : R.s.s.K Clicks
வழிப்போக்கன்
உயிரின் மொழி
வான் விளிம்பு
வாழ்வின் விளிம்பு
கிலுப்தம்
எச்சங்கள்
அலையும் அலைகள்
நம் எதிரே கடல் அலைகள்,
நம்முள் மன அலைகள்.
நம் பிரிவிற்கான காரணங்களை அடுக்குகிறாய்.
கடைசியான கவிதைக் கேட்கிறாய்.
‘அஸ்தமனத்திற்கான பிறிதொரு விடியல்
எப்பொழுது நிகழும் என்கிறேன்‘.
மௌனித்து என் பரிசுப் பொருள்களை
எல்லாம் கொடுத்து
உனக்கானப் பொருள்களை
எல்லாம் எடுத்துச் செல்கிறாய்.
அனைத்தையும் கொடுத்தப் பிறகும்
எச்சங்களாய் மீந்து இருக்கும்
நினைவுகளை என்ன செய்வாய்.
Click by : Chithiram Photography