மகேசுவரமூர்த்தங்கள் 12/25 திரிமூர்த்தி

வடிவம்
 
·    உலகை  படைக்க எடுக்கப்பட்ட வடிவம் ஏகபாதராகத் திருவடிவம்.
·    இதயத்தில் இருந்து ஆயிரத்தில் ஒரு கூறாக ருத்திர், பின் வலப் பாகத்தில் இருந்து பிரம்மன், இடப் பாகத்தில் இருந்து விஷ்ணு.
·    சில இடங்களில் ஏகபாத மூர்த்தியும், திரிமூர்த்தியும் ஒன்றாகவே கருதப்படுகிறது. ஏகபாத மூர்த்தி என்பது சிவன் மட்டும் தனித்து ஒரு காலில் காணப்படும் வடிவம். (யோக நிலையைக் குறிப்பது) திரிமூர்த்தி என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒன்றாக ஒற்றைக்காலில் தனித்து காணப்படும் வடிவம்.
·     இம்மூர்த்திக்கான ஸ்தாபன முறைகளும், பிரதிஷ்டா முறைகளும் மிகக் கடினமாக இருக்கின்றன.
·    வர்ணம்ரக்தவர்ணம்
·    முகம்முக்கண்
·    கரங்கள்வரத அபய ஹஸ்தம் மான் மழு
·    அலங்காரம்ஜடாமகுடம்
·    பாதம்ஒன்று
·    இடுப்புபிரதேசத்திற்கு மேல் தெற்கு வடக்கு பக்கமாகிய இருஇடங்களிலும் முறையாக பாதிசரீரம் உடைய பிரம்மா விஷ்ணு
·    பிரம்மா விஷ்ணு ஒவ்வொருபாதத்துடன் கூடியதாக() அஞ்சலிஹஸ்தத்துடன்
பிரம்ம விஷ்ணுக்களின் அளவானது பெண் சரீரம் போல் சற்று வளைவாக, இரண்டு கைகளும் தொழுத நிலையில் ஒரு காலோடு கூடியவராக.  (கால் இல்லாமலும்)
 
வேறு பெயர்கள்
 
ஏகபாததிரிமூர்த்தி
ஏகபாத திரிமூர்த்தி
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
·   திருமறைக்காடு (வேதாரண் யம்)
·   பிச்சாண்டார் கோயில்(அ) உத்தமர் கோயில், திருச்சி
·   மண்டகப் பட்டு ஸ்ரீ திரிமூர்த்தி குகைக் கோவில்
·   தர்மராஜரதம்(அ)திரிமூர்த்தி குகை, மஹாபலிபுரம்
·   தப்பளாம்புலியூர், திருவாரூர்
·   திரு உத்தரகோசமங்கை
·   திருவக்கரை
·   ஆனைமலையடிவாரம்
·   ஒரிஸ்ஸா, சௌராஷ்டிரம், மைசூர்
·   திரியம்பகேஸ்வர்,நாசிக்
·   திருநாவாய்,திரூர் நகரிலிருந்து தெற்கே 12 கி.மீ., மலப்புறம் மாவட்டம்,கேரள மாநிலம்
·   திரிப்பிரயார் ஸ்ரீ ராமர் கோயில் –  திரிப்பிரயார் ஆற்றின் கரை,கொடுங்கல்லூர்
இதரக் குறிப்புகள்
 
·  சிவபேதம் பத்தையும் கேட்டவர்களில் திரிமூர்த்தி வடிவம் பற்றி கேட்டவர் உதாசனர்
·  அஷ்ட வித்யேச்வரர்களில் (வித்யேச்வரர்: அநந்தர், சூக்ஷ்மர், சிவோத்தமர், ஏகநேத்ரர், ஏகருத்ரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி) திரிமூர்த்தியும் ஒருவர். இவர்கள் மாயைக்கு மேல் சுத்த வித்யைக்குக் கீழிருக்கும் புவனவாசிகள் என்கின்றன ஞானநூல்கள்.
·  நவராத்திரியின் போது இரண்டாம் நாளளில்  மூன்று வயதுள்ள பெண்ணை திரிமூர்த்தி என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும். இப்பூஜை அறம், பொருள், இன்பம், தானியம் ஆகியவை கிடைக்கச் செய்யும். பெயரன், பெயர்த்தி என பரம்பரையும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்
·  உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் த்ரீமூர்த்தி ஸ்தாபன விதி –  அறுபத்தி ஒன்றாவது படலம்.

புகைப்படம் : வலைத்தளம்

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!